2/20/2019

தலவாக்கலையில் வீடுகள் கையளிப்பு..

மலைநாட்டு புதிய கிராமங்கள்  உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதிக்கீட்டில்இ தலவாக்கலை தோட்டதில் நிர்மாணிக்கப்பட்ட 20 தனி வீடுகளும் மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் என்பன மக்களின் பாவனைக்காக நேற்று (17) கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள்  உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம்இ மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.உதயகுமார்இ  பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

0 commentaires :

Post a Comment