12/18/2018

அமல்-எதுவரை? பாகம் -2

அமல்-எதுவரை?  பாகம் -2

  டிசெம்பர் 16ஆம் திகதி புதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நியமனமாகியுள்ளதோடு வியாளேந்திரனின்  50 நாள் அமைச்சர் அந்தஸ்தும் முடிவுக்கு வந்துள்ளது. வியாளேந்திரன் தற்போது தனிமனிதன். அரசியலுக்கு ஸ்தாபனம் என்பது மிக அவசியமாகவும்.ஏனெனில் தனிமரம் தோப்பாகாது என்பது அரசியலுக்கு அச்சோட்டாக பொருந்தும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள வியாளேந்திரன் தனது எதிர்கால அரசியல் தொடர்பில் எப்படியான பாதையை தெரிவு  செய்ய வேண்டும்? என்கின்ற கேள்விக்கு அவர் விடையை கண்டடைய வேண்டும்.  Résultat de recherche d'images pour "viyalenthiran mp"


இந்த இடத்தில் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறிய பின்னர் அளித்த பேட்டியில் அவர் தெளிவாக முன்வைத்த ஒரு கருத்து கவனம் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.. அதாவது "அபிவிருத்தி பணிகளுக்காக ஒரு போதும் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது அபிவிருத்தியையும் உரிமைக்குரல்களையும் ஒருமித்து சமாந்தரமாக கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இன்றுஏற்றப்பட்டுள்ளது".என்கின்றார் அவர்.

 இந்த இடத்தில்தான் அபிவிருத்தியையும் உரிமையையும் இணைத்து பயணிக்க கூடிய ஓரசியல் போக்கு எப்படியிருக்க வேண்டும்?என்கின்ற கேள்வி எழுகின்றது. அதற்கு  கடும்போக்கு தேசியவாதமோ, ஐக்கிய தேசிய கட்சியுடனான சரணாகதி அரசியலோ ஒரு போதும் முன்னுதாரணமாக இருக்க முடியாது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறி பிரதியமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்ட போதிலும் அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபாலவோ அங்கம் வகிக்கும் தேசிய கட்சிகள் எதனதும் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். தேசிய கட்சிகளில் இணைந்திருந்து கொண்டு அபிவிருத்தியை நோக்கி மட்டும்  திறம்பட செயற்பட முடியும். ஆனால் உரிமைசார் கேள்விகளை கறாராக முன்வைக்க முடியுமா? இல்லை என்பதை அதற்கான உறுதியான பதிலாகும். எனவே தேசிய கட்சிகளில் அவர் இணைவதற்கான முடிவு அவரிடம் இல்லையெனலாம்.


இளமையும் துடிப்பும் மிக்க வியாளேந்திரன் போன்றவர்கள் தமிழ் தேசிய போலிகளின்  துரோக பூச்சாண்டிகளை கண்டு அஞ்சாது தமது அரசியல் பயணத்தை தொடரவேண்டும். தம்மீதான  குற்றச்சாட்டுகளுக்கும் பழிப்புரைகளுக்கும் கிழக்கின் தனித்துவ அரசியலுக்கூடாகவே அவர் பதிலிருக்க வேண்டும். யாழ்பாணத்து மேட்டுக்குடி பிரச்சாரங்களுக்கும்  நெருக்குவாரங்களுக்கும் அஞ்சாது ஒருகிழக்கின் மனிதனாக தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்.

தமிழ் தேசிய போலிகளால்  இதுவரை காலமும் துரோகிகள் என தூற்றப்பட்டவர்களான   நல்லையாதான் மட்டக்களப்புக்கு முகவரியை தந்தவர் என்பதும்,தேவநாயகம்தான் கிழக்கு பல்கலைக்கழகத்தை தந்தவரெவென்பதும்,இராஜதுரைதான் இசை நடன கல்லூரியை தந்தவரென்பதும்,சந்திரகாந்தன்தான் முப்பது வருட அழிவுகளிலிருந்து கிழக்கு மாகாணத்தை புதுப்பொலிவு காணச்செய்தவரென்பதும் வரலாறு கற்றுத்தந்த படமாகும். எனவே  இந்த "துரோகிகள்" இல்லாது  தமிழரசு கட்சியோடு மட்டும் குப்பை கொட்டிக்கொண்டிருந்தால்   கிழக்கு மாகாணம் இன்று வெறும்  மயானக்காடாகவே காணக்கிடைக்கும். 


கிழக்கின் அரசியல் சிக்கல்களுக்கு அந்த மண்ணிலே இருந்து உருவாகும் அரசியல் கட்சியினால்தான் ஒரு சரியான பாதையை காட்ட முடியும் என்பதை மக்கள் நன்கே உயர்ந்து வரும் காலமிது. அந்த வகையில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில்  மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது பாரிய நம்பிக்கையின்மையை வெளிக்காட்டியுள்ளனர்.

எனவே இந்த தேசியவாத போலிகளிடமிருந்து வெளியேறி கிழக்கு மாகாண அரசியலை  பொறுத்தவரையில் வியாளேந்திரன் போன்றவர்கள் கிழக்கின் தனித்துவத்துக்கான தலைமையை பலப்படுத்துவது மட்டுமே அவர் முன்னுள்ள வரலாற்று கடமையாகும். தனித்துவ கட்சியுடன் பயணிக்கும்  தலைமை மென்மேலும் பலம்பெறும் போது  அபிவிருத்தி அரசியலோடு இணைத்து  உரிமைசார் விடயங்களில் ஒரு பேரம்பேசும் சக்தியாக கிழக்கு மக்களால் எழுந்து நிற்க முடியும். 

எழுகதிரோன் 






0 commentaires :

Post a Comment