வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிவாரண சேகரிப்பு பணிகள் இன்றோடு நிறைவடைந்துள்ளன.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள். வர்த்தக சங்கத்தினர், மட்டு தமிழ் இளைஞர் அமைப்பு, கூட்டுறவு சங்கம், கண்ணங்குடா சமூக அமைப்பினர், சிறுவர் அபிவிருத்தி நிதியம், எழுகதிர் ஏழைகளின் வாழ்வின் உதயம் அமைப்பினர், வவுணதீவு அபிவிருத்தி நிறுவனம் என்பன தாம் சேகரித்த நிவாரணப் பொருட்களை இன்று அரசாங்க அதிபர் , மற்றும் மாநகர முதல்வர் ஆகியோரிடம் கையளித்தனர் .
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பங்களிப்பாக இவை நாளை காலை முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படவுள்ளன.
0 commentaires :
Post a Comment