12/31/2019

நம் கல்வி நிறுவனங்கள் ரோபோக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளா?



தேடலற்று
தேங்கிப் போதல்Photo de profil de Balasingam Sugumar, L’image contient peut-être : 1 personne, sourit, texte
ஒரு அறிவார்ந்த அதி உயர் தளத்தில் பணியாற்றுவோர் தேடலும் தீவிர வாசிப்பும் புதியனவற்றை உள் வாங்கலும் அதிலிருந்து கண்டு பிடிப்புகளுடன் பயணிப்பதும் இந்த பண்பாட்டை தாங்களும் தாங்கள் சார்ந்த நிறுவன மயப் பட்ட சூழலில் கற்பித்தலும் கற்றலும் என ஒரு சுழர்ச்சி முறையான அறிவுத் தேடலே ஒரு ஆரோக்கியமான அறிவார்ந்த அறிவு ஜீவிகளை உருவாக்க முடியும்.
நம் சூழலில் இது நம்மை சுற்றி எப்படி நடை பெறுகிறது என நாம் விரிவாக பேச வேண்டியவர்களாகிறோம்.
மட்டக்களப்பு நகரமும் நகரத்து சூழலும் உயர் கல்வி நிறுவனங்களினால் நிறைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
1.கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலை வளாகம்
2.கிழக்குப் பல்கலைக்கழகம் மருத்துவ பீட மட்டக்களப்பு வளாகம்
3.கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம்.கல்லடி
4.கல்வியற் கல்லூரி தாளங்குடா
5.திறந்த பல்கலைக்கழக வளாகம் மட்டக்களப்பு நகரம்
6.அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மட்டக்களப்பு நகர்
7.அரச தொழில் நுட்பக் கல்லூரி நாவற்குடா
தமிழர் பிரதேசங்களில் இத்தனை கல்வி நிறுவனங்கள் ஒரு நகரத்தை சூழ அமைந்திருப்பது பெரும் வரப்பிரதாசமே.
இத்தனை இருந்தும் இந்த நிறுவனங்களும் அது சார்ந்த பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் இயக்குனர்கள் அவற்றில் பயிலும் கல்விச் சமூகத்தினர் என எல்லோரும் தம்மை சூழ நடக்க்கும் விடயங்களில் காட்டும் ஈடுபாடும் பங்களிப்பும் கேள்விக் குறியாகவே காணப் படுகிறது
அரசியல் சமூக கலை இலக்கிய நிகழ்வுகள் பலரால் முன்னெடுக்கப் படுகின்ற போது மீண்டும் மீண்டும் ஒரே முகங்களே எல்லாவற்றிலும் அக்கறையுடன் செயல்படும் காட்சிகளை காண்கிறோம்.
அறிவார்ந்த சமூகம் என்பது தேங்கிப் போகும் குட்ட்டையல்ல குட்டையில் நீர் வற்ற வற்ற அது நாற்றமெடுத்து எதுக்கும் உதவாமல் போய் விடும் .வெறும் குட்டையாக இல்லாமல் பிரவாகம் எடுத்து ஓடும் வற்றாத நதியாக அறிவுத் தேடல் அமைய வேண்டும்.
வாசிப்பில்லாத கல்வி என்பது கண்டுபிடிப்புகள் அற்ற இயந்திரத் தன்மையான ரோபோக்களாகவே உருவாக முடியும் .
நம் கல்வி நிறுவனங்கள் ரோபோக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளா? 
நன்றி முகநூல் *பாலசுகுமார் 
»»  (மேலும்)

12/22/2019

மட்டக்களப்பில் தொடரும் மருத்துவ படுகொலைகள்,யார்தான் முற்றுப்புள்ளி வைப்பது..?

