12/06/2018

தமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஆற்றல் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை​

நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை  நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஆற்றல் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை​யென்றார்.Résultat de recherche d'images pour "ranil sajith"

25 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகச் செயற்படும் ரணில் விக்ரமசிங்க  அதன் பின்வரிசை உறுப்பினர்கள் முன்னேற இடமளிக்கவில்லை என்பதுடன்இ நாட்டின் சட்டம்  ஜனநாயகம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் அவர்  முதலில் தனது கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். இதேவேளை  எந்தவொரு காரணத்துக்காகவும் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரிச் சேவைகளும் தடைபடக் கூடாதென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

குறித்த நிதியாண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சகல நிதி ஒதுக்கீடுகளையும்  உரியவாறு செலவிட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி  எதிர்வரும் வருடதுக்கன அபிவிருத்தித் திட்டங்களை உரியவாறு திட்டமிடவும் அறிவுறுத்தல் வழங்கினார். நேற்று (05) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதேஇ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி  நாட்டின் தற்போதைய அரசியல் அமைதியின்மையை ஒரு பிரச்சினையாகக் கருதாது  பொதுமக்களுக்கான சேவைகளையும் அபிவிருத்திச் செயற்றிட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல  அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார். மக்களின் நலன்கருதி தனது வழிகாட்டலில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சகல விசேட கருத்திட்டங்களும்இ 2019ஆம் ஆண்டில் புதிய உத்வேகத்துடனும் வலுவுடனும் நடைமுறைப் படுத்தப்படுவதற்கான திட்டங்களைத் தயாரிக்குறும்  ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.

0 commentaires :

Post a Comment