11/29/2018

இலங்கையில் ரணில் மீண்டும் பிரதமராக ஆதரவு - ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்

ரணில் விக்ரமசிங்க தலைமையில் அக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்பிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீளமைப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு இன்று வியாழக்கிழமை, இக்கூட்டமைப்பு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதும், மேற்படி கடிதத்தில் நாடளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ். வியாழேந்திரன் ஆகியோர் கையெழுத்திடவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பொருட்டு அண்மையில் அணி மாறி, பிரதியமைச்சுப் பதவியினைப் பெற்றுக் கொண்டார்.
அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், அண்மைக்காலமாக கட்சியுடன் முரண்படும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

இது சாதனை

இலங்கையைச்சேர்ந்த எமது தமிழ்க்குழந்தை ஒன்று , உயர்தரவகுப்புக்கான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளார் . Die 18-jährige Kantischülerin Arani Jeyakumar hat eine ganz spezielle Maturaarbeit geplant: Sie will zwei Grundschulen in Sri Lanka mit Wasser versorgen.Résultat de recherche d'images pour "இலங்கை நீர் பிரச்சனை"


செங்காளன் மாநிலத்தில் வசதியும் செல்வி ஆரணி ஜெயக்குமார் என்னும் மாணவி “ இலங்கையில் பாடசாலை மாணவருக்கான குடிநீர் நிலமை தொடர்பாக “ விரிவான களாய்வை மேற்க்கொண்டு அது தொடர்பான பூரண அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் . அந்த ஆய்வறிக்கையை பாராட்டிய நிபுணத்துவ ஆசிரியர் குழாம் , அது தொடர்பாக பாராட்டும் தெரிவித்தனர். அத்தோடு இதுபற்றி அறிந்த பிராந்திய பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.அத்தோடு இந்த ஆய்வுபற்றிய பொதுமக்கள் , மற்றும் நலனவிரும்பிகளுக்கான சமர்ப்பணம் எதிர்வரும் 5 ந்திகதி செங்காளன் மானிலத்தில் குறித்த மாணவியால் பாடசாலையின் அனுசரணையோடு இடம்பெற உள்ளது . ஙழைவுக்கட்டணம் மூலம் கிடைக்கும் நிதி , இலங்கையில் உள்ள 300 பள்ளிச்சிறார்களுக்கு ஆரோக்கியமான நீரைப்பெற்றுக்கொள்ள வழியேற்படுத்திக்கொடுக்கப்படும் என்பதனையும் அறியமுடிகிறது. இந்த மாணவியின்
ஆய்வு உதவிநலத்திட்ட ஆய்வு அடிப்படையில் பலரதும் பாராட்டைப்பெறுகிறது . 
மேற்படி ஆரணி ஜெயக்குமார் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான பாராட்டுக்களைத்தெரிவிப்பதோடு , கல்வியில் மேன்மேலும் சிறப்பெய்திட எனது நல்வாழ்த்துக்களும் ஆசிகளும் உரித்தாகுக!

*தகவல் தோழர் விந்தன் சுவிஸ்

»»  (மேலும்)

11/26/2018

இந்தியா சத்தீஸ்கர் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சண்டையில் போலீசார் இருவர்  அடைந்துள்ளனர்.சத்தீஸ்கர், மாவோயிஸ்டுகள், துப்பாக்கிச் சண்டை,  சத்தீஸ்கர் என்கவுன்டர், கிஷ்தாராம் வனப்பகுதி, தெலுங்கானா - சத்தீஸ்கர் எல்லை, வனப்பகுதி,
Chhattisgarh, Maoists, gunfire, forests, Chhattisgarh encounters, Kishtarm forest area, Telangana - Chhattisgarh border,

தெலுங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் உள்ள கிஷ்தாராம் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 மாவோயிஸ்டுகளும், 2 போலீசாரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

மேலும் சில மாவோயிஸ்டுகள் வனப்பகுதிக்குள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. துப்பாக்கிச் சண்டையும் தொடர்ந்து நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
»»  (மேலும்)

