12/06/2018

காத்தான்குடியில் 1ஆவது பேராளர் மாநாடு

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாட்டை  எதிர்வரும் 23ஆம் திகதியன்று  காத்தான்குடியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.Résultat de recherche d'images pour "ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின்"
குறித்த கூட்டமைப்பின் உயர்பீடக் கூட்டம்  அதன் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் ஏறாவூர் இல்லத்தில் அண்மையில் இடம்பெற்ற போது  இதற்கான தீர்மானம் எட்டப்பட்டது.
சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் நாயகம் எம்.டி.ஹசனலி தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில்  பிரதித் தலைவர் நஸார் ஹாஜி உட்பட உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தின் போது  உயர்பீடத்தின் அங்கிகாரத்துக்கிணங்க  கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள்  பார்வையாளர்களாகக் கலந்துகொண்டார்கள்.
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் உயர்பீடக் கூட்டமொன்று  கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment