1/16/2019

வாழைச்சேனை- சிறுவன் கொலை

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய சனூஸ்தீன் முகம்மட் சகீர் எனும் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களாலேயேஇ மீராவோடை ஆற்றங்கரைப் பகுதியில் வைத்து மேற்படி சிறுவன் காட்டுமிராண்டித்தனமாக அடித்தும் கூரிய ஆயுதத்தால் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனைத் தாக்கிய இரு இளைஞர்களும் ஓட்டோவில் ஏற்றிக் கொண்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக  வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லையெனத் தெரிவித்த வாழைச்சேனைப் பொலிஸார் தப்பியோடிய இளைஞர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
»»  (மேலும்)

அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல்

அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.Résultat de recherche d'images pour "ltte"
வடமத்திய மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமனினால் குற்றவாளிகளுக்கு இன்று இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது, தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக பிரதிவாதிகள் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் பிரகாரம், அவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், சங்கானை பகுதியை சேர்ந்த பி.அரவிந்தன் மற்றும் ராசவல்லன் தபோரூபன் அகியோருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் விமானப்படையின் பிரபல உறுப்பினர்களாவர்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களுக்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அதிகாலை அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
வான்வழித் தாக்குதல் மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குல் என்பன நடத்தப்பட்டன.
இதன்போது, இலங்கை பாதுகாப்பு படையின் 14 பேரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டுதாரிகள் 21 பேரும் கொல்லப்பட்டனர்.
அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் சுமார் 400 கோடி ரூபாவிற்கும் அதிக சேதம் ஏற்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

1/15/2019

தலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும். பாகம் -இரண்டு கலாநிதி.சு.சிவரெத்தனம்-மட்டக்களப்பு

(கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார பீட ஆய்விதழான 'நெய்தல்' டிசம்பர் 2016, தொகுதி - 8இல் வெளிவந்த  கலாநிதி  சு.சிவரெட்ணம் அவர்களின் கட்டுரை.)
தலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும்.பாகம் -இரண்டு 


இலங்கையின் வடகிழக்குப் பிரதேசங்களின் சமூக அமைப்பில் இரு பிரதான சமூக அமைப்புக்கள் முக்கியம் பெறுகின்றன.Résultat de recherche d'images pour "NORTH LANKA"
1. மட்டக்களப்புச் சமூக அமைப்பு
2. யாழ்ப்பாண சமூக அமைப்பு
இவை ஒவ்வொன்றும் அவ்வாறு குறிப்பிடுவதற்கான வேறுபட்ட வாழ்க்கை முறையினையும் நம்பிக்கைகளையும் நடத்தைகளையும் கண்ணோட்டங்களையும் கொண்டவைகளாகும். ஆயினும் இவ்விரு சமூக அமைப்பிலும்; பிராமணியம் அதிகாரத்துவ சாதிகிடையாது. மட்டக்களப்பு சமூக அமைப்பில் முக்குவரும் யாழ்ப்பாண சமூக அமைப்பில் வேளாளரும் அதிகாரத்துவ சாதிகளாக இருக்கின்றனர். இந்த அதிகாரத்தினைக் காட்டுகின்ற முக்கியமான ஆதாரம் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அவர்களுடைய நீதிபரிபாலனத்துக்காகத் தொகுக்கப்பட்டு நடைமுறைப்படுதட்தப்பட்ட சட்டங்களாகும். அந்தவகையில் மட்டக்களப்பில் முக்குவ சட்டமும் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டமும் இச்சமூகங்களின் தனித்துவங்கள் கருதியும் அவற்றின் வேறுபட்ட வாழ்க்கைமுறையினைக் கருதியும் தொகுக்கப்பட்ட சட்டங்களாகும்.
மட்டக்களப்புச் சமூக அமைப்பு
மட்டக்களப்புச் சமூகத்தின் சாதிகள் பற்றி விபரிக்கும் மட்டக்களப்பு மான்மியம் 22 சாதிகள், அச்சாதிகளுக்குரிய குலவிருதுகள், தெய்வங்கள், தொழில்கள் என்பன பற்றி; கூறி இவ் 22 சாதிகளில் 9 சாதிகளையும் புதிதாக 8 சாதிகளையும் சேர்த்து மொத்தம் 17 சாதிகளை சிறைக்குடிகளாக வரையறுக்கின்றது. எனவே மட்டக்களப்பு மான்மியம் கூறும் மொத்தச் சாதியினர்  30 ஆகும். இந்த 30 சாதிகளில் 13 சாதிகள் சிறைக்குடிகளல்லாத சாதிகளாகவும் 17 சிறைக்குடிகளாகவும் இருக்கின்றன. ஆயினும் இந்தப் பதினேழு சாதிகளும் 13 சாதிகளுக்கும் சேகவம் செய்யவேண்டுமென்பதில்லை என்பதை மான்மியம் பின்வருமாறு கூறுகின்றது.
காலிங்ககுலம், படையாட்சிகுலம், பணிக்கனார் குலம், உலகிப்போடி குலம் இவர்களுக்கே இந்தச் சிறைகள் ஊழியம் செய்தாலொழிய மற்றவர்களுக்குச் செய்யக்கூடாதென்று பூபாலவன்னிமை மலையமான் தீர்த்தபடி பதினேழு சிறைகளுக்கும் கட்டளை பண்ணியது (நடராசா.F.X.C. 1998.பக்.103)
இங்கு குலம் என்பது சாதியை அன்றி குடியைக் குறிக்கின்றது. ‘குடி’ என்பது சாதிகளுக்குள் இருக்கும் குடும்ப முறையாகும்.
காலிங்காகுலம் வெள்ளாளரிடையேயுள்ள ஒரு குடி, பணிக்கனார் குடியும் உலகிப்போடி குடியும் முக்குவரிடையேயுள்ள இரு குடிகள். எனவே இப் பதினேழு சிறைக்குடி ஊழியங்களும் முக்குவருக்கும் வெள்ளாளருக்குமே உரியது என்பது தெளிவு. இவ்வண்ணம் கூறும் மட்- மான்மியப்படி 3 விதமான சாதிப்பரிவுகளைக் காணுகிறோம்.
1. சிறைக்குடிகளின் ஊழியம் பெற்று வாழ்ந்த – அதிகார அடைவின் முதன்மை ஸ்தானம் பெற்ற (முக்குவர், வெள்ளாளர்) சாதியினர்.
2. சிறைக்குடிகளின் முழு ஊதியம் பெறாது வாழ்ந்த 2வது ஸ்தானம் பெற்ற (கரையார், வேடுவர், துலுக்கர் முதலிய) சாதியினர்.
3. 17 சிறைக்குடிகளாக அமைந்து ஊழியம் பெற்ற சாதியினர். (மௌனகுரு.சி.1998.பக்.89)
நாம் முன்னர் குறிப்பிட்டபடியே முக்குவர், வேளாளர், ஆகியோரைச் சமூகத்தின் தலைமைச் சாதியினராகவும், தட்டார், கொல்லர், கைக்குளவர், கரையார் ஆகியோரை (ஊழியம் செய்யாத) இரண்டாம் சாதியினராகவும் அம்பலர், வண்ணார், பறையர் ஆகியோரை (ஊழியம் செய்யும்) தாழ்நிலையிலுள்ள சாதியாகவும் கொண்ட ஒரு சமூக அமைப்பு மட்டக்களப்பிற் தொடர்ந்து நிலவியது என்பதை S.O.கனகரெத்தினத்தின் கூற்றும் தெளிவுபடுத்துகிறது. (மௌனகுரு.சி.1998.பக்.90)
மட்டக்களப்பு மான்னமியம் 30 சாதிகள் 17 சிறைக்குடிகள் பற்றிக்கூறினாலும் இன்று இவற்றுள் பெருமளவான சாதிகளின் பொருளாதார அடித்தளமும் அவர்களின் உற்பத்தி உறவுகளும் மாற்றமடைந்ததன் காரணத்தினாலும் அகமணமுறையில் ஏற்பட்ட நெகிழ்ச்சித்தன்மையினாலும் இன்று மிகச் சில சாதிகளே நடைமுறையிலுள்ளன. இவற்றை இரண்டு வகையாகக் கூறலாம்.
1. ஊழியம் செய்யாத சாதிகள் (முக்குவர், வெள்ளாளர், சீர்பாதக்காரர், கரையார், பொற்கொல்லர்) இவர்கள் தங்களுக்கான வாழ்விடங்களையும் நிலபுலங்களையும் கொண்டவர்கள். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இவர்களிடம் அகமணமுறையில் நெகிழ்ச்சித்தன்மை ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
2. ஊழியம் செய்யும் சாதிகள் ( வண்ணார், அம்பட்டர், பறையர்) இவர்கள் ஆரம்பத்தில் தங்களுக்கான வாழிடங்களை ஊழியம் செய்யாத சாதியினரைச் சார்ந்து வாழ்ந்து அவர்களுக்கு ஊழியம் செய்து கடும் சுரண்டலுக்கும் சமூக ஒடுக்கதலுக்கும் உள்ளானவர்கள். இன்று பொருளாதார ரீதியாக இவர்கள் முன்னேறிய போதிலும் ஊழியம் செய்யாத சாதிகளைப் போன்று பூர்வீகமாக தங்களுக்கென்று தனியான பல கிராமங்களைக் கொண்டு சமூக அதிகாரம் மிக்கவர்களாக இல்லை. அத்துடன் இன்றும் (பலர் தங்களுடைய குலத்தொழிலை விட்டிருந்த போதிலும்) ஊழியம் செய்பவர்களாகவே அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். இதன் காரணத்தினால் இவர்களிடத்தலான அகமணமுறை மாற்றமின்றி பின்பற்றப்படுகின்றது.
எனவே மட்டக்களப்பைப் பொறுத்தளவில் இன்று தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பவாகள் மேலே குறிப்பிட்ட ஊழியம் செய்யும் சாதிகளான வண்ணார், அம்பட்டர், பறையர் என்போர்களுடன் வெளியில் இருந்து வந்து இங்கு ஊழியம் செய்து தற்போது அரச அலுவலகங்களில் குறிப்பாக பிரதேச சபை, நகரசபை, மாநகரசபை என்பவற்றில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களாகவும் செருப்புத்தைப்பவர்களாகவும் வாழும் அருந்ததியினரும் உள்ளடங்குகின்றனர். இவர்களையே மட்டக்களப்பின் ‘தலித்’ மக்கள் எனக் குறிப்பிடலாம்.
யாழ்ப்பாண சமூக அமைப்பு
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று யாழ்ப்பாண சமூக அமைப்பு மட்டக்களப்புச் சமூக அமைப்பிலிருந்து வேறுபட்டதாகும். இந்த வேறுபாடானது நிலவுடமை மட்டும் சார்ந்தது பேராசிரியர்.கா.சிவத்தம்பி சமூக அதிகார நிலையினைப் பொறுத்து யாழ்ப்பாணத்து சாதிக்குழுக்களை மூன்று வகையாகப் பிரிக்கின்றார்.
1. உயர் சாதியினர் (வெள்ளாளர், அகம்படியார், மடப்பள்ளியார்)
2. உயர் சாதியல்லாதார் (நட்டுவர், செட்டியா, சேணியர், கைக்கோலியர்,தட்டார்,கொல்லர், திமிலர்,முக்குவர் போன்றோர்)
3. குடிமக்கள் (கோவியர், நளவர்,பள்ளர்,சாண்டார்,சிவியார்,)
சிவத்தம்பி அவர்களினால் குறிப்பிடப்படும் குடிமக்களை விட அம்பட்டர், வண்ணார், பறையர், போன்றோரும் குடிமக்கள் என அழைக்கப்பட்டனர் என ‘குடிமக்கள்’ என்ற கட்டுரையில் க.அருமைநாயகம் குறிப்பிடுவதாக பரம்சோதி தங்கேஸ் கூறுகின்றார். அத்துடன்,
கெனத் டேவிட் யாழ்ப்பாணச் சாதியினை உயர் சாதி (High Cast), நல்ல சாதி (Good Cast), குறைந்த சாதி (Low Cast) என மூன்றாகப் பகுக்கின்றார். இப்பகுப்பின் அடிப்படையில் பிராமணர், சைவக்குருக்கள், வெள்ளாளர், கோவியர், சைவச் செட்டி ஆகிய சாதிக்குழுக்களை “உயர்சாதியாகவும்”ஆச்சாரி, தட்டார், கைக்குழார், சேணியர், சாண்டார், முக்குவர், திமிலர், பண்டாரம், நட்டுவர், கரையார், தச்சர், கொல்லர், குயவர், ஆகிய குழுக்களை நல்லசாதியாகவும் நளவர், பறையர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், துரும்பர் ஆகிய குழுக்களை குறைந்த சாதியாகவும் பகுக்கின்றார். (மேற்கோள்,தங்கேஸ் பரம்சோதி, 2013,பக்.19)
கெனத் டேவிட்டின் யாழ்ப்பாணச் சாதிகள் பற்றிய பட்டியலை மேற்கோள்காட்டி, பிறைன் ஃபாபன்பேக்கர் யாழ்ப்பாணச் சாதியில் ஏழு சாதியினரை மட்டுமே குடிமக்களாகக் குறிப்பிடுகின்றார். தச்சர், தட்டார், கொல்லர், குயவர், வண்ணார், அம்பட்டர், பறையர், ஆகியோர் அக்குடிமக்களாவர்.(மேலது.பக்.20)
எனவே இங்கு ஒருத்தரால் குடிமக்களாக குறிப்பிடப்படுபவர் மற்றவரினால் உயர்சாதியாக குறிப்பிடப்படுவதனையும் ஒருத்தரால் குடிமக்கள் அல்லாதவர்களாக குறிப்பிடப்படுபவர்கள் இன்னொருத்தரால் குடிமக்களாக குறிப்பிடப்படுவதiயும் காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு யாழ்ப்பாணச் சாதியமைப்புப் பற்றி ஆளுக்கு ஆள் வேறுபட்ட எண்ணக்கருத்துக்களைக் கொண்டவர்களாக இருப்பது யாழ்ப்பாண சாதியமைப்புப்பற்றிய சரியான தெளிவினை பெற்றுக்கொளவதற்கு தடையாக இருப்பதுடன் அதன் சிக்கல் தன்மையினையும் காட்டுகின்றது. இருந்த போதிலும் யாழ்ப்பாண சமூகத்தில் ‘பஞ்சமர்’ என்கின்ற நளவர், பள்ளர், பறையர், அம்பட்டர், வண்ணார் எனும் ஐந்து சாதிகளே மிகவும் தாழ்த்தப்பட்டோர்களாகவும் ஊழியம் செய்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள் என்கின்ற யதார்த்தம் மறுக்கப்படமுடியாதது ஆகும்.
எனவே பஞ்சமர் எனும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கும் ஐந்து சாதிகளையுமே யாழ்ப்பாணத்தில் ‘தலித்’ மக்கள் எனக் குறிப்பிட முடியும்.
மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சாதியமைப்பு பொதுவான அம்சமாக இருந்தபோதிலும் அதன் அதிகாரப்படிநிலையிலும் அந்த அதிகாரத்தினை பேணுகின்ற தன்மையிலும் வேறுபட்ட தன்மையினைக் காணலாம். அதாவது மட்டக்களப்பில் முக்குவர் அதிகாரப்படிநிலையில் உயர்வான இடத்தைப் பெறுகின்ற அதேவேளை யாழ்ப்பாணத்தில் அவர்கள் கீழான இடத்தில் இருப்பதையும் மட்டக்களப்பில் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பவர்களை விட யாழ்ப்பாணத்தில் மேலும் இரு சாதிகள் இடம்பெறுவதோடு சாதிக்குள் சாதி என்கின்ற உபபிரிவுகளும் காணப்படுவதும் மட்டக்களப்பில் சாதிக்குள் சாதி என்கின்ற உபபிரிவுகள் இல்லாமலிருப்பதும் அதிகாரப்பேணுகை நெகிழ்ச்சித்தன்மையுடையதாக இருக்க யாழ்ப்பாணத்தில் கடும் இறுக்கமானதாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
யாழ்ப்பாண சாதியமைப்பின் இறுக்கத்தன்மைக்கும் அதன் அதிகாரப்படிமுறைக்கும் யாழ்ப்பாண நிலமானிய முறையினை காரணமாகக் கொள்வர். அவ்வாறெனில் நிலமானிய முறை நிலவிய தென்னாசிய நாடுகளைத் தவிர்ந்த நாடுகளிலெல்லாம் சாதியமைப்பும் பொதுவான ஒன்றாக இருந்திருக்க வேண்டும் அவ்வாறின்றி இந்தியாவுக்கும் அதனோடிணைந்த தென்னாசிய நாடுகளுக்கும் இது பொதுவாக இருப்பதற்கான அடிப்படைக் காரணம் இது மதத்துடன் கொண்டுள்ள உறவேயாகும். இவ்வாறு கூறும்போது சாதியமைப்பிலும் அதன் அதிகாரப்படிநிலைப் பேணுகையிலும் நிலமானியமுறைக்கு தொடர்பு இல்லை என்று அர்த்தமாகாது. மதமும் அதுசார்ந்த கருத்து நிலையும் அந்தந்தப் பிரதேச நிலமானியங்களுடன் எவ்வாறு செயலாற்றியிருக்கின்றது என்பது முக்கியமானதாகும். இந்த நிலையில் நின்று நோக்கும் போது மட்டக்களப்பு, யாழ்ப்பாண நிலமானிய முறைகளையும் அவற்றின் கருத்தநிலைகளுக்குமான வேறுபாட்டினை துல்லியமாக அடையாளம் கண்டு கொள்ளமுடியும். இந்த வேறுபாட்டின் நிலை இப்பிரதேச சாதியமைப்பிலும் அதன் அதிகாரப் பேணுகையிலும் தெரிவது தெளிவாகின்றது. யாழ்ப்பாணத்து நிலமானிய முறை பற்றியும் அதன் கருத்து நிலை பற்றியும் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுவது முக்கியமானதொன்றாகும்.
யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பு விவசாய மேன்மையடிப்படையில் நிறுவப்பட்டது. குடியேறிய நாள் முதல் அந்நியராட்சி வரை விவசாய நிலச் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் வெள்ளாளரே. விவசாயப் பொருளாதார அடிப்படை காரணமாகவே குடிமக்கள் என்ற கோட்பாடு தோன்றிற்று. விவசாயத் தொழிலாளர்கள் குடிமக்களாயினர். நிலவுடமைமைச் சமுதாயமாகவே இது இயங்கிவந்தது. யாழ்ப்பாணத்து அரசின் தோற்றத்தை ஆராயும் பொழுது பிரதேச நிலவுடமையாளரிடையே மன்னன் சிறந்த நிலையை எய்திருந்தான் என்பது தெரியவரும். நிலவுடமை ஆட்சிக்குள்ள பன்முகப்படுத்தப்பட் அதிகார நெறி (Decentralised Authori) காரணமாக நிலவுடமையாளரே அதிகாரிகளாகவுமிருந்தனர். யாழ்ப்பாணப் புவியியலமைப்புக் காரணமாக பிறதொழில்களும் அங்கு(அந்தப் பூர்வீக உற்பத்திச் சாதன நிலையில்) வளரமுடியவில்லை. இதனால் விவசாய நிலவுடமையாளர் மிக முக்கிய இடத்தைப் பெற்றனர். யாழ்ப்பாணத்து நிலவுடமைச் சமுதாயத்தின் சிறப்பம்சங்களில் மேற்கூறியது முக்கியமானது. (சிவத்தம்பி.கா,2000 பக்.12,13)
இந்த வெள்ளாள மேலாண்மை காரணமாக இன்னொரு கருத்து நிலையும் வளர்ந்துள்ளது. வருண அடிப்படையில் வேளாளரும் சூத்திரரே. சூத்திரரே இறுதிக் குழுமத்தினர். இந்த இக்கட்டு நிலையிலிருந்து விடுபடுவதற்காக இங்கு சூத்திரரை இரு வகையாக வகுத்து நோக்கும் ஒரு முறைமையுண்டு.
சற்சூத்திரர்
அசற்சூத்திரர்
சற்சூத்திரர் என்போர் உயர்ந்தோர். இந்தக் கொள்கையினை யாழ்ப்பாண மட்டத்தில் மிகவும் வற்புறுத்தியவர் ஆறுமுகநாவலர் ஆவார். ( பிரபந்தத் திரட்டு)
மேலும் சற்சூத்திரரின் மேலாண்மைக்கு ஒரு கருத்து நிலை முக்கியத்துவம் வழங்குவதற்காக, வருண தர்மத்திலே பேசப்படாத இன்னொரு குழுமத்தைப்பற்றி (ஐந்தாவது வருணத்தைப்பற்றி) அழுத்திப் பேசவேண்டிய நிலையேற்பட்டது. “பஞ்சமர்” என்னும் கோட்பாடு யாழ்ப்பாணத்திற் சமூக வன்மையுடைய ஒன்றாகும்.” (சிவத்தம்பி.கா, 1993 பக்.15)
நாவலரின் ‘சைவமும் தமிழும்’ என்ற கருத்தாக்கம் சாதாரண மக்களின் வழிபாட்டுமுறைகளையும் தெய்வங்களையும் சமஸ்கிருதநிலைப்படுத்தியதுடன் அதனுடன் சேர்ந்த அதிகாரப்படிநிலை உறவையும் இறுக்கமாக்கியது. அத்துடன் அவர் தன்னுடைய கல்விக் கொள்கைக்கும் நடைமுறைக்கும் பொருத்தமற்றவராகவே இருந்திருக்கின்றார். நாவலர் கல்வி பற்றிக் கூறும்போது,
“கல்வி இளமைதொட்டு மரண பரியந்தம்வரை விடாமற் கற்கவேண்டும்” என்றார். “வித்தியாதானத்திற்கு சமமானதாம் ஒன்றுமில்லை. வித்தியாதானமே எல்லாத் தானத்திலும் சிறந்ததென்பார். இவரால்1848 இல் வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை நிறுவப்பட்டது. சுதேச கல்விக்கு வித்திட்டு கல்விக்கு சிறந்த வரைவிலக்கணம் கூறிய இவரே தேசவழமை சக்திக்குட்பட்டு, சாதிவெறிகாட்டி தமிழ் மக்களில் ஒரு சாராரின் கல்வி உரிமையினை, சமூக உரிமைகளை மறுத்தார். அவர் எழுதிய சைவ வினாவிடைகளில் சாதிவேறுபாடுகள் அப்பட்டமாக காண்பிக்கப்பட்டன, கற்பிக்கப்பட்டது. அவரால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளிலும் கல்வியுரிமை தமிழ் மக்களில் ஒரு சாராருக்கு மறுக்கப்பட்டது. வித்தியாதானத்திற்கு சமமானது ஒன்றுமில்லையென்று கூறிய அவரே சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு வித்தியாதானம் செய்து வைக்க மறுத்தும் இருக்கிறார். இளமை தொட்டு மரணப் பரியந்தம் வரை விடாமல் கற்கவேண்டுமென்று கூறிய அவரே ஒரு சாராரின் கல்விக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்கின்றார்.(சந்திரபோஸ்.எஸ்,1989,பக்.15)
இங்கு நாவலர் கொள்கை ரீதியாக ஜனநாயகபூர்வமான கல்விக்கொள்ளை பற்றிக் குறிப்பிட்டாலும் அவருடைய சமூக நடைமுறை அதிகாரப்படிநிலைத் தன்மையையும் அதன் இந்துத்துவ கருத்துநிலையினையும் பேணுவதினை மையமாகக் கொண்டதாகும். சமூகஜனநாயகமாக்கலைச் செய்ய வேண்டிய கல்வி நிறுவனங்கள் சமூக அநீதியை தேசவழமை அல்லது இந்துத்துவம் என்ற போர்வையில் ஆற்றி வந்திருக்கின்றன. இதனால் சமூகமைப்பினூடான அதிகாரப் பேணுகை வலுவானதாக இருந்திருக்கின்றதுஃஇருக்கின்றது.
இது போன்றே சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவாகளை நாவலரின் பண்பாட்டுப் பேற்றின் அரசியல் வாரிசாக பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுவதோடு இராமநாதன் தொடர்பான மூன்று விடயங்களை சுட்டிக்காட்டுகின்றார்.
1. வெள்ளாளரல்லாத மாணவர்களுடன் வெள்ளாள மாணவர்களுக்கு சமபோசனம் வழங்கவதை எதிர்த்து 1930 இல் சேர்.பொன். இராமநாமநாதன் தேசாதிபதியைச் சந்தித்தார்.
2. உயர்ந்த சாதிகளுக்குரிய இறுதிக்கிரியை முறைகளை உயர்ந்த சாதியல்லாதவர் பின்பற்றியமைக்காக அதனை எதிர்த்தவர்கள் குற்றவாளிகளாகக்காணப்பட்ட போது தேசவழமைப்படி அவர்கள் ஊர்வலத்தை நிறுத்த உரிமையுடையவர்கள் என வாதிட்டார்.
3. சர்வஜன வாக்குரிமை வழங்கப்படக்கூடாது எனக் கருதினார்.
சேர்.பொன். இராமநாமநாதன் போன்றவர்களுடைய இவ்வகைப்பட்ட செயற்பாடுகள் சமூக அதிகாரத்தினை வெள்ளாளத்தலைமை இழந்துவிடக் கூடாது என்கின்ற விடாப்பிடியான போக்கினையே காட்டுகின்றது. இந்த விடாப்பிடியான போக்கு ஒரு சமூக உளவியலாக இன்றுவரை யாழ்ப்பாணமக்களிடம் இருப்பதனை அவர்களுடைய நடத்தையினை அவதானிக்கின்ற போது கண்டுகொள்ளமுடியும்.
தொடரும் 
»»  (மேலும்)

1/14/2019

மட்டு- மேயரே சட்டமென்பது மக்களின் நலனுக்கே

L’image contient peut-être : plein airL’image contient peut-être : 1 personne, plein air

மட்டகளப்பு மாநகரசபை முதல்வர் மற்றும் நிர்வாகிகளே வீதி போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தார்கள் என்ற குற்றசாட்டின் பயனாக உங்களாள் பறிமுதல் செய்யபடும் பொருட்கள் ஒன்றும் மகராஜா குறுப் அன்ட் கொம்பனியினுடைய உற்பத்தி பொருட்கள் இல்லை ஏழை வறிய மக்கள் விவசாயிகள் அன்றாட வயிற்று சோற்றுக்காய் ஆயிரம் கஸ்டத்தின் மத்தியில் நகரத்தை நம்பி வாழும் ஏழைத்தொழிளார்களுக்கு நரகமாக மாறிவரும் மட்டுநகரம் ஏரோட்டி நம் பசி தீர்கும் மக்களுக்கு காரோட இடமில்லை என்று வயிற்றிலடிக்கும் மாநகராட்சி.

 இதுதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்  ஆட்சி நிர்வாகமா காத்தான்குடி ரோட் ரோட்டில்லையா அங்குவியாபாரிகளுக்கு எங்கும் எந்த தடையும் இல்லை. மக்களுக்கும் நேரடியான தொடர்வின் மூலமே நகரத்தினை சிறப்புற செய்யலாம்.

 மாலை 6மணிக்கு பின் மணிக்கூட்டு சந்தியில் தொடங்கி ஆஸ்பத்திரி வரைக்கும் நகரத்தில் சாதாரணமாக ஒரு ரீக்கடை கூட இல்லாத நிலையில் நகரம் தேடி வியாபாரம் செய்யவருவோரையும் துரத்தியடித்து விட்டு நகரத்தை சுடுகாடா மாற்றவா நினைக்கின்றீகள் ?

நன்றி *சியாம் சிவா 
»»  (மேலும்)

1/13/2019

தலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும்.-பாகம் -ஒன்று கலாநிதி.சு.சிவரெத்தனம்-மட்டக்களப்பு

(கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார பீட ஆய்விதழான 'நெய்தல்' டிசம்பர் 2016, தொகுதி - 8இல் வெளிவந்த  கலாநிதி  சு.சிவரெட்ணம் அவர்களின் கட்டுரை.)
தலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும்.பாகம் -ஒன்று L’image contient peut-être : 2 personnes, dont Sivaretnam Sundarappillai, personnes souriantes
கலாநிதி.சு.சிவரெத்தனம்-மட்டக்களப்பு 
தலித்தியம் இந்தியாவில், தமிழகத்தில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு கோட்பாடாகும். இதனை இலங்கைச் சூழலில் புரிந்து பின்பற்ற முடியுமா என்பது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இருந்த போதிலும் இரு தேசங்களிலும் இருக்கும் ஒற்றுமை, வேற்றுமைகளைக் கவனத்தில் கொண்டு தலித்தியத்தினைப் புரிந்து கொள்வதற்கும் புதிய கோட்பாட்டொளியில் வடகிழக்குத் தமிழ் சமூகத்தினைப் புரிந்துகொள்ளவும் இக்கட்டுரை முயற்சிக்கின்றது.
‘தலித்’ எனும் சொல்லாடல் தாழ்த்தப்பட்டவர்களைக் குறிக்கின்ற மராட்டிய சொல்லாகும். அங்கு தாழ்த்தப்பட்டவர்களாக இருந்த மகார், மாங்கு, சாமர், தோர், போன்றோரைக் குறிக்கக்கூடிய பொதுச் சொல்லாக அதாவது மராத்திய அட்டவணைச் சாதிகளுக்குரிய பொதுச்சொல்லாக தலித் என்ற சொல் பயன்பட்டது.
1973 இல் அமைக்கப்பட்ட தலித் பேந்தர் (தலித் சிறுகதைகள்) அறிக்கையில் அனைத்து ஆதிக்கத்துக்கும் எதிராகப் போராடும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர், கூலி உழவர்கள், சிறு உழவர்கள், நாடோடி இனக்குழுவினர், ஆகியோர் தலித் என அடையாளமிடப்பட்டனர்.
ஆக, இங்கு தலித் என்ற மராத்தியச் சொல்லை ஒடுக்கப்பட்ட சாதிகளின் தொகுப்புச் சொல்லாகவும் போராடும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் தொகுப்புச் சொல்லாகவும் பயன்படுத்துகிற இரண்டு பரிமாணங்களையும் காணலாம்.( கேசவன்.கோ,1998,பக்.5)
ஆனால் இன்று இச் சொல் தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் குறிப்பதோடு அம் மக்களின் சுயகௌரவத்தையும் சுயமரியாதையையும் எதிர்ப்பினையும் மீறுகையினையும் குறிக்கின்ற பொதுவான இந்தியச் சொல்லாக இருப்பதோடு ஒரு சமூகக் கோட்பாடாகவும் பல்வேறு செயற்பாட்டுத் தளங்களில் ஊடுபாய்ந்து கொண்டிருக்கும் செயல்நெறியாகவும் இருக்கின்றது.
தென்னாசியாவுக்கு அறிமுகமான பல சமூகவியல் கோட்பாடுகள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோட்பாடுகளாக இருக்க இதுவே இந்திய சமூக சூழலுக்குள்ளால் சமூகத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்குள்ளிருந்து உருவான முதல் கோட்பாடாக அமைந்துள்ளது.
இக்கோட்பாடு தமிழகத்தில் 1990 களில் மிக வேகமாக கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், வரலாறு, ஆய்வியல் என பல்வேறு தளங்களிலும் ஊடுபாய்ந்து தனக்கான அடையாளத்தினையும் இடத்தினையும் கோரி நிற்கின்றது.
பார்ப்பன அதிகாரத்துக்கும் அதன் கருத்தியலுக்கும் எதிரான போராட்டங்கள் காலத்துக்குக் காலம் இடம்பெற்று வந்திருந்த போதிலும் பிரிட்டிஸ்சாரின் ஆட்சிக்காலமும் அவர்களால் வழங்கப்பட்ட ஜனநாயக உரிமைகளும் சாதி எதிர்ப்பு இயக்கங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் உருப்பெறவும் மக்களை அணிதிரட்டி போராடவும் வழிவகுத்தன. இது காலனித்துவத்தினூடாக தாழ்த்தப்பட்டவர்கள் பெற்ற நன்மை எனக் கூறலாம்.
ஜோதிபாஃபுலே, அம்பேத்கார், பெரியார், அயோத்திதாசர் போன்ற சிந்தனையாளர்களினால் தத்துவார்த்த தளம் பெற்ற தாழ்த்தப்பட்டவர்களுடைய பிரச்சினைகள் இன்று தலித் என்ற பேரியக்கமாக வளர்ந்துள்ளது. அம்பேத்கார், பெரியார் போன்றவர்கள் தலித் என்ற சொற்பிரயோகத்தை தொடர்ச்சியாகவோ அல்லது பிரயோகிக்காமலோ விட்டாலும் அவர்களுடைய போராட்டங்களும் சிந்தனைச் செயற்பாடுகளும் தாழ்த்தப்பட்ட மக்களுடையதாகவே அமைந்திருந்தன.
சாதியின் தோற்றம் தொடர்பாக முதல் முதல் விளக்கிய இந்து மதம் கடவுளின் வெவ்வேறு உடற் பகுதிகளிலிருந்து அது தோற்றம் பெற்றதாகவும் அதனைப் பேணி நடப்பது கட்டாயம் எனவும் விளக்கி தெய்வ அங்கீகாரத்தினை சாதியின் நிலைபேற்றுக்கு வழங்கியது. அறிவார்ந்து சிந்தித்த ஃபுலே, அம்பேத்கார், பெரியார் போன்றவர்கள் இந்துத்துவ வாதிகளால் கூறப்பட்ட இந்து மதத்தினையும் இந்துக் கடவுள்களையும் தங்களுடைய விடுதலைக்கான முதல் தாக்கு மையமாகத் தேர்ந்தெடுத்து இந்துத்துவத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நியமங்களையும் சடங்குகளையும் எதிர்ந்த்தனர், மீறினர்.
இதே போன்றே காலனியாதிக்கத்திற்கு எதிராக மகாத்மா காந்தியின் தலைமையில் போராடிய காங்கிரஸ்மீதும் இவர்களுக்கு உடன்பாடு இல்லாததால் அதனை நிராகரித்து தங்களுக்கான அரசியல் தளம் ஒன்றினை உருவாக்கிக் கொண்டனர்.
“நவீன இந்திய வரலாற்றின் வெவ்வேறு மாறுதல் கால கட்டங்களைச் சேர்ந்த, வெவ்வேறு சமூகப்பின்னணிகளைக் கொண்ட, வெவ்வேறு அறிவு நிலைகளைக் கொண்ட ஃபுலே, அம்பேத்கார், பெரியார் ஆகியோரிடையே அடிப்படையான ஒற்றுமைகள் பல இருந்தன. இந்திய சமூக அமைப்புப் பற்றிய அம்மூவரின் புரிதல்கள், வரையறைகள், அவர்கள் தொடங்கிவைத்து வழிநடத்திய இயக்கங்கள் ஆகியவற்றுக்கிடையிலும் பல பொதுவான அம்சங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் ஒருபோதும் இருந்திராத ஃபுலே, அம்பேத்கர் ஆகியோரைப் போலவே காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்திருந்து பின்னர் அதிலிருந்து வெளியேறிய பெரியாரும், நசிந்து போன இந்து சமுதாயத்தில் நவீனத்துவக் கூறுகளைப் புகுத்தியது பிரிட்டிஸ் ஆட்சியின் பண்பாட்டு வகையான செயற்பாடு எனக் கருதினார். இந்திய தேசிய காங்கிரஸ் மீது தமக்கு நம்பிக்கை ஏதும் இல்லை என்றும் அது கொண்டுவரக்கூடிய சுயராஜ்யம், பார்ப்பனீய இந்து மதம் ஆதிக்கம் செலுத்தும் இராமராஜ்யமாகவே இருக்கும் என்றும் அவர்கள் மூவரும் கருதினர்.” (இராஜதுரை.எஸ்.வி.2001, பக்.13)
இவர்களின் அரசியல் தளத்தின் வெற்றி இந்திய அரசியல் அமைப்பில் தலித் மக்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்டமையாகும். இதன் மூலம் மரபுரீதியான உழைப்பிலிருந்து விடுபடவும் காலனிய முதலாளித்துவத்தினால் வழங்கப்பட்ட புதிய உழைப்பு முயற்சிகளில் ஈடுபடவும் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் முடிந்தது. இந்த நவீன சமூகநிலமை சாதிய முறையின் பொருளாதார அடித்தளத்தை பெருமளவுக்கு அசைத்திருந்தாலும் பார்ப்பனியம் தனது அதிகாரப் பேணுகைக்காக இந்திய சமூகத்தைக் கையாளும் முறைமையும் (சமஸ்கிருதமயமாக்கல்) இந்தியச் சமூகத்தின் உளவியல் இயங்கு தளமும் அதன் திருப்தியும் தனக்குக் கீழ் உள்ளவனை விட தான் சிறந்தவன் என்பதும் தான் அதிகாரம் செலுத்துவதற்கும் தனக்கு கொளரவமும் மதிப்பும் வழங்குவதற்கும் தனக்குக்கீழ் குறிப்பிட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது ஒவ்வொருத்தருக்கும் அவர்களுடை அடிமனம்வரை ஊடுபாய்ந்து நிற்கும் ஒரு உளவியல் யதார்த்தமாகும். இதன் காரணத்தினால் நவீன நிலமைகளுக்கேற்ப சாதி புதிய வடிவங்களை எடுத்தும் (சாதிக் கட்சிகள், சமூக மேல்நிலையாக்கம்) இந்திய சமூகத்தில் நிலைபேறுடையதாக விளங்குகின்றது.