11/25/2018

’மாவீரர் நினைவு தின நிகழ்வுகள் நடைபெறாது’

மாவீரர் நினைவு தின நிகழ்வுகள் நடத்துவது குறித்துஇ அரசாங்கத்தால்இ எவ்வித அனுமதிகளும் வழங்கப்படவில்லையெனஇ அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெலஇ ​இன்று (24)  தெரிவித்தார்.
அத்துடன்இ அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையுமில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

  • மாவீரர் நினைவு தின நிகழ்வுகள் நடத்துவது குறித்துஇ அரசாங்கத்தால்இ எவ்வித அனுமதிகளும் வழங்கப்படவில்லையெனஇ அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெலஇ ​இன்று (24)  தெரிவித்தார்.
    அத்துடன்இ அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையுமில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

11/21/2018

சந்திரகாந்தனின் வழக்கு ஜன. 9ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் (பிள்ளையான்) உண்மை விளம்பல் விசாரணை  பெறப்பட்டு  எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரையும் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Résultat de recherche d'images pour "pilayan"

பிள்ளையான் இன்றைய தினம் (21) விடுதலை செய்யப்படுவார் என்ற பலத்த எதிர்பார்ப்புடன் மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத்தொகுதிக்கு முன்னால் கட்சி உயர்பீட உறுப்பினர்கள்இ பொதுமக்கள்இ ஆதரவாளர்கள் காத்திருந்த நிலையிலேயேஇ மீண்டும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுஇ 11.10.2015 அன்று பிள்ளையான் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

»»  (மேலும்)

11/20/2018

நாபாவின் உருவச்சிலை

L’image contient peut-être : 1 personne, debout et plein air
திருகோணமலை 19/11/2018 அன்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி நடத்திய தோழமை தினத்தில் கடல்முக வீதி மாவட்ட காரியாலயத்தில் தோழர் பத்மநாபா அவர்களின் உருவச்சிலை திறக்கப்பட்டது. அவரது சிலைக்கு  மாலை அணிவித்ததுடன் குளக்கோட்டன் மண்டபத்தில் தோழமை தின நிகழ்வு நடத்தப்பட்டு மக்களுக்கு கண் பரிசோதனை செய்து இலவச மூக்குக்கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. இவ்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.   
»»  (மேலும்)

11/18/2018

ரணில் எனும் பச்சைக் கள்ளன்?

Résultat de recherche d'images pour "ரணில்"இலங்கை அரசியலில் சுமார் நாற்பதாண்டுகளிற்கு மேலான அனுபவமுள்ள ரணில் விக்கிரமசிங்க இதுவரை அரசியலில் சாதித்தது தான் என்ன? இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவல்ல முதிர்ச்சிடைந்த தலைமைப் பண்பு (statesmanship) அவரிடம் இருக்கிறதா? இலங்கையையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்த வல்ல ஆற்றல் (ability) அவரிடம் இருக்கிறதா போன்ற கேள்விகள் வியாபிக்கத் தொடங்கியிருக்கிறது.

கடந்த கால் நூற்றாண்டிற்கு மேலாக, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை தலைமை தாங்கி வரும் ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் களங்களில் அந்தக் கட்சிக்கு ஈட்டிக் கொடுத்த தோல்விகள் ஏராளம். 

1994ல் ஐதேக கட்சியின் தலைமைப் பொறுப்பை ரணில் ஏற்ற பின்னர், அந்தக் கட்சி எதிர்கொண்ட ஆறு பொதுத் தேர்தல்களில் நான்கிலும், ஐந்து ஜனாதிபதி தேர்தல்களில் நான்கிலும் ஐதேக தோல்வியைத் தழுவியிருக்கிறது. இதைத் தவிர இந்தக் காலப் பகுதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களிலும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களிலும் ரணிலின் பச்சைக் கட்சி தோல்விக்கு மேல் தோல்விகளை சந்தித்திருக்கிறது.