பிரவசத்திற்காக 20/12/2019 அன்று மாலை பிரவச வலி ஏற்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அன்று இரவு ஊசி போடப்பட்டது அதன் பின் வலி அதிகம் ஏற்பட்டதை உணர்ந்த அந்த பெண் அங்கு இருந்த தாதியிடம் சென்று கூறியுள்ளார் தனக்கு பிள்ளைய பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் கூறியுள்ளார் ஒரு பிள்ளையின் தாய் என்பதால் அவருக்கு அனுபம் எனவே தாய் தாதியிடம் கூற அந்த தாதி தானும் பெண் என்பதை மறந்தாளோ தெரியவில்லை உனக்கு இப்பதானே ஊசி போட்டிருக்கு நாள் இருக்கு நேரம் இருக்கு பேசாம இரு என்று ஏனோ தானென்று அலட்சியமாக கூறியுள்ளார்.L’image contient peut-être : une personne ou plus, personnes qui dorment, bébé et gros plan
அந்த சமயம் அனைவரும் உறக்கத்தில் இருந்ததாகவும் அந்த பெண் கூறினார் பின்பு வலி மீண்டும் அதிகரிக்க அந்த பெண்ணால் எழும்ப கூட முடியாத நிலையில் பக்கத்தில் இருந்த மற்றுமெரு பிரசவத்துக்காக வந்திருந்த பெண் தாதியிடம் சென்று கூற அதன் பின்புதான் பிரசவ அறைக்கு கொண்டு செல்லபட்டிருக்கிறார் அங்கும் சில மணித்தியாலங்கள் போராட்டத்தின் மத்தியில் நள்ளிரவு 1:35 am ஆண் குழந்தை பிறந்துள்ளது அக்குழந்தை அழுததாகவும் சிறுநீர் கழித்ததாகவும் அத் தாய் கூறினார் பின் அக்குழந்தைக்கு சுவாசிப்பதில் கடினமாக உள்ளதாகவும் 1மணித்தியலம் கண்ணாடி பெட்டியில் வைத்தால் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு குழந்தையை எடுத்து சென்றுள்ளனர்...
பிள்ளையை எதிர் பார்த்து கொண்டிருந்த தாய் 2மணித்தியாலங்கள் கழித்தும் பிள்ளையை காட்டவும் இல்லை பிள்ளை இறந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள் பிள்ளையின் நிறை 2kg 315g இறந்ததுக்கான காரணம் வினவிய போது பல தரபட்ட காரணங்கள் தெரிவிக்கப்பட்டது ஒருவரால் தெரிவிக்கப்பட்டதை கேட்க எமக்கே ஆச்சரியமாய் இருந்தது நுரையீரல் இல்லயாம் என்று அப்படியானால்....
அந்த குழந்தை 8மாதத்தில் பிறந்தது எப்படி இவ்வளவு தேக ஆரோக்கியமாக பிறந்திருக்கும் Doctor சரவணன் ஐயா நீங்கள் தானே 18ம் திகதி அந்த பெண் சாதுவான வலி ஏற்பட உங்களிடம்தான் வந்து scan பன்ன நீங்கதானே பிள்ளை ஆரோக்கியமாக உள்ளதாகவும் ஓரிரு தினங்களில் சுகபிரவசமாகிவிடும் 20ம் திகதி வைத்தியசாலைக்கு வருமாறு விடுதி இலக்கம் எழுதி குடுத்திருந்தீர்கள் அப்படியிருக்கையில் உங்களுக்கு அந்த குறை தெரியவில்லையா..??
அப் பச்சிளங் குழந்தையின் தகப்பனிடம் கூறிய காரணங்களும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார் என்ன செய்வது வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பமாச்சே ஏமாற்றத்தான் செய்வார்கள் எத்தனை குழந்தைகள் இவ் வைத்தியசாலையில் இறந்து இருக்கிறார்கள் யாருக்குத்தான் நியாயம் கிடைத்திருக்கு கடைசியில் இவர்களுக்கும் ஏமாற்றம்தான் இதற்கு தீர்வுதான் என்ன
மட்டக்களப்பு மக்களாகிய நாம் என்னதான் செய்யப்போகிறோம் வரும் சந்ததிகளின் நிலமைதான் என்ன இப்படி அடிக்கடி குழந்தை இறப்பு வீதம் அதிகரிக்குமாயின் எப்படி இந்த வைத்தியசாலையை நாடுவார்கள் இவர்களது அசமந்தப்போக்காள் இன்னும் எத்தனை குழந்தைகள் பழியாகுமோ நம்ம இனத்தின் அவலநிலைக்கு யார்தான் முற்றுப்புள்ளி வைப்பது...!
தம்பி முனைக்காடான் குபேந்திரன் அவர்களது பதிவின் பிரதி. 
»»  (மேலும்)

