யுத்தகாலங்களில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் படுகின்ற துன்பங்கள் சொல்லிமாளாதவை. யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகின்றது. அதன்பின்னரான ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் சர்வதேசம் நமக்கு நீதி வழங்கும் என்று ஜெனிவா நோக்கிய எமது கவனங்கள் திசை திருப்பப்படுகின்றன.
கடத்தப்பட்டோர்,கைது செய்யப்பட்டோர், கொலைசெய்யப்பட்டோர் என்று இழந்து போன சொந்தங்களை எண்ணி அவர்களை பறிகொடுத்தோர் கொண்டிருக்கும் துன்பங்களையும் துயரங்களையும் மீள மீள புதுப்பிப்பதும் ஒவ்வொரு வருடமும் வீதிக்கு இறங்கி நீதி கேட்பதுமாய் காலங்கள் கரைந்தோடுகின்றன.
"இம்முறை நிச்சயம் ஜெனிவா கைகொடுக்கும்" என்கின்ற என்று அரசியல் பித்தலாட்டக்காரர்களால் ஊட் டப்படுகின்ற நம்பிக்கைகள் ஒவ்வொரு வருடமும் கானல் நீராக போய் விடுகின்றன..
அந்தவகையில் வழமைபோல இம்முறையும் கிழக்கு வடக்கு தழுவிய ஆர்ப்பாட்டங்களும் நடந்தேறியுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வடக்கு மாகாணசபையை சீரழித்த சும்மா முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னையும் தனது புதிய கட்சியையும் கிழக்கில் அறிமுகப்படுத்த களமிறங்கியுள்ளார்.
இவர் உண்மையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் மீது உண்மையான கரிசனை கொண்டுள்ளாரெனின் தனது ஆட்சிகாலத்தில் வடக்கில் அவர்களுக்காக என்ன செய்தார்?
அவர்களது உறவினர்களின் துயர் துடைக்க எத்தகைய அபிவிருத்திகளை செய்தார்?
தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்து வடமாகாண சபையூடாக இறுதி யுத்தத்தில் காணாமற்போனோர் எத்தனை பேர் என்கின்ற எத்தகைய தரவுகளை திரட்டினார்?
இவற்றில் எதுவுமே செய்யாது இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்ற இந்த மனிதனை நம்பி தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஓணான் குழு அரசியல் மீது இருக்கின்ற வெறுப்பில் சிலர் "இவர்தான் தலைமைக்கு தகுதியானவர் "
என்று புதிய கண்டுபிடிப்பினை செய்கின்றனர்.
அதுவும் ஒரு அடிமைப்புத்தி, ஒரு மாயை என்பதை இன்று நாம் உணராவிடின் எதிர்காலம் நமக்கு அதை உணர்த்தும். அப்போது இன்னும் பல பத்து வருடங்கள் கடந்திருக்கும்.
0 commentaires :
Post a Comment