குப்பை அகற்றுதலும்,
வடிகால் துப்பரவாக்கலும்..
வடிகால் துப்பரவாக்கலும்..
மேற்படி இரு விடயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விடயங்கள்.. எனவே இவற்றை பற்றி ஒன்றாகவே ஆராய வேண்டும்..
குப்பை அகற்றுதல்..
இதில் பல விதமான குப்பைகள் உள்ளது..
1.வீட்டு குப்பை..
2.தொழிற்சாலையில் இருந்த வெளியேறும் குப்பைகள்..
3.இயற்கையாக தினந்தோறும் ஏற்படும் கழிவுகள்.. மரங்களில் இருந்து விழும் குப்பை.. சந்தையில் இருந்து வெளியேறும் கழிவு..
4. இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் குப்பை என பல வகை உண்டு..
கழிவுப் பொருள் முகாமைத்துவத்தில் நீண்ட காலமாக கவனம் செலுத்தாமல் உதாசீனமாக இருந்ததால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை இது! திண்மக் கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தியும், உக்குகின்ற கழிவுகளை சேதனப் பசளையாக்கியும் ஆரம்பத்திலிருந்தே பழக்கப்பட்டிருப்போமானால் இத்தனை நெருக்கடி இப்போது உருவெடுத்திருக்க வாய்ப்பில்லை. சேதனப் பசளைகள் மண்வளத்தை அதிகரிப்பவையாகும். மண்ணுடன் நீண்ட காலம் நிலைத்திருந்து பயிர்களுக்கு பசளையாகப் பயன்படக் கூடியவை. யூரியா போன்ற செயற்கைப் பசளைகளை அதிகளவில் பயன்படுத்தி வியாதிகளை வலிந்து வாங்கிக் கொள்ளும் அவசியமும் ஏற்பட்டிருக்காது.
ஜப்பான், மலேசியா, பிரிட்டன் போன்ற நாடுகள் குப்பைகளை இவ்வாறுதான் முகாமைத்துவம் செய்கின்றன. அங்கெல்லாம் குப்பைகள் விவகாரம் சிக்கலுக்குரியதல்ல.
நாம் இப்போதுதான் பொலித்தீன், பிளாஸ்டிக், கடதாசி, உணவுக்கழிவுகள் போன்றவற்றை தனித்தனியாக வகைப்படுத்தும் பழக்கத்தை ஆரம்பித்திருக்கின்றோம். ஆனால் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்ட இக்கழிவுகளை என்ன செய்வதென்பதையிட்டு இன்னுமே திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. உள்ளூராட்சி நிறுவனங்கள் தடுமாறி நிற்கின்றன.
காலம் தாழ்த்தியே மீள்சுழற்சியைப் பற்றிச் சிந்தித்திருக்கின்றோம். ஆனால் இனியும் அலட்சியமாக இருப்பது உகந்ததல்ல. அவ்வாறிருப்பின் எமது நகரங்களே எதிர்காலத்தில் குப்பை மலைகளாகி விடலாம்.
அண்மையில் நான் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் மாகாணத்திற்கு போகும்போது சில விடயங்களை என்னால் அவதானிக்க முடிந்தது.. இந்த மாகாணம், இந்தியாவின் சிறப்பது நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட இடமாகையினால், அது ஏனைய இந்திய பிரதேசங்களை போலில்லாமல் மிகவும் துப்பரவான இடமாகும்..
இந்த மாகாணத்தின் தலை நகரான"லே"என்னுமிடத்தில் அதன் உள்ளூர் சபையானது எவ்வளவு நேர்த்தியாக செயல்படுகின்றது என்பதை பார்க்கும் போது எனக்கு, ஏன் இப்படி எல்லாம் எங்களால் செய்ய முடியாமல் போனது என்று விளங்கவில்லை..
அங்கு நிர்வாகம் மக்களை தேடி போகின்றதது.. ஒலிபெருக்கியில் தங்கள் வருகையை தெரிவித்து, மக்களை தங்கள் குப்பை கூளங்களை கொண்டுவந்து வாகனத்திற்கு தருமாறு ஊக்குவிக்க படுகின்றனர்..இந்தியாவில் இப்படி ஒரு இடமா என அதிசயிக்க வைக்க பட வைத்த ஒரு ஆச்சரியமான விஷயம் இது..
இதே போன்று எங்கள் ஊரிலும் நடக்க வேண்டும் என்று நான் கனவு கண்டது உண்டு.. அது நிஜமா நடந்து வரும் சாத்திய கூறுகளை என்னால் உணர முடிகின்றது..
வாழ்த்துகள்..நகரசபைக்கு..
இரண்டாவது முக்கிய விடயம்.. வடிகால் வசதி..
அநேகமான நாட்களில் வடிகால்கள்,மிகவும் அசுத்தமாகவும், துர் நாற்றம் வீசுபவையாகவும் உள்ளன..
இவற்றுக்கு விசேடமாக வடிமைத்த தாங்கிகளில்,கடல் நீரை கொண்டுவந்து, வடிகால்களை கிராமமாக களுவுவதன் மூலம் அசுத்தங்களை தேங்க விடாது தடுக்கலாம்..அத்துடன் உப்பு தண்ணீராகையினால் நுளம்பு பெருக்கமும் இல்லாது போகும்.. இதை ஒரு பரிசோதனை முறையாக நாங்கள் முயன்று பார்க்கலாம்..
நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னால் தலைவர் ஒருவர் எமக்கு நகரசபை தலைவராக கிடைத்தது ஒரு பெரும் நன்மை.. அவர் தொடர்ந்தும் நகரத்தின் முன்னேற்றத்திக்கு ஓயாது உழைப்பார் என்ற நம்பிக்கையும் உள்ளது.
நன்றி முகநூல் டாக்டர் கெமச்சந்திரா
0 commentaires :
Post a Comment