இந்த வரலாற்றுப் பின்புலத்தினூடே வடகிழக்குத் தமிழர்களின் சமூக அமைப்பினையும் இங்கு தோற்றம் பெற்ற சாதி எதிர்ப்புப்போராட்டங்களையும் நோக்குதல் வேண்டும். சமூக அமைப்பென்பது,
குறிப்பாக ஒரு வாழிட வரையறைக்குள் சீவிக்கும்பொழுது, அந்தச் சமூகம் ஒரு குறிப்பிட்ட கட்டமைவினைக் கொண்டதாக அமையும் (Social Structure)இ அந்தச் சமூகத்தின் பல்வேறு அலகுகளிடையேயும் நிலவும், காலச்செம்மைபெற்ற, ஒழுங்குமுறைப்பட்ட அமைவொழுங்குள்ள உறவுகள் இந்தக் கட்டமைவைப் புலப்படுத்தி நிற்கும். இவ்வாறு அமையும் கட்டமைவு அதன் இயங்கு நிலையில் ஓர் “அமைப்பு” (System) ஆகத் தொழிற்படும். அந்தச் சமூகம் இயங்கும் முறைமையை விளங்கிக் கொள்வதற்கு அது எவ்வகையில் ஓர் “அமைப்பு” ஆகத் தொழிற்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். (சிவத்தம்பி.கா, 1993 பக்.7)
இந்தியாவிலும் அதன் செல்வாக்குக்குட்பட்ட தென்னாசிய நாடுகளிலும் சாதியமைப்பு இச் சமூகங்களின் இயங்கு முறைமையினைத் தீhமானிக்கின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் அதன் பிரதேச சூழல்களுக்கேற்ப சாதிமுறைமையினைப் பேணிவருவதனைக் காணலாம். அது இடத்துக்கு இடம் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபாடுடையதாக விளங்குகின்றது. இந்த அடிப்படையில் இலங்கையின் வடகிழக்குப் பிரதேசங்களின் சமூக அமைப்பில் இரு பிரதான சமூக அமைப்புக்கள் முக்கியம் பெறுகின்றன.
தொடரும் 
»»  (மேலும்)

1/10/2019

விசாரனையின்றி மூன்று வருடமாக தொடரும் அரசியல் பழிவாங்கல்

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையைஇ எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் 22ஆம் திகதிகளுக்குஇ மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் ஒத்திவைத்துள்ளார்.

இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (09)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான 5 சந்தேக நபர்களும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில்இ இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்துள்ளார். இதனைடுத்துஇ ஐவரின் விளக்கமறியலும் பெப்ரவரி 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில்இ கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜாஇ கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
»»  (மேலும்)

குப்பை அகற்றுதலும் திருகோணமலை நகரசபையும்.

திருகோணமலை நகரசபை.. Résultat de recherche d'images pour "trincomalee municipal council"
குப்பை அகற்றுதலும்,
வடிகால் துப்பரவாக்கலும்..
மேற்படி இரு விடயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விடயங்கள்.. எனவே இவற்றை பற்றி ஒன்றாகவே ஆராய வேண்டும்..
குப்பை அகற்றுதல்..
இதில் பல விதமான குப்பைகள் உள்ளது..
1.வீட்டு குப்பை..
2.தொழிற்சாலையில் இருந்த வெளியேறும் குப்பைகள்..
3.இயற்கையாக தினந்தோறும் ஏற்படும் கழிவுகள்.. மரங்களில் இருந்து விழும் குப்பை.. சந்தையில் இருந்து வெளியேறும் கழிவு..
4. இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் குப்பை என பல வகை உண்டு..
கழிவுப் பொருள் முகாமைத்துவத்தில் நீண்ட காலமாக கவனம் செலுத்தாமல் உதாசீனமாக இருந்ததால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை இது! திண்மக் கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தியும், உக்குகின்ற கழிவுகளை சேதனப் பசளையாக்கியும் ஆரம்பத்திலிருந்தே பழக்கப்பட்டிருப்போமானால் இத்தனை நெருக்கடி இப்போது உருவெடுத்திருக்க வாய்ப்பில்லை. சேதனப் பசளைகள் மண்வளத்தை அதிகரிப்பவையாகும். மண்ணுடன் நீண்ட காலம் நிலைத்திருந்து பயிர்களுக்கு பசளையாகப் பயன்படக் கூடியவை. யூரியா போன்ற செயற்கைப் பசளைகளை அதிகளவில் பயன்படுத்தி வியாதிகளை வலிந்து வாங்கிக் கொள்ளும் அவசியமும் ஏற்பட்டிருக்காது.
ஜப்பான், மலேசியா, பிரிட்டன் போன்ற நாடுகள் குப்பைகளை இவ்வாறுதான் முகாமைத்துவம் செய்கின்றன. அங்கெல்லாம் குப்பைகள் விவகாரம் சிக்கலுக்குரியதல்ல.
நாம் இப்போதுதான் பொலித்தீன், பிளாஸ்டிக், கடதாசி, உணவுக்கழிவுகள் போன்றவற்றை தனித்தனியாக வகைப்படுத்தும் பழக்கத்தை ஆரம்பித்திருக்கின்றோம். ஆனால் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்ட இக்கழிவுகளை என்ன செய்வதென்பதையிட்டு இன்னுமே திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. உள்ளூராட்சி நிறுவனங்கள் தடுமாறி நிற்கின்றன.
காலம் தாழ்த்தியே மீள்சுழற்சியைப் பற்றிச் சிந்தித்திருக்கின்றோம். ஆனால் இனியும் அலட்சியமாக இருப்பது உகந்ததல்ல. அவ்வாறிருப்பின் எமது நகரங்களே எதிர்காலத்தில் குப்பை மலைகளாகி விடலாம்.
அண்மையில் நான் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் மாகாணத்திற்கு போகும்போது சில விடயங்களை என்னால் அவதானிக்க முடிந்தது.. இந்த மாகாணம், இந்தியாவின் சிறப்பது நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட இடமாகையினால், அது ஏனைய இந்திய பிரதேசங்களை போலில்லாமல் மிகவும் துப்பரவான இடமாகும்..
இந்த மாகாணத்தின் தலை நகரான"லே"என்னுமிடத்தில் அதன் உள்ளூர் சபையானது எவ்வளவு நேர்த்தியாக செயல்படுகின்றது என்பதை பார்க்கும் போது எனக்கு, ஏன் இப்படி எல்லாம் எங்களால் செய்ய முடியாமல் போனது என்று விளங்கவில்லை..
அங்கு நிர்வாகம் மக்களை தேடி போகின்றதது.. ஒலிபெருக்கியில் தங்கள் வருகையை தெரிவித்து, மக்களை தங்கள் குப்பை கூளங்களை கொண்டுவந்து வாகனத்திற்கு தருமாறு ஊக்குவிக்க படுகின்றனர்..இந்தியாவில் இப்படி ஒரு இடமா என அதிசயிக்க வைக்க பட வைத்த ஒரு ஆச்சரியமான விஷயம் இது..
இதே போன்று எங்கள் ஊரிலும் நடக்க வேண்டும் என்று நான் கனவு கண்டது உண்டு.. அது நிஜமா நடந்து வரும் சாத்திய கூறுகளை என்னால் உணர முடிகின்றது..
வாழ்த்துகள்..நகரசபைக்கு..
இரண்டாவது முக்கிய விடயம்.. வடிகால் வசதி..
அநேகமான நாட்களில் வடிகால்கள்,மிகவும் அசுத்தமாகவும், துர் நாற்றம் வீசுபவையாகவும் உள்ளன..
இவற்றுக்கு விசேடமாக வடிமைத்த தாங்கிகளில்,கடல் நீரை கொண்டுவந்து, வடிகால்களை கிராமமாக களுவுவதன் மூலம் அசுத்தங்களை தேங்க விடாது தடுக்கலாம்..அத்துடன் உப்பு தண்ணீராகையினால் நுளம்பு பெருக்கமும் இல்லாது போகும்.. இதை ஒரு பரிசோதனை முறையாக நாங்கள் முயன்று பார்க்கலாம்..
நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னால் தலைவர் ஒருவர் எமக்கு நகரசபை தலைவராக கிடைத்தது ஒரு பெரும் நன்மை.. அவர் தொடர்ந்தும் நகரத்தின் முன்னேற்றத்திக்கு ஓயாது உழைப்பார் என்ற நம்பிக்கையும் உள்ளது. 
நன்றி முகநூல் டாக்டர் கெமச்சந்திரா 
»»  (மேலும்)