1977 பொதுத் தேர்தலில், கொழும்பை அண்டிய பியகம தேர்தல் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான ரணிலை, பிரதி வெளி விவகார அமைச்சராக நியமித்தார் அவரது அங்கிளான ஜனாதிபதி ஜெயவர்த்தனா. 

கொழும்பு ரோயல் கல்லூரியில் அனுர பண்டாரநாயக்காவோடும் தினேஷ் குணவர்தனவோடும் ஒரே வகுப்பில் கல்வி கற்ற ரணில் விக்கிரமசிங்கவை, அமைச்சரவை அந்தஸ்துள்ள கல்வி, இளைஞர் விவகார மற்றும் தொழில்வாய்ப்புக்கள் அமைச்சராக நியமிக்க ஜெயவர்தனவிற்கு அதிக காலம் எடுக்கவில்லை. 

எண்பதுகளில் ரணில் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தான் பாடசாலைகளில் ஒப்படை (assignment) முறை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் மீள பெறப்பட்டது.

முப்பது வயதில் இலங்கையின் மிகவும் இளமையான Cabinet அமைச்சராக பதவியேற்ற ரணில், 1989ல் நடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஜனாதிபதி பிரேமதாசவின் அரசில் ஜதேகவின் சபை முதல்வராகவும், தொழிற்துறை, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பதவியேற்றார்.

1993ல் பிரேமதாச கொல்லப்பட,  DB விஜேதுங்க ஜனாதிபதியாக, ரணில் முதல் முறையாக பிரதமரானார். 1994ல் ஐதேகவை விட்டு, பிரிந்திருந்த காமினி திசைநாயக்க மீண்டும் கட்சியில் இணைந்து, இரண்டே இரண்டு வாக்குகளால் ரணிலை தோற்கடித்து கட்சியின் தலைவராகி, சந்திரிக்கா பிரதமான 1994 தேர்தலில் எதிர்க் கட்சித் தலைவரானார். 

1994 சனாதிபதி தேர்தலிற்கு சில மாதங்களிற்கு முன்னர் பேலியகொடவையில் காமினி கொல்லப்பட, சந்திரிக்காவை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கொள்ள காமினியின் மனைவி சிறிமாவை தேர்தல் களத்திற்கு அனுப்பி வைத்தார் ரணில் என்ற ஐதேக தலைவர். பிறரை களத்திற்கு அனுப்பி விட்டு தான் ஒதுங்கியிருக்கும் அரிய தலைமைத்துவ பண்பை 2010லும் 2015லும் ரணில் மீண்டும் மீண்டும் வெளிக்காட்ட தவறவில்லை.

2000 ஆண்டளவில் சந்திரிக்கா முன் வைத்த அரசியல் யாப்பு யோசனைகளை ஐதேகவும் இணைந்து தான் தயாரித்தது.  இறுதியில் பாராளுமன்றில் புதிய அரசியல் யாப்பை ஒரு சட்டவாக்கமாக முன்வைக்க சந்திரிக்கா  முன்வந்த போது, அதை சட்டமாக நிறைவேற்றக் கூடாது சட்டவலுவற்ற ஒரு White Paperஆக தான் முன் வைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் குழப்பம் விளைவித்து, பாராளுமன்றத்தில் அரசியல் யாப்பு யோசனைகளை தீவைத்து கொளுத்திய descentஆன அரசியல்வாதி தான் ரணில் விக்கிரமசிங்க.

அதே காலப்பகுதியில் சந்திரிக்காவும் கதிர்காமரும் நோர்வேயை இலங்கை இனப் பிரச்சினையை தீர்க்க, விடுதலைப் புலிகளுடன் பேச மத்தியஸ்தம் வகிக்க அழைத்திருந்தார்கள். கொழும்பு வந்திருந்த எரிக் சொல்ஹேய்மின் நோர்வே தூதுக்குழு மரியாதை நிமித்தம் எதிர்க்கட்சித் தலைவரான ரணிலையும் சந்தித்திருந்தது. தங்களுடனான சந்திப்பில் ரணில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்று நோர்வே தரப்பினர் பின்னர் எழுதிய To end a Civil War எனும் புத்தகத்தில் பதிவு செய்தார்கள்.

தொண்ணூறுகளின் கடைசிக் காலத்திலிருந்து நோர்வேயின் அனுசரணையில் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை சந்திரிக்கா ஆரம்பித்திருக்க, 2001 இறுதியில் பிரதமாரான ரணில், ஜனாதிபதி சந்திரிக்காவை பேச்சுவார்த்தைகளில் இருந்து ஓரம் கட்டியதும் பேச்சுவார்த்தைகள் குழம்புவதற்கான பிரதான காரணிகளில் ஒன்று என்று To end a Civil War எனும் புத்தகத்தில் இடம்பெறும் பலரது கருத்துக்கள் சுட்டிக் காட்டுகின்றன.




1999ல் தன்மீது நடந்த தற்கொலைத் தாக்குதலிற்கு பின்னரும் தொடர்ந்து புலிகளுடன் பேச வேண்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற ஓர்மத்துடன் இருந்த சந்திரிக்காவை ஓரம் கட்டிய ரணில், பேச்சிவார்த்தை மேடைகளில் புலிகள் விடுத்த கோரிக்கைகளை நிராகரிக்க கூறிய சாட்டு “ஜனாதிபதி ஒத்துழைக்க மறுக்கிறார்”. 

மறுவளமாக விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த சர்வதேச வலைப்பின்னலை பின்னிக் கொண்டும், கருணாவின் பிரிவிற்கு அனுசரணை வழங்கியும், புலிகளை வெறுப்படைய வைத்து, அன்ரன் பாலசிங்கம் 2005 மாவீரர் தின உரையில் “ரணில் ஒரு குள்ளநரி” என்று வர்ணிக்குமளவிற்கு புலிகளின் வெறுப்பை சம்பாதித்திருந்தார்.

விடுதலைப் புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் எட்டிய SIHRN உட்பட எந்த இணக்கப்பாடுகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதும், 2002ல் வொஷிங்டனில் நடந்த இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான மாநாட்டிற்கு புலிகள் அழைக்கப்படாமையில் ரணில் பின்புலத்தில் ஆற்றிய பங்கையும் வரலாறு பதிவு செய்துவிட்டுத் தான் சென்றுள்ளது.

2005 ஜனாதிபதி தேர்தலில், சமஷ்டி தருவேன் என்னு தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணில் பகிரங்கமாக குறிப்பிட்டிருக்க, மகிந்தவிற்கு வலுச் சேர்க்கும் வண்ணம் அமைந்த புலிகளின் தேர்தல் பகீஷ்கரிப்பு, ரணிலை 185,000 வாக்குகளால் தோல்வியடைய வைத்தது.

2015ல் சந்திரிக்காவோடு இணைந்து, மைத்ரியை பொது வேட்பாளராக முன்னிறுத்தி, சிங்கள வாக்குகளை பிரித்து, சிறுபான்மையினரின் ஒன்றுபட்ட வாக்குபலத்துடன் ஜனாதிபதி தேர்தலில் மைத்ரியை வெல்ல வைத்தது ரணிலின் சாணக்கியம் தான்.

ஜனவரி 8, 2015ல் மைத்ரி ஜனாதிபதியாக தெரிவாக, அலரி மாளிகையில் இருந்த மகிந்தவை ஹெலிக்கொப்டரில் ஏற்றி தங்காலைக்கு அனுப்ப வழிசமைத்தது என்னவோ அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் தான்.

2015ன் ஆரம்பத்தில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளாமல், பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெற்று பிரதமரான ரணில் முன்மொழிந்த 100 நாள் வேலைத் திட்டத்தை மறக்கத் தான் முடியுமா? அந்த நூறு நாள் வேலைத்திட்டத்தில் அடங்காத தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அளித்த வாக்குறுதிகள் எதுவும் இன்றுவரை முழுமையாக நிறைவேற்றப்பட்டனவா? 2015 செப்டெம்பரில் ஐநாவில் இலங்கையும் இணைந்து நிறைவேற்றிய 30-1 நிறைவேற்ற படாமைக்கு பொறுப்பு கூற வேண்டியது ரணில் இல்லையா?

2015ன் ஆரம்பத்தில் இலங்கையில் நிலவிய நல்லாட்சி பற்றிய பலத்த எதிர்பார்ப்புக்களை, தனது செயல்திறனற்ற
தலைமைத்துவத்தால் நாசமாக்கியது ரணில் இல்லையா? மகிந்த தரப்பினர் மீது சுமத்தப்பட்ட எந்த வழக்குகளின் விசாரணைகளையும் முழுமையடைய விடாமல் ரணில் தடங்கல் செய்கிறார் என்று மைத்ரி குற்றம் சாட்டியது நமக்கு மறந்து விட்டதா?

2015 நவம்பரில் அரசியல் கைதிகளை இன்னும் ஒரு வாரத்தில் விடுதலை செய்து விடுவேன் என்று கூட்டமைப்பினரிற்கு வாக்குறுதியளித்தத ரணில், இன்று வரை அதை நிறைவேற்றவில்லை. படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காணிகளும் விடுவிக்கப்படவில்லை, போரினால் அழிவுண்ட வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்ய புலம்பெயர்ந்த தமிழர்களை இணைத்து செயலாற்ற முன்வந்த சர்வதேச முன்னெடுப்புக்களும் முன்னகரவில்லை, இப்படி ரணில் செய்வதாக சொல்லி செய்யாமல் போன கருமங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

அன்றிலிருந்து இன்றுவரை ரணிலின் modus operandi என்பது காலத்தை கடத்துவது தான். கோரிக்கைகள் அனைத்தையும் அனுதாபத்தோடு கேட்பது, கட்டாயம் நிறைவேற்றுவேன் என்று உறுதியளிப்பது, ஜனாதிபதியை சாட்டு சொல்வது, காலத்தை இழுத்தடிப்பது, எதையும் செய்யாமல் இருப்பது, தனது பதவியை தக்க வைப்பது, அவ்வளவு தான்.

புதிய அரசியல்யாப்பு விவகாரமும் இந்த காலங் கடத்தும் கைங்கரியத்தின் இன்னுமொரு வடிவம் தான். ஐதேவும் சுதந்திரக் கட்சியும் இணைந்த நல்லாட்சியின் ஆரம்பத்தில், சந்திரிக்காவின் 2000ம் ஆண்டு அரசியல் யாப்பு யோசனைகளை மீண்டும் பாராளுமன்றத்தில் முன்வைத்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றியிருக்கலாம். அதைச் செய்யாமல் மக்கள் கருத்தறிய மாவட்டம் மாவட்டமாக போய், எல்லா தரப்புக்களையும் அழைத்து கருத்துக் கேட்டு, வட மாகாண சபையையும் தமிழ் மக்கள் பேரவையையும் யோசனைகளை வரையப் பண்ணி, காலத்தை இழுத்தடித்தது தான் மிச்சம், உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை.

பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டாலும், ரணில் நியமித்த மத்திய வங்கி ஆளுநரான மகேந்திரனின் கைவண்ணத்தில் மத்திய வங்கி பிணைகளில் நடந்த  ஊழல், இலங்கையின் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்திக்க வைத்தது. விசாரணைகளின் விளைவாக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மகேந்திரனை சிங்கப்பூரிற்கு தப்பி ஓட வைத்த Mr. Clean தான் ரணில் விக்கிரமசிங்க.

தீர்க்கமான முடிவுகளை எடுத்து செயலாற்றும் வலுவற்ற ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதன் மூலமாக தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளிற்கு தீர்வு வரும் என்ற நம்பிக்கை ஏனோ வர மறுக்கிறது. 

இன்றைய இலங்கையின் குழப்பகரமான அரசியல் களத்தில் மிகவும் நிதானமாகவும் சாணக்கியமாகவும் காய்களை நகர்த்தி, உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிடமும் நன்மதிப்பை சம்பாதிருக்கும் தமிழ் தலைமைகள், இனிவரும் நாட்களில் எடுக்கும் முடிவுகள் மேற்கூறிய வரலாற்றை கவனத்தில் எடுத்தே  எடுப்பார்கள், எடுக்க வேண்டும்  என்ற நம்பிக்கை மட்டும் எஞ்சியிருக்கிறது.

