மட்டக்களப்பு, மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டைக் கண்டித்து, முச்சக்கர வண்டிச் சாரதிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு கறைபூசுகிறாரா முதல்வரென மட்டக்களப்பு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஆட்டோ சாரதி ஒருவரினால் பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தியானது தமக்குக் கிடைத்திருப்பதாகவும், குறித்த சாரதியினது தொலைபேசி இலக்கம் கிடைத்திருப்பதாகவும் கருத்துத் தெரிவித்திருக்கும் முதல்வர், கைது செய்வதில் தாமதம் ஏற்படுவதன் காரணம் குறித்தும் வினவியுள்ளார்.
மட்டு. நகர்ப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடுகள் செல்லாது, மாநகர முதல்வருக்கு முறையிட்டதன் மர்மம் என்னவென வினவிய ஆட்டோச் சங்க உறுப்பினர்கள், இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான நபர்களை பிழைகள் விடுமிடத்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தாமே முன்வரத் தயாராக இருப்பதாகவும், முதல்வரது இவ்வாறான கருத்துக்கள் நகைப்புக்கிடமானதும், ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகவும் அமைகிறது என்று குற்றஞ்சாட்டினர்.
நியதிச் சட்டங்கள் பற்றிப் பேசும் இவர், நாடளாவிய ரீதியில் இலங்கையினுள் நடைமுறைப்படுத்தப்படும் முறைமை தொடர்பாக அறிந்திருப்பது நல்லதெனக் கருத்துத் தெரிவித்துள்ள அவர்கள், ஓர் நிலையத்திற்காக வழங்கப்படும் ஆட்டோவுக்கான தொழில் அனுமதிப் பத்திரம் உலக நாடுகளிடையே வழமையாக நடைமுறைப்படுத்தப்படும் நியதியைத்தான் தாமும் பின்பற்றுவதாகக் குறிப்பிடுவதுடன், தமது சங்க உறுப்பினர்கள் 734 பேருடன், தமது குடும்பம் சகிதம் மொத்தமாக 3,000ற்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதார விடயங்களில் பாதிப்பை உண்டுபண்ணுகிறாரா என கேள்வியெழுப்பியுள்ளனர்.
எமக்கு ஆதரவாகச் செயற்படும் அரசியல் தலைவர்களையும் அரசியல் கட்சிகளையும் கொச்சைப்படுத்தும் மாநகர முதல்வர் (TNA) தாமும் அரசியல் ஊடாகத்தான் இப்பதவிகளைத் தக்கவைத்துள்ளார் என்பதை மறந்து கருத்துத் தெரிவிப்பது, கவலைக்குரிய விடயமே.
ஆட்டோ சங்கத்தின் நடைமுறை வழக்குகளுக்கு மாறாக செயற்படும் சில புதுமுக ஆட்டோ சாரதிகளுக்கு மறைமுகமாக ஆதரவுகளையும், அனுசரணையையும் வழங்கும் இவர், ஒட்டுமொத்த சாரதிகளின் நலனை மறுத்து நிற்பது ஏன் என வினவவும் இவர்கள் மறுக்கவில்லை.
ஆகவே, இவ்விடயத்தில் நியாயமும், நீதியுமானதொரு முடிவு எட்டப்படும் வரை எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமில்லையென ஆட்டோச் சாரதிகளின் நலன்புரிச் சங்கம் சார்பாக மிகவும் உறுதிபடத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment