எதிரியவன் உன் உயிரைப் பறித்தாலும் உன் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுப்போம். தடைகளைத் தகர்த்தெறிந்து நீ காட்டிய பாதையில் பயணிப்போம்.
கிழக்குப் போராளிகளின் பிரிவின் பின்னர் கிழக்கு மக்களின் சுய நிர்ணயமும் கிழக்கின் அரசியல் சக்தி ஒன்றின் அவசியமும் உணரப்பட்டதன் வெளிப்பாட்டில் உருவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனது முதலாவது தேர்தலிலேயே கிழக்கு மாகாண சபையையும் பல உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றி முப்பது வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக சின்னாபின்னமாக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணம் பல சவால்களுக்கு மத்தியில் துரித அபிவிருத்திப் பாதை நோக்கி கொண்டுசென்றது.
நல்லாட்சி எனும் பெயரில் ஆட்சிக்கு வந்த நயவஞ்சகர்களின் சதியில் சிக்கி சிறையில் எம் தலைவன் சந்திரகாந்தன் அடைக்கப்பட்டாலும் தலைவனின் வழிநடத்தலில் தடம்மாறாமல் கிழக்கின் விடியலுக்காய் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். தலைவனின் தூர நோக்கும், சிந்தனையும், தொண்டர்களின் தன்னம்பிக்கையும் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எமக்கு பாரிய வெற்றியை தேடித்தந்தது.
எம் உணர்வுகளை சிறைப்பிடித்து எம்மை கருவறுக்க நினைத்தார்கள் ஆனால் எமது தொண்டர்கள் விழுதுகளாக வீறுகொண்டெழுந்து விருட்சமாக அசைக்க முடியாத அளவிற்கு கிழைபரப்பியுள்ளனர்.
இந்த வளர்ச்சியானது வெறுமனே வீரப் பேச்சுக்களால் உருவானதல்ல பல உயிர்த் தியாகங்களாலும், இரத்தக்கறைகளாலும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. நவம்பர் 14 கறைபடிந்த ஒரு நாளாக இருக்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் குமாரசுவாமி நந்தகோபன் அவர்கள் கொலை செய்யப்பட்ட நாள்.
நல்லாட்சி எனும் பெயரில் ஆட்சிக்கு வந்த நயவஞ்சகர்களின் சதியில் சிக்கி சிறையில் எம் தலைவன் சந்திரகாந்தன் அடைக்கப்பட்டாலும் தலைவனின் வழிநடத்தலில் தடம்மாறாமல் கிழக்கின் விடியலுக்காய் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். தலைவனின் தூர நோக்கும், சிந்தனையும், தொண்டர்களின் தன்னம்பிக்கையும் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எமக்கு பாரிய வெற்றியை தேடித்தந்தது.
எம் உணர்வுகளை சிறைப்பிடித்து எம்மை கருவறுக்க நினைத்தார்கள் ஆனால் எமது தொண்டர்கள் விழுதுகளாக வீறுகொண்டெழுந்து விருட்சமாக அசைக்க முடியாத அளவிற்கு கிழைபரப்பியுள்ளனர்.
இந்த வளர்ச்சியானது வெறுமனே வீரப் பேச்சுக்களால் உருவானதல்ல பல உயிர்த் தியாகங்களாலும், இரத்தக்கறைகளாலும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. நவம்பர் 14 கறைபடிந்த ஒரு நாளாக இருக்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் குமாரசுவாமி நந்தகோபன் அவர்கள் கொலை செய்யப்பட்ட நாள்.
பத்து முன்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராகவும் கிழக்கு மக்களின் அபிவிருத்திக்காக கிழக்கு மாகாணம் எவ்வாறான திட்டங்களினூடாக துரிதமாக அபிவிருத்தி அடைய முடியுமென ஆராய்ந்து பல திட்டங்களை உருவாக்கி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வளர்ச்சியிலும், கிழக்கு அபிவிருத்தியிலும் முழு மூச்சாக ஈடுபட்டு வந்தவர் எல்லோராலும் செல்லமாக ரகு என்று அழைக்கப்பட்ட குமாரசுவாமி நந்தகோபன் அவர்கள்.
கிழக்கின் துரிதமான அபிவிருத்தியும், கிழக்கு மாகாணத்துக்கான தனித்துவ கட்சியும் தலைமையினையும் சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கட்சிக்காகவும், கிழக்கின் அபிவிருத்திக்காகவும் அயராது பாடுபட்ட ரகு அவர்களின் உயிர் பறிக்கப்பட்டது. ரகு அவர்களின் உயிர் பறிக்கப்படவில்லை எனில் கிழக்கு மாகாணம் இன்னும் பல அபிவிருத்திகளைக் கண்டிருக்கும். ரகு அவர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகள், வெளிநாட்டுப் பிரமுகர்களோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்ததோடு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் பல திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.
இத்தருணத்தில் ரகு அவர்களைப்பற்றியும் அவரது பின்னணிபற்றியும் பார்க்கவேண்டும். கிழக்கிலங்கை திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரகு அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை திருமலை புனித சென்யோசப் கல்லூரியிலும் இடைநிலைக்கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலும் உயர்தரக்கல்வியை மட்/சிவானந்தா கல்லூரியிலும் கற்று மொரட்டுவ பல்கலைக்கழகத்திலும் தியத்தலாவை நிலஅளவையாளர் கல்லூரியிலும் பட்டப்படிப்பை முடித்து திருகோணமலையில் சேவையாற்றியிருந்தார்.
சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ரகு அவர்கள் தியாக தீபம் திலிபனுடன் இணைந்து உண்ணாவிரத்தினை மேற்கொண்டார். இவரது இளம் வயது காரணமாக இவரது உண்ணாவிரதத்தினை தொடர மேலிடம் விடவில்லை. அதனால் உண்ணாவிரத்தினை நிறுத்தியிருந்தார்.
பின்னர் அவுஸ்ரேலியா சென்றிருந்த ரகு அவர்கள் அங்கே பொறியியலாளர் பட்டம் பெற்றார். அங்கிருந்து விடுதலைப் போராட்டத்துக்காக பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தார்.
விடுதலைப்புலிகளிலிருந்து கருணா அம்மான் பிரிந்தபோது அதனை கடுமையாக எதிர்த்ததுடன் இரு தரப்பையும் இணைப்பதற்கு சமரச பேச்சுக்களை நடாத்தினார். அம்முயற்சி கைகூடாததனால் உடனடியாகவே தாயத்துக்கு வந்து நிலமைகளை நேரடியாக அவதானித்தார்.
கிழக்குக்கான தனியான அரசியல்பாதை ஒன்றை உருவாக்கவெண்டிய தேவையினை உணர்ந்தார் அதன் பயனாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை உருவாக்கினார். இக் கட்சியானது பல மாவீரர்களின் உதிரத்தால் உருவாக்கப்பட்ட கட்சி என்றால் மிகையாகாது.
ரகுவின் தலைமையில் 2008.03.10ம் ஆண்டு மட்டக்களப்பு உள்ளூரட்சிமன்றத்தேர்தலில் தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சி களமிறக்கி அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் அமோக வெற்றி பெற்றது. மேலும் மீண்டும் 2008.05.10ம் கிழக்கு மாகாணசபைத்தேர்லில் ஐக்கிய மக்கள் சுகந்திரக்கூட்டமைப்புடன் இணைந்து களமிறங்கி அதிகப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியமைக்க வழிசமைத்தார்.
மாகாணசபை ஆட்சியை வைத்துக்கொண்டு சாணக்கியமான அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் சர்வதேச நாடுகளுடனான தொடர்பினை ஏற்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கையாண்டதுடன், மாகாணசபைக்கூடாக பொலிஸ், காணி அதிகாரங்களை பெறுவதற்கான இராஜதந்திர முயற்சிகளையும் மேற்கொண்டார்.
மாகாண சபைக்கு காணி அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்பதற்கு செயல்வடிவமும் கொடுத்தார்.
மாகாண சபைக்கு காணி அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்பதற்கு செயல்வடிவமும் கொடுத்தார்.
உயர்பாதுகாப்பு வலயமாக வர்த்தகமானியில் அறிவிக்கப்பட்ட மூதூர்கிழக்கு மற்றும் சம்பூர் மக்களின் பூர்வீகநிலத்தை அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளதை சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார். குறிப்பாக அமெரிக்கா, இந்தியா ,கனடா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களுடன் பேசி இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து மிகவும் குறுகிய காலத்தில் மூதூர் கிழக்கில் மக்களை குடியேற்றினார். மக்களோடு மக்களாக இருந்து குடியேறிய மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் அரசாங்கத்திடமிருந்தே பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை வரலாற்றில் மக்களை வெளியேற்றிவிட்டு உயர்பாதகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை துரிதகதியில் மீட்டு மக்களை குடியமர்த்திய முதலாவது தலைவர் எனும் பெருமைக்குரியவராகின்றார். ஒரு சமயம் வானொலிச்சேவைக்கு வழங்கிய பேட்டியில் “என்னை மூதூர் கிழக்கை குடியேற்றத்தூண்டிய விடயம் ஒர் வயதான கட்டப்பறிச்சான் அம்மா தனது கைகளை பற்றி தம்பி எங்களுக்கு எங்கள் மண் வேண்டும் நாங்கள் வாழ்வதற்காக அல்ல சாவதற்காவது எங்கள் மண்ணை மீட்டுத்தாருங்கள்” என்று கூறிய வார்த்தைகள் தன்னை மிகவும் பாதித்ததாகவும் அதனாலேயே அம்மக்களின் மீழ் குடியேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்ததாகவும் கூறியிருந்தார்.
2008ம் ஆண்டு ஆவணி மாதம் 08 திகதி கட்டைபறிச்சானில் மக்களைக் குடியேற்றியதுடன் 3 மாதங்களில் சம்பூர் மக்களையும் குடியேற்றுவேன் என கூறியிருந்தார். அவரின் அந்த வார்த்தைகளும் அர்ப்பணிப்பும்தான் அவரின் உயிரைப்பறித்தது என்று அவரின் இறுதிக்கிரியையில் கலந்துகொண்ட மக்கள் அழுது புலம்பினர்.
தந்திரோபாயங்களை வகுப்பதனூடாக 13ம் திருத்தக்சட்டத்தில் காணி பொலிஸ் அதிகாரத்தை யுடைய முழுமையான வினைத்திறனான மாகாணசபை ஒன்றை ஸ்தாபிக்கலாம் என்று பிரித்தானிய வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். அச் செவ்வியில் பல விடயங்களை வெளியிட்டிருந்தார். இதன் விளைவாகவே விளைவாகவே 2008 நவம்பர் மாதம் 14ம் திகதி இலக்கு வைக்கப்பட்டார்.
இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது பல நாட்டு இராஜதந்திரிகளும் அனுதாபங்களை தெரிவித்திருந்தனர். குறிப்பாக அமெரிக்காவின் உயர்ஸ்தானிகர் றொபேட் பிளேக் கூறுகையில் “நானும் எனது நண்பர்களும் நந்தகோபனை சந்திப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தது பல சிக்கலான கஷ்டங்களை ஆழமாக சிந்திக்கும் மனப்பாங்கு படைத்தவராக இருந்ததை நாங்கள் கண்டோம். அவருடைய துணிச்சலை கண்டு நாங்கள் பெருமைப்பட்டோம்.இலங்கையின் எல்லா இன மக்களும் இலங்கையில் மதிப்புக்கொண்டவர்களாகவும் சமூகத்தில் எல்லா விழுமியங்களையும் பின்பற்றுபவார்களாகவும் வாழ்வதற்காக ஒரு நிலையான ஏற்பாடுகளை செய்து சமூகத்தை கட்டியெழுப்ப மிகவும் ஆசை கொண்டவராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டதை நாம் காணக்கூடியதாக இருந்தது” எனக் கூறிப்பிட்டிருந்தார்.
சந்ரு
0 commentaires :
Post a Comment