நம்பிக்கை தானே வாழ்க்கை  
- Jude Prakash
»»  (மேலும்)

11/14/2018

ரகு நினைவுதினம்-பத்தாண்டுகள்

எதிரியவன் உன் உயிரைப் பறித்தாலும் உன் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுப்போம். தடைகளைத் தகர்த்தெறிந்து நீ காட்டிய பாதையில் பயணிப்போம். L’image contient peut-être : 2 personnes, personnes souriantes
கிழக்குப் போராளிகளின் பிரிவின் பின்னர் கிழக்கு மக்களின் சுய நிர்ணயமும் கிழக்கின் அரசியல் சக்தி ஒன்றின் அவசியமும் உணரப்பட்டதன் வெளிப்பாட்டில் உருவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனது முதலாவது தேர்தலிலேயே கிழக்கு மாகாண சபையையும் பல உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றி முப்பது வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக சின்னாபின்னமாக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணம் பல சவால்களுக்கு மத்தியில் துரித அபிவிருத்திப் பாதை நோக்கி கொண்டுசென்றது.
நல்லாட்சி எனும் பெயரில் ஆட்சிக்கு வந்த நயவஞ்சகர்களின் சதியில் சிக்கி சிறையில் எம் தலைவன் சந்திரகாந்தன் அடைக்கப்பட்டாலும் தலைவனின் வழிநடத்தலில் தடம்மாறாமல் கிழக்கின் விடியலுக்காய் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். தலைவனின் தூர நோக்கும், சிந்தனையும், தொண்டர்களின் தன்னம்பிக்கையும் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எமக்கு பாரிய வெற்றியை தேடித்தந்தது. 
எம் உணர்வுகளை சிறைப்பிடித்து எம்மை கருவறுக்க நினைத்தார்கள் ஆனால் எமது தொண்டர்கள் விழுதுகளாக வீறுகொண்டெழுந்து விருட்சமாக அசைக்க முடியாத அளவிற்கு கிழைபரப்பியுள்ளனர்.
இந்த வளர்ச்சியானது வெறுமனே வீரப் பேச்சுக்களால் உருவானதல்ல பல உயிர்த் தியாகங்களாலும், இரத்தக்கறைகளாலும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. நவம்பர் 14 கறைபடிந்த ஒரு நாளாக இருக்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் குமாரசுவாமி நந்தகோபன் அவர்கள் கொலை செய்யப்பட்ட நாள்.
பத்து முன்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராகவும் கிழக்கு மக்களின் அபிவிருத்திக்காக கிழக்கு மாகாணம் எவ்வாறான திட்டங்களினூடாக துரிதமாக அபிவிருத்தி அடைய முடியுமென ஆராய்ந்து பல திட்டங்களை உருவாக்கி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வளர்ச்சியிலும், கிழக்கு அபிவிருத்தியிலும் முழு மூச்சாக ஈடுபட்டு வந்தவர் எல்லோராலும் செல்லமாக ரகு என்று அழைக்கப்பட்ட குமாரசுவாமி நந்தகோபன் அவர்கள்.
கிழக்கின் துரிதமான அபிவிருத்தியும், கிழக்கு மாகாணத்துக்கான தனித்துவ கட்சியும் தலைமையினையும் சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கட்சிக்காகவும், கிழக்கின் அபிவிருத்திக்காகவும் அயராது பாடுபட்ட ரகு அவர்களின் உயிர் பறிக்கப்பட்டது. ரகு அவர்களின் உயிர் பறிக்கப்படவில்லை எனில் கிழக்கு மாகாணம் இன்னும் பல அபிவிருத்திகளைக் கண்டிருக்கும். ரகு அவர்கள் வெளிநாட்டு  ராஜதந்திரிகள், வெளிநாட்டுப் பிரமுகர்களோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்ததோடு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் பல திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.