மையமா மதில் மேல் பூனையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வலதுசாரிகளுக்கு ஆதரவாகவோ, இடதுசாரிகளுக்கு ஆதரவாகவோ இல்லாமல் மையத்தில் நின்று இந்த சட்டம் குறித்து முடிவுசெய்யவேண்டும் என்பதால், இந்த சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தவுள்ள போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கலந்துகொள்ளவில்லை என மக்கள் நீதி மய்ய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 
Résultat de recherche d'images pour "kamal hassan"
சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நேரில் சந்தித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன், தானும் போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்த அனைத்து கட்சியினருக்கும் அழைப்புவிடுத்தது.
இதில் கமலின் மக்கள் நீதி மய்யமும் அடக்கம். இந்த பேரணியில் கமல் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுகவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஒருவர் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் கட்சியின் முடிவு வலதுசாரிக்கு ஆதரவானதாகவோ, இடதுசாரிக்கு ஆதரவானதாகவோ இல்லை என்பதால் பேரணியில் பங்கேற்கவில்லை என பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.
»»  (மேலும்)

12/20/2019

மார்ச் மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்

மார்ச் மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 Résultat de recherche d'images pour "யோகேஸ்வரன்"
நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னரே, 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
»»  (மேலும்)

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் 'ஒரு நாடகம்' அம்பலமானது

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸர்லாந்து பெண் ஊழியர்கள் விவகாரம் தொடர்பிலும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி இதன்போது விடயங்களை தெளிவூட்டியிருந்தார். Résultat de recherche d'images pour "சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல்"
குறித்த பெண்ணினால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் போலியானவை என தொழில்நுட்ப சாட்சியங்களின் ஊடாக சுவிஸர்லாந்து தூதுவருக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த பெண் சுவிஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றுகின்றமையினால், அந்த பெண் தொடர்பில் சுவிஸர்லாந்து தூதரகம் முன்னிலையாகின்றமை எந்தவிதத்திலும் தவறு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
»»  (மேலும்)

மலையக கல்வி வரலாற்றில் இப்படி ஒரு முதல் சாதனை


மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், தெல்தோட்டை, லிட்டில் வெளி (கடதாசி தோட்டம்) ஆசிரியர் கருப்பையா பிரபாகரன் PhD. (கலாநிதி) பட்டம் பெறுகின்றார்.L’image contient peut-être : 1 personne
எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு நிகழ்வின்போதே மேற்படி பட்டத்தை பெறவுள்ளார். இவர் ஒரு தோட்ட தொழிலாளியின் பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது
மலையக கல்விவரலாற்றில் ஒரு ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒருவர் கலாநிதிப் பட்டம் பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவே.
இந்த சாதனை ஒட்டுமொத்த மலையக கல்வி சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் ஓர் விடையமாகும் அத்துடன் மலையக கல்வி வரலாற்றில் பொன் ஏடுகளால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

நன்றி முகநூல் * முத்தையா நித்தியானந்தன் 
»»  (மேலும்)

12/17/2019

பர்வேஸ் முஷரஃபிற்கு மரண தண்டனை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்

Former Pakistan President General Pervez Musharraf sentenced to deathஇஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்று, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதியான ஜெனரல் பர்வேஷ் முஷரஃபிற்கு ராஜ துரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முஷரஃப் 2007ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி ராஜ துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரிஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 2013ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது முஷரஃப் மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை ஆறு வருட காலமாக நடைபெற்றது.
அவர் பாகிஸ்தான் அரசியலமைப்பை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே அந்நாட்டின் அரசியலமைப்பை மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் பர்வேஸ் முஷரஃப் ஆவார்
»»  (மேலும்)

12/13/2019

இங்கிலாந்து தேர்தலில் கன்சவேர்டிக் கட்சியின் பாரிய வெற்றியின் பின்னணி என்ன?- இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்

'போரிஸ் ஜோன்ஸனின் 'Brexit' வெற்றி'   இங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019
Résultat de recherche d'images pour "இராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் லண்டன் 95 சிறுகதைத் தொகுப்பு"

இங்கிலாந்தில் பலரும் எதிர்பார்த்படி கொன்சர்வேட்டிவ்(பழமை தழுவும்) கட்சியின்; தலைவர் போரிஸ் ஜோன்ஸன் நேற்று நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். தேர்தல் ஆய்வுகளும் பத்திரிகைகளும் சொல்லிக்கொண்டு வந்த தொகுதிகளைவிடக் கூடத்தொகுதிகளைவென்றிருக்கிறார். பிரபுக்கள்,முதலாளிகள்,நில உடமையாளர்களின் கட்சி எனச் சொல்லப்படும் கொன்சர்வேட்டிவ் கட்சி பிரித்தானிய சரித்திரத்தில் முதற்தடவையாகத் தொழிற்கட்சியின் கோட்டை என்று சொல்லப் பட்ட,இங்கிலாந்தின் வடகிழக்கின் பல தொகுதிகளையும் வென்றெடுத்து வெற்றிவாகை கொண்டாடுகிறது.
கொன்சர்வேட்டிவ் கட்சி 45 விகித வாக்குகளையும், தொழிற்கட்சி 33 விகித வாக்குகளையும் பெற்றிருக்கிறது. புpரித்தானியாவின் 650 தொகுதிகளில் கொனசர்வேட்டிவ் கட்சி 364 இடங்களையும்,தொழிற்கட்சி 203 இடங்களையும், மிகுதிகளை மற்றக் கட்சிகளும் பெற்றிருக்கின்றன. தேர்தல் பிரசாரத்தில் போரிஸ் ஜோன்ஸன் 68 இடங்களை மேலதிகமாக வென்று அரசு அமைப்பேன் என்றர்.ஆனால் 78 தொகுதிகளை மேலதிகமாக வென்று அமோக வெற்றி பெற்றிருக்கிறார். ரோனி பிளேயார் 1997ல் 20.000 மேலதிக வாக்குகளால் வென்றெடுத்த செட்ஜ்பீல்ட் என்ற தொகுதியும் பறிபோனது தொழிற்கட்சியினரான எங்களைத் துன்பப்படுத்தியது.கொன்சர்வேட்டிவ் கட்சியின் மகத்தான வெற்றி. தொழிற்கட்சி 59 தொகுதிகளைக் கொன்சர்வேட்டிவ் கட்சியிடம் பறிகொடுத்த படுதோல்வி இந்தத் தேர்தலில் வெளிப்படுகிறது.
இதற்கெல்லாம் தலையாய காரணம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரித்தானியா விலகவேண்டும் என்று பிரித்தானியாவின் பெரும்பான்மையான ஆங்கிலேயர்கள் விரும்புவதாகும். அந்த விரும்பத்தைத் தொழிற்கட்சி பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பது பொது மக்களின் ஆத்திரமுமாகும்.ஏகாதிபத்திய ஆளுமையாக இருந்த இங்கிலாந்தில், ஐரோப்பிய ஒன்றியம் என்ற பெயரில்,பொருளாதார வசதியற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் லண்டன் நகரிற் குவிந்தது அவர்களால்ச் சகிக்க முடியாமலிருந்தது. வெளிநாட்டாரின் வருகையால்ஆங்கிலேய இளம் தலைமுறையினர் தங்களுக்கு ஒரு வீடு வாங்கமுடியாத அளவுக்கு வீடுகளின் விலைகள்  ஆகாயத்தைத் தொட்டன. அத்துடன் ஆங்கிலேயர் கேட்கும் சம்பளத்தை விட மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யப் பல்லாயிரம் ஐரோப்பிய இளைஞர்கள் லண்டனை நிறைத்தார்கள்.பணக்கார நாடான இங்கிலாந்துக்கு வந்து களவு செய்யவும், பாலியல் தொழிலுக்காகவும்  ஏழைப் பெண்களைக் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து கொண்டு வரவும் நூற்றுக்கணக்கான கிரிமினற் குழுக்கள் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து லண்டனுக்குள் மிகவும் இலகுவாக நுழைந்தன, இதனுடாக பிரித்தானியாவின் பெயருக்கும், சாதாரண மக்களின் பாதுகாப்புக்கும் தலையிடியைக் கொடுத்தார்கள்.
2004ம் ஆண்டு,ரோனி பிளேயர், ஐரோப்பிய ஒன்றிணையத்தின் மக்கள் அத்தனைபேரினதும் சுதந்திர நடமாட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தார்.அதைத் தொடர்ந்து, தங்களின பிரித்தானியத் தனித்துவக் கலாச்சாரம்,ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவராக இருப்பதால் அழிந்து தொலைவதாகப் பிரித்தானியர் பலர் குமுறினர். 44 வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்துடனிருந்த தொடர்பைத் துண்டிக்க முடிவெடுத்தார்கள்.ஐரோப்பாவிலிருந்து வெளியேற 2016ம் ஆண்டு வாக்களித்தார்கள். தொழிற்கட்சி, லிபரல் டெமோக்கிரசிக் கட்சி, ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சிகளின் இழுபறியால் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது பற்றிய விவாதம் நேற்றுவரை தொடர்ந்தது.
அவற்றிற்கு ஒட்டு மொத்த முற்றுப் புள்ளியும் வைக்கப் பிரித்தானிய மக்கள் வர்க்க சார்பிலிருந்து வெளிவந்து 'பிரக்ஷிட் போரிஸைத்'; தெரிவு செய்திருக்கிறார்கள்.
பணத்தின் ஆளுமையில் அமைந்த கொன்சர்வேட்டிவ் கட்சி,தொழிலாளர்களுக்குப் பெரிய நன்மை செய்யாத கட்சி.முதலாளிகளின் நன்மையை முன்னெடுப்பவை.ஆனாலும்,தொழிற்கட்சி சார்ந்த பெரும்பாலான மக்கள் 'ப்ரக்ஷிட்'காரணமாகக் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
