11/06/2018

மாபெரும் சிந்தனையாளர்களால் நாம் ஆளப்படுகின்றோம்

சிந்தனையாளர்கள்...
L’image contient peut-être : 1 personne, gros plan ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன
நேற்றைய "ஜனமஹி" கூட்டத்தில் வைத்து
UNP தலைவர் ரணிலையும் அவர் சார்ந்தோரையும் விழித்துப் பேசும்போது ஓரினச்சேர்க்கையாளர்களின் ஆட்சி நாட்டிலிருந்ததென்று பொருள்படுமாறு
கருத்தொன்றை வெளியிட்டிருக்கிறார்.L’image contient peut-être : 1 personne, gros plan

அத்தோடு ஒருபாலீர்ப்பில் நாட்டமுடையவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கும் வகையில் ரணில் உள்ளிட்டோரை வண்ணத்துப்பூச்சிகளென்றும் கூறியிருக்கிறார்.
'வண்ணத்துப்பூச்சி' என்பது சிங்கள சமூகத்தில் ஒருபாலீர்ப்பினரை இழிவுபடுத்தும் வகையில்
ஒரு வசைச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இவர் இவ்வாறு இழிவாகப் பேசும்போது மேடையிலிருந்த மஹிந்த உள்ளிட்ட பெரும் அரசியற் தலைவர்கள் வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
இதேபோன்று இன்னொரு சம்பவம் அண்மையில் நிகழ்ந்திருந்தது.
UNP யைச் சேர்ந்த
நிதியமைச்சர் மங்கள சமரவீர
ஒரு உரையாடலின் போது
எதிரணிக்குத் தாவிய ஜனாதிபதி மைத்திரியைக் கடுமையான தொனியில்
'பற வள்ளா' என்று தூற்றியிருந்தார்.
இதனைத் தமிழ்ப்படுத்தினால் வருவது
பற நாய் என்கின்ற சாதிய வசையாகும்.
UNP மங்களசமரவீர, SLFP மைத்திரிபால,
ஒரு பாலீர்ப்பினரை இழிவுபடுத்தும் பேச்சைக் கேட்டு வாய்விட்டுச் சிரிக்கும் மஹிந்த உள்ளிட்ட
அரசியற் தலைவர்களின் சமூக சிந்தனையும், புரிதலும் நிச்சயமாகக்
கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.
இவ்வளவு பெரிய
மாபெரும் சிந்தனையாளர்களால்
நாம் ஆளப்படுகின்றோம் என்பதை நினைத்தால் தான் புல்லரிக்கிறது.

நன்றி தோழர் திலீப்குமார் 

0 commentaires :

Post a Comment