1/07/2019

கடலூர் சிறுமிகள் பலாத்காரம்: பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை

கடலூரில் 2 பள்ளி மாணவிகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் மத போதகருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடலூர் பள்ளி சிறுமிகள், மத போதகர்,   சிறை தண்டனை, சதீஷ்குமார், பாலியல் தொழில் , தனலெட்சுமி, பள்ளி மாணவிகள்,
Cuddalore school girls, religious pastor, school girls, jail sentence, Satish Kumar, sex worker, Dhanalakshmi,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 2 சிறுமிகள் மாயமான நிலையில் அவர்களை வடலூரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சதீஷ்குமார் என்ற நபரிடமிருந்து போலீசார் மீட்டனர். திட்டக்குடியைச் சேர்ந்த தனலெட்சுமி என்பவர் மாணவிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், பின்னர் லட்சுமி, கலா, ஜெமீனா, சதீஷ்குமார் உள்ளிட்ட பலரிடமும் மாறி மாறி விற்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் கடந்த வாரம் கடலூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களின் தண்டனை விபரம் இன்று (ஜன.,07) அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் தனலட்சுமி, கலா, ஸ்ரீதர், பாத்திமா ஆகியோருக்கு இரட்டை ஆயுள், 42 வருட சிறை தண்டனையும் , பால சுப்பிரமணியனுக்கு 4 ஆயுள் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது. மதபோதகர் அருள்தாசுக்கு 30 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
»»  (மேலும்)

1/05/2019

மட்டக்களப்பு தனது இரண்டு முதுசங்களை இழந்துள்ளது

முதலாமவர் பிரின்ஸ் காசிநாதர். இரண்டாமவர் அமெரிக்காவில் New Orleans, Louisiana வில் பிறந்து 4th September, 1948 அன்று இலங்கைக்கு வந்த Rev.Fr. Miller sj.
இருவரும் முக்கிய இரண்டு பாடசாலைகளின் அதிபர்களாக இருந்தவர்கள் என்பதற்கு அப்பால், சமூகத்திற்கும், யுத்தக்காலத்தில் அவர்களாற்றிய அளப்பெரிய பணிக்காகவும் இலங்கை ராணுவத்தினர் ஒருவருக்கு “உன் வாயில் சுடவேண்டும்” என்றும், மற்றையவருக்கு “வெள்ளைப்புலி” என்றும் கௌரவப்படுத்தியிருந்ததில் இருந்து அவர்களின் உக்கிரமான மனிதஉரிமைச் செயற்பாடுகளை நாம் அறிந்துகொள்ளலாம்.L’image contient peut-être : 1 personne, texte

எமது சமூகம் இவர்கள் இருவருக்கும் காண்பித்த இறுதி மரியாதையினால் வெட்கித் தலைகுனியவேண்டியிருக்கிறது. எத்தனை நன்றி கெட்ட சமூகமாக நாம் மாறிவிட்டிருக்கிறோம்.

இவர்கள் இருவரது இறுதி ஊர்வலங்களிலும் பான்ட் வாத்திய மாணவர்களும், சில பழையமாணவர்களும் இல்லையெனில் அவர்களை தூக்குவதற்கும் நால்வரைத் தேடிவேண்டியிருந்திருக்கும்.

பிரின்ஸ் காசிநாதர்தான் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் அவரைது சேவையை மறந்தாலும், 70 வருடங்கள் எமக்காவே வாழ்ந்த, எத்தனையோ ஆயிரம் மாணவர்களை உருவாக்கிய, எமது மனித உரிமைகளுக்காகப் போராடிய ஒரு மனினை வழியனுப்ப மட்டக்களப்பாருக்கு நேரமுல்லை, அவரின் சேவையை மதிப்பதற்கு மனமுமில்லை என்பது எத்தனை வெட்கத்துக்குரியது.
ஆக, முதலில் மனிதத்தை கற்பதுதான் முக்கியம்.
 

*நன்றி முகநூல் சஞ்சயன் செல்வமாணிக்கம் 

»»  (மேலும்)