மார்க்கரட் தச்சரைவிடக்கூடிய அளவில் போரிஸ்ஜோன்ஸன் பிரித்தானிய மக்களின் வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பினின் தலைமையிலுள்ள தொழிற்கட்சி இரண்டாம் தடவையும் 'ப்ரக்ஷிட்' சார்ந்த கொள்கைகளைச் சரியாக முன்னெடுக்காமல்;த் தேர்தலில்த் தோல்வியைத் தழுவியிருக்கிறது. பிரித்தானியா, முதலாளித்துவத்தின் பிறப்பிடம். 53 நாடுகளைக் காலனித்துவம் என்ற பெயரில் கொள்ளையடித்து மாடமாளிகைகள் கட்டிக் கொண்டவர்கள்.இன்னும் அரசகுடும்பத்தைப் போற்றும் பழமைவாதம் கொண்ட கலாச்சாரத்தைக் கொண்டவர்கள்.உலகத்திலுள்ள பணக்காரர்கள் பிரித்தானியாவுக்கு வந்து முதலிடச் சுதந்திரம் கொடுப்பவர்கள்.
ஆனாலும்,பிரித்தானிய மக்களிற் பெரும்பான்மையினர் சமத்துவத்தை விரும்புவர்கள். காலனித்துவத்திற்கு எதிராகப் போராடியவர்கள்.அதிலும் பிரித்தானிய தொழிற் கட்சி 'மனித நேயத்தைப்' போற்றும் தத்துவத்தைக் கொண்ட கட்சி. இந்தியா மட்டு மல்லாது, ஒட்டு மொத்த காலனித்துவ நாடுகளுக்கும் சுதந்திரம் கொடுத்த கட்சி.பெண்களுக்குச் சமத்துவம் என்று வாய்ப்பேச்சில் சவாலடித்துக் கொண்டிருக்காமல் 25 விகிதமாவது பெண்களின் பிரதிநதித்துவத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தவர்கள். உலகமே வியக்கும் சுகாதார சேவை இலவசமாக வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர்கள்.
தொழிலாளர்கின் நலன்களுக்காகப் பல அரும்பெரும் திட்டங்களைக் கொண்டு வந்தவர்கள்.ஆனாலும், மிகவும் இடதுசாரியான ஜெரமி கோர்பின், பணக்காரர்களுக்கு எதிராகக் கொண்டு வந்த சில தேர்தல் விஞ்ஞாபனங்கள் பலரை முகம் சுழிக்க வைத்தது.'ப்ரக்ஷிட்' விடயத்தில் ஜெரமியின் தெளிவற்ற நிலைப்பாடு, அவருக்குக் கிடைத்த தோல்விக்குத் துணையாக இருந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் கணிசமானவர்களை அவரிடமிருந்து விலக்கியது. அந்த இடங்களைக் கொனசர்வேட்டிவ் கட்சி வெற்றி கொண்டிருக்கிறது.
ஜெரமியின் தோல்விக்கான பல காரணங்களில், பிரித்தானிய ஊடகங்கள் அவரின் இடதுசாரிக் கொள்கைகளை வெறுத்தது மிகவும் முக்கிய காரணமாகும்.இடைவிடாமல் பெரும்பாலான- பிரித்தானிய ஊடகங்கள் ஜெரமிக்கு எதிராகச் செயற்பட்டன.
ஜெரமியின் தொழிற்கட்சி மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகமாட்டோம் என்று அடம்பிடித்த லிபரல் டெமோக்கிரசிக் கட்சியும்; பெரிதாக முன்னேறவில்லை. அந்தக் கட்சியின்; தலைவி,ஜோ வின்ஸன் படுதோல்வியடைந்திருக்கிறார்.
இனி என்ன நடக்கும்?
போரிஸ் ஜோன்ஸன் தனது தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி, ஜனவரி 31ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும். அதற்கு முதல்,ஐரோப்பிய ஒன்றியத்துடனான பன்முகத் தொடர்புகளை எப்படி அறுத்துக் கொள்வது, அல்லது ஏதோ ஒரு வித்தில் தொடர்வது என்ற கேள்விகளுக்கு இருபகுதியினரும் வழிகள் தேடவேண்டும்.
-நேட்டோ ஒப்பந்தம் சார்ந்த விடயங்கள் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்குப்புக்கும்  பொதுவானவை. அந்த அமைப்பின் ஆரம்ப அமைப்பாளர்களில் பிரித்தானியா முன்னிலை வகிக்கிறது.அந்த அமைப்பில் பிரித்தானியாவின் இடம் தெளிவு படுத்தப்படவேண்டும்
-விஞ்ஞான,விண்ணுலகஆய்வுகள் சம்பந்தமான ஐரோப்பா ஒருமித்த திட்டங்களின் எதிர்காலமென்ன?
-கிழக்கு ஐரோப்பிய அடிமட்டத் தொழிலாளர்களின் வரவு தடைப்பட்டால் அவர்களை நம்பியிருக்கும் பிரித்தானிய விவசாயத்தின் நிலைஎன்ன?
-டொனால்ட் ட்ரம்பின் அன்புக்கும் ஆதரவுக்கும் தன்னை இணைத்துக்கொண்ட 'பிரித்தானிய ட்ரம்ப் போரிஸ் ஜோன்ஸன்'அமெரிக்காவின் வாலாக இயங்குவாரா என்கின்ற கேள்விகள்  பலருக்குண்டு.
-போரிஸ் பிரமாண்டமாக வெற்றி பெற்றிருக்கிறார்,ஆ
னால் பொய்களைத் தாராளமாக வாரியிறைப்பவர் என்ற பெயரையும் கொண்டவர் அவர். 'ப்ரக்ஷிட்' விடயத்தில் எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் என்னமாதிரி நடந்து கொள்வார், அதனால் பிரித்தானியாவின் பொருளாதார விருத்திக்கு,பாதுகாப்புக்கு,ஐரோப்பாவுடானான நல்லுறவுக்கு என்ன நடக்கும் என்பவை பலரின் கேள்விகளாகும்.

நன்றி *முகநூல் 
»»  (மேலும்)

12/10/2019

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

1 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மையத்தை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, டிசம்பர் 10: மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அகதிகளாக நாட்டில் வாழும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.L’image contient peut-être : 1 personne, sourit, barbe

கடந்த 35 ஆண்டுகளாக அகதிகளாக இந்த நாட்டில் வசித்து வரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். சூ கேபி பில்' என்று அவர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். மக்களவை திருத்தச் சட்ட மசோதாவை மக்களவை நிறைவேற்றிய ஒரு நாளுக்குப் பிறகு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்மொழியப்பட்ட சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து அந்த நாடுகளில் மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்று கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு முகாம்களில் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கை தமிழர்கள் மூன்று தசாப்தமாக வதைபடுகிறார்கள். 


விடிந்தால் பொழுதுபடும் வரைக்கும் வருஷம் 365 நாளும் தமிழ் தமிழ் என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகளும் போலித் தமிழ் வாஞ்சையாளர்களும் வெளிநாடுகளுக்கு வந்து ஒட்டுண்ணிகளாக இலங்கைத் தமிழர்களின் விருந்தோம்பல் பலவீனத்தைச் சுரண்டியவர்களும் இன்று வரை இலங்கைத்தமிழ் அகதிகள் பற்றி அற்ப அக்கறை கூடக் காட்டியதில்லை என்பது சவால்விட முடியாத உண்மையாகும்.

