3/28/2019

பதின்நான்கு வருடங்களின் பின் உலகநாடக தின விழா

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரால் பதின்நான்கு வருடங்களின் பின் உலகநாடக தின விழா   Image associée 
நுண்கலைத்துறை தமது கற்றல்ச் செயற்பாட்டை மாணவர் மையம் நின்று கற்று அதன் மூலம் கற்றல் பேறுனைக் காத்திரமாக வலுப்படுத்தவும் பிரயோகிக்கவும் முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக, பாரம்பரிய அரங்கச் செயற்பாடுகள், படச்சட்ட மேடையை மையப்படுத்திய நவீன நாடக மேடையேற்றங்கள், சிறுவர் நாடகம் மற்றும் பின் நவீனத்துவம், பின் காலனித்தும் சார்ந்த புதிய எண்ணக்கருகள் கோட்பாடுகளின் உருவாக்கம் என்பன நடைபெற்று வரும் சூழலில் படச்சட்ட மேடை மைய நவீன நாடகங்கள் மார்ச் 27, 2019 அன்று காத்திரமான நாடகங்களுடன் கொண்டாடப்பட்டன. 
நுண்கலைத்துறையில் உலக நாடக தின விழா 1998 இல் ஆரம்பமாகி 2005 வரையும் நடைபெற்றது. இதன்போது இருந்த தலைவர்கள் சிறப்பாகச் செய்து முடித்தனர். பின்னர் 2019 மார்ச் 27 அன்று திரு. சு.சந்திரகுமாரின் முழு முயற்சியால் அதனை மீளவும் பல்கலைக்கழக நிருவாகத்தினரின் ஒத்துழைப்போடு துறையின் விரிவுரையாளர்களின் இணைப்பாக்கத்தில் இனிதே நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கே.இ.கருணாகரன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக திருமலை வளாக முதல்வர் பேராசிரியர் வி.கனகசிங்கம் அவர்களும், கலைகலாசார பீடாதிபதி திரு.மு.ரவி அவர்களும், விஞ்ஞான  பீடாதிபதி பி.பிரதீபன் அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் திரு அ.பகீரதன் அவர்களும், பேரவை உறுப்பினர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும், கலைகலாசார பீட பதில் பதிவாளர் திருமதி ஐனாபா மு.ச.ஜ மும்தாஜ் சமீம் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் அவர்களும், கலந்து சிறப்பித்தனர்.

0 commentaires :

Post a Comment