11/21/2018

சந்திரகாந்தனின் வழக்கு ஜன. 9ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் (பிள்ளையான்) உண்மை விளம்பல் விசாரணை  பெறப்பட்டு  எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரையும் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Résultat de recherche d'images pour "pilayan"

பிள்ளையான் இன்றைய தினம் (21) விடுதலை செய்யப்படுவார் என்ற பலத்த எதிர்பார்ப்புடன் மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத்தொகுதிக்கு முன்னால் கட்சி உயர்பீட உறுப்பினர்கள்இ பொதுமக்கள்இ ஆதரவாளர்கள் காத்திருந்த நிலையிலேயேஇ மீண்டும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுஇ 11.10.2015 அன்று பிள்ளையான் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

0 commentaires :

Post a Comment