நன்றி* தோழர் அழகலிங்கம் 
»»  (மேலும்)

12/04/2019

அனுராதா யஹம்பத் –கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம்


கிழக்கு,மற்றும் வடமத்திய  மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (04) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
                
 கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத், வட மத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரண, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 முன்னதாக ஆறு புதிய ஆளுநர்கள்  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் கடந்த மாதம் (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருந்தனர்.
ஆளுநர்களின் முழுமையான விவரங்கள் 
அனுராதா யஹம்பத் – கிழக்கு மாகாணம் 
திஸ்ஸ விதாரண–   வட மத்திய மாகாண ஆளுநர்
ராஜா கொல்லுரே –  ஊவா மாகாண ஆளுநர்
சீதா அரம்பேபொல – மேல் மாகாண ஆளுநர்
ஏ.ஜே.எம்.முஸம்மில் – வடமேல் மாகாண ஆளுநர்
லலித் யு.கமகே         –  மத்திய மாகாண ஆளுநர்
வில்லி கமகே         –   தென் மாகாண ஆளுநர்
டிகிரி கொப்பேகடுவ – சபரகமுவ மாகாண ஆளுநர்
»»  (மேலும்)

12/03/2019

தமிழீழத்தை மட்டுமல்ல தமிழர்தம் ஒற்றுமையையும் காணாது அருளர் மறைந்தார்

ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் ஈரோஸ் (EROS) இயக்கத்தின் தொடக்க கால உறுப்பினர்களில் ஒருவருமான தோழர் அருளர் (அருட்பிரகாசம்) யாழ்ப்பாணத்தில் மறைந்து விட்டார்.L’image contient peut-être : 1 personne, debout, arbre, plante, ciel, plein air et nature
(13.04.1948 - 03.12. 2019)
“லங்கா ராணி” என்ற புதினத்தை எழுதியவர்.
ஈழப்போராட்ட வரலாற்றோடு இணைந்திருந்த“கன்னாட்டி” பண்ணைக்குரியவர்.
1980 களில் ஈழப்போராட்ட இயக்கங்களுக்கிடையில் பரஸ்பர உறவைக்கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர்.
லண்டன், இந்தியா, இலங்கை என எப்போதும் பயணங்களை மேற்கொண்டு அரசியல், சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருந்தவர்.
மீளாய்ப்பயணமாகி விட்டார்.
தோழர் அருளருக்கு அஞ்சலி
நன்றி *தகவல் முகநூல் தோழர் கருணாகரன்  

»»  (மேலும்)

11/28/2019

அங்கஜன் வியாளேந்திரன் ஆகியோருக்கு மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகள்

Résultat de recherche d'images pour "பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்""
அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 17 பேருக்கு மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த நியமனங்கள் இன்று (27) வழங்கப்பட்டன.
இந்தவகையில் வழங்கப்பட்ட பொறுப்புக்கள் வருமாறு,
  • கொழும்பு மாவட்டத்துக்கு விஜேதாச ராஜபக்ஸ
  • கம்பஹா மாவட்டத்துக்கு சுதர்சனி பெர்ணாந்து புள்ளே
  • களுத்துறை மாவட்டத்துக்கு பியல் நிசாந்த
  • கண்டி மாவட்டத்துக்கு கலாநிதி சரத் அமுனுகம
  • மாத்தளை மாவட்டத்துக்கு லக்ஸ்மன் வசந்த பெரேரா
  • மொனராகலை மாவட்டத்துக்கு சுமேதா பீ. ஜயசேன
  • நுவரெலியா மாவட்டத்துக்கு முத்து சிவலிங்கம்
  • காலி மாவட்டத்துக்கு சந்திம வீரக்கொடி
  • மாத்தறை மாவட்டத்துக்கு நிரோசன் பிரேமரத்ன
  • யாழ். மாவட்டத்துக்கு அங்கஜன் ராமநாதன்
  • மன்னார் மாவட்டத்துக்கு காதர் மஸ்தான்
  • மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எஸ். வியாளேந்திரன்
  • அம்பாறை மாவட்டத்துக்கு சிறியானி விஜேவிக்ரம
  • அனுராதபுர மாவட்டத்துக்கு வீரகுமார திஸாநாயக்க
  • பதுளை மாவட்டத்துக்கு தேனுக விதானகமகே
  • கேகாலை மாவட்டத்துக்கு சாரதீ துஸ்மன்த மித்ரபால
  • இரத்தினபுரி மாவட்டத்துக்கு துனேஸ் கன்கந்த 
  • ஆகியோரே இவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
»»  (மேலும்)