12/10/2018

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் புதிய கூட்டமைப்பு

எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் மஹிந்த ராஜபக்ஸவின் பங்குபற்றலுடன்  புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.Résultat de recherche d'images pour "mahintha and srisena"
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைத்து ஆரம்பிக்கப்படவுள்ள இந்த புதிய கூட்டமைப்புடன் இணைந்துக்கொள்ளுமாறு ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய அமைப்புகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கூட்டமைப்புக்கு தகுந்த இலட்சிணை ஒன்றைத் தெரிவு செய்வது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த கூட்டமைப்புக்கு பொதுவான பெய​ரொன்றை வைப்பதற்காகவும்  பொது யாப்பு ஒன்றையும்  ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment