மட்டக்களப்பு - நொச்சிமுனையிலுள்ள உல்லாச விடுதியொன்றுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கக் கூடாதெனத் தெரிவித்து அக்கிராம மக்கள்இ இன்று (20) காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள மதுவரித் திணைக்களத்துக் முன்னால் ஒன்றுகூடிய அம்மக்கள் மதுபான அனுமதிப்பத்திரத்துக்கு எதிரான சுலோகங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள “171ஏ” எனப்படும் நொச்சிமுனை கிராமத்தின் கலைமகள் வீதியில் அமையப் பெற்றுள்ள உல்லாச விடுதியொன்றில் மதுபான விற்பனைக்காக அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் இந்த உல்லாச விடுதிக்கு எந்தவொரு மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரத்தையும் வழங்கக் கூடாதெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.
தமது கிராமத்தின் எதிர்கால சந்ததியினரையும் பாரம்பரியத்தையும் சீரழிக்கக் கூடாதெனவும் கோவில் பள்ளிவாசல் பாடசாலை அமையப் பெற்ற சூழலில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதைத் தாம் எதிர்ப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இதன்போது கல்லடி மதுவரித் திணைக்கள உயரதிகாரியைச் சந்தித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது மகஜரைக் கையளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலயங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

0 commentaires :
Post a Comment