ரணில் விக்ரமசிங்க தலைமையில் அக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்பிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீளமைப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு இன்று வியாழக்கிழமை, இக்கூட்டமைப்பு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதும், மேற்படி கடிதத்தில் நாடளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ். வியாழேந்திரன் ஆகியோர் கையெழுத்திடவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பொருட்டு அண்மையில் அணி மாறி, பிரதியமைச்சுப் பதவியினைப் பெற்றுக் கொண்டார்.
அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், அண்மைக்காலமாக கட்சியுடன் முரண்படும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment