11/29/2018

இது சாதனை

இலங்கையைச்சேர்ந்த எமது தமிழ்க்குழந்தை ஒன்று , உயர்தரவகுப்புக்கான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளார் . Die 18-jährige Kantischülerin Arani Jeyakumar hat eine ganz spezielle Maturaarbeit geplant: Sie will zwei Grundschulen in Sri Lanka mit Wasser versorgen.Résultat de recherche d'images pour "இலங்கை நீர் பிரச்சனை"


செங்காளன் மாநிலத்தில் வசதியும் செல்வி ஆரணி ஜெயக்குமார் என்னும் மாணவி “ இலங்கையில் பாடசாலை மாணவருக்கான குடிநீர் நிலமை தொடர்பாக “ விரிவான களாய்வை மேற்க்கொண்டு அது தொடர்பான பூரண அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் . அந்த ஆய்வறிக்கையை பாராட்டிய நிபுணத்துவ ஆசிரியர் குழாம் , அது தொடர்பாக பாராட்டும் தெரிவித்தனர். அத்தோடு இதுபற்றி அறிந்த பிராந்திய பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.அத்தோடு இந்த ஆய்வுபற்றிய பொதுமக்கள் , மற்றும் நலனவிரும்பிகளுக்கான சமர்ப்பணம் எதிர்வரும் 5 ந்திகதி செங்காளன் மானிலத்தில் குறித்த மாணவியால் பாடசாலையின் அனுசரணையோடு இடம்பெற உள்ளது . ஙழைவுக்கட்டணம் மூலம் கிடைக்கும் நிதி , இலங்கையில் உள்ள 300 பள்ளிச்சிறார்களுக்கு ஆரோக்கியமான நீரைப்பெற்றுக்கொள்ள வழியேற்படுத்திக்கொடுக்கப்படும் என்பதனையும் அறியமுடிகிறது. இந்த மாணவியின்
ஆய்வு உதவிநலத்திட்ட ஆய்வு அடிப்படையில் பலரதும் பாராட்டைப்பெறுகிறது . 
மேற்படி ஆரணி ஜெயக்குமார் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான பாராட்டுக்களைத்தெரிவிப்பதோடு , கல்வியில் மேன்மேலும் சிறப்பெய்திட எனது நல்வாழ்த்துக்களும் ஆசிகளும் உரித்தாகுக!

*தகவல் தோழர் விந்தன் சுவிஸ்

0 commentaires :

Post a Comment