இத்தருணத்தில் ரகு அவர்களைப்பற்றியும் அவரது பின்னணிபற்றியும் பார்க்கவேண்டும். கிழக்கிலங்கை திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரகு அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை திருமலை புனித சென்யோசப் கல்லூரியிலும் இடைநிலைக்கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலும் உயர்தரக்கல்வியை மட்/சிவானந்தா கல்லூரியிலும் கற்று மொரட்டுவ பல்கலைக்கழகத்திலும் தியத்தலாவை நிலஅளவையாளர் கல்லூரியிலும் பட்டப்படிப்பை முடித்து திருகோணமலையில் சேவையாற்றியிருந்தார்.
சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ரகு அவர்கள் தியாக தீபம் திலிபனுடன் இணைந்து உண்ணாவிரத்தினை மேற்கொண்டார். இவரது இளம் வயது காரணமாக இவரது உண்ணாவிரதத்தினை தொடர மேலிடம் விடவில்லை. அதனால் உண்ணாவிரத்தினை நிறுத்தியிருந்தார்.
பின்னர் அவுஸ்ரேலியா சென்றிருந்த ரகு அவர்கள் அங்கே பொறியியலாளர் பட்டம் பெற்றார். அங்கிருந்து விடுதலைப் போராட்டத்துக்காக பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தார்.
விடுதலைப்புலிகளிலிருந்து கருணா அம்மான் பிரிந்தபோது அதனை கடுமையாக எதிர்த்ததுடன் இரு தரப்பையும் இணைப்பதற்கு சமரச பேச்சுக்களை நடாத்தினார். அம்முயற்சி கைகூடாததனால் உடனடியாகவே தாயத்துக்கு வந்து நிலமைகளை நேரடியாக அவதானித்தார்.
கிழக்குக்கான தனியான அரசியல்பாதை ஒன்றை உருவாக்கவெண்டிய தேவையினை உணர்ந்தார் அதன் பயனாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை உருவாக்கினார். இக் கட்சியானது பல மாவீரர்களின் உதிரத்தால் உருவாக்கப்பட்ட கட்சி என்றால் மிகையாகாது.
ரகுவின் தலைமையில் 2008.03.10ம் ஆண்டு மட்டக்களப்பு உள்ளூரட்சிமன்றத்தேர்தலில் தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சி களமிறக்கி அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் அமோக வெற்றி பெற்றது. மேலும் மீண்டும் 2008.05.10ம் கிழக்கு மாகாணசபைத்தேர்லில் ஐக்கிய மக்கள் சுகந்திரக்கூட்டமைப்புடன் இணைந்து களமிறங்கி அதிகப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியமைக்க வழிசமைத்தார்.
மாகாணசபை ஆட்சியை வைத்துக்கொண்டு சாணக்கியமான அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் சர்வதேச நாடுகளுடனான தொடர்பினை ஏற்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கையாண்டதுடன், மாகாணசபைக்கூடாக பொலிஸ், காணி அதிகாரங்களை பெறுவதற்கான இராஜதந்திர முயற்சிகளையும் மேற்கொண்டார்.
மாகாண சபைக்கு காணி அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்பதற்கு செயல்வடிவமும் கொடுத்தார்.
உயர்பாதுகாப்பு வலயமாக வர்த்தகமானியில் அறிவிக்கப்பட்ட மூதூர்கிழக்கு மற்றும் சம்பூர் மக்களின் பூர்வீகநிலத்தை அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளதை சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார். குறிப்பாக அமெரிக்கா, இந்தியா ,கனடா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களுடன் பேசி இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து மிகவும் குறுகிய காலத்தில் மூதூர் கிழக்கில் மக்களை குடியேற்றினார். மக்களோடு மக்களாக இருந்து குடியேறிய மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் அரசாங்கத்திடமிருந்தே பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை வரலாற்றில் மக்களை வெளியேற்றிவிட்டு உயர்பாதகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை துரிதகதியில் மீட்டு மக்களை குடியமர்த்திய முதலாவது தலைவர் எனும் பெருமைக்குரியவராகின்றார். ஒரு சமயம் வானொலிச்சேவைக்கு வழங்கிய பேட்டியில் “என்னை மூதூர் கிழக்கை குடியேற்றத்தூண்டிய விடயம் ஒர் வயதான கட்டப்பறிச்சான் அம்மா தனது கைகளை பற்றி தம்பி எங்களுக்கு எங்கள் மண் வேண்டும் நாங்கள் வாழ்வதற்காக அல்ல சாவதற்காவது எங்கள் மண்ணை மீட்டுத்தாருங்கள்” என்று கூறிய வார்த்தைகள் தன்னை மிகவும் பாதித்ததாகவும் அதனாலேயே அம்மக்களின் மீழ் குடியேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்ததாகவும் கூறியிருந்தார்.
2008ம் ஆண்டு ஆவணி மாதம் 08 திகதி கட்டைபறிச்சானில் மக்களைக் குடியேற்றியதுடன் 3 மாதங்களில் சம்பூர் மக்களையும் குடியேற்றுவேன் என கூறியிருந்தார். அவரின் அந்த வார்த்தைகளும் அர்ப்பணிப்பும்தான் அவரின் உயிரைப்பறித்தது என்று அவரின் இறுதிக்கிரியையில் கலந்துகொண்ட மக்கள் அழுது புலம்பினர்.
தந்திரோபாயங்களை வகுப்பதனூடாக 13ம் திருத்தக்சட்டத்தில் காணி பொலிஸ் அதிகாரத்தை யுடைய முழுமையான வினைத்திறனான மாகாணசபை ஒன்றை ஸ்தாபிக்கலாம் என்று பிரித்தானிய வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். அச் செவ்வியில் பல விடயங்களை வெளியிட்டிருந்தார். இதன் விளைவாகவே விளைவாகவே 2008 நவம்பர் மாதம் 14ம் திகதி இலக்கு வைக்கப்பட்டார்.
இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது பல நாட்டு இராஜதந்திரிகளும் அனுதாபங்களை தெரிவித்திருந்தனர். குறிப்பாக அமெரிக்காவின் உயர்ஸ்தானிகர் றொபேட் பிளேக் கூறுகையில் “நானும் எனது நண்பர்களும் நந்தகோபனை சந்திப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தது பல சிக்கலான கஷ்டங்களை ஆழமாக சிந்திக்கும் மனப்பாங்கு படைத்தவராக இருந்ததை நாங்கள் கண்டோம். அவருடைய துணிச்சலை கண்டு நாங்கள் பெருமைப்பட்டோம்.இலங்கையின் எல்லா இன மக்களும் இலங்கையில் மதிப்புக்கொண்டவர்களாகவும் சமூகத்தில் எல்லா விழுமியங்களையும் பின்பற்றுபவார்களாகவும் வாழ்வதற்காக ஒரு நிலையான ஏற்பாடுகளை செய்து சமூகத்தை கட்டியெழுப்ப மிகவும் ஆசை கொண்டவராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டதை நாம் காணக்கூடியதாக இருந்தது” எனக் கூறிப்பிட்டிருந்தார்.
சந்ரு
»»  (மேலும்)

11/09/2018

ஜனவரி 5இல் பொதுத் தேர்தல்?

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில்இ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படும் நிலையில்இ எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதியன்றுஇ பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Résultat de recherche d'images pour "sri lanka parliament"

 

»»  (மேலும்)

கிழக்கை நேசிப்பவர்களின் ஒரு உள்ளீட்டு விமர்சனம். வியாழேந்திரன் துரோகியா? தேசியவாதியா?

70 ஆண்டு கால அரசியல் போர், 30 ஆண்டுகால யுத்தம் கிட்டத்தட்ட ஒரு யுகம் / ஏராளமான உயிர்பலிகள் / சிங்களத்தின் ஏமாற்று வேலைகள்/ உரிமைபோராட்டம் / அபிவிருத்திப்போராட்டம் / என்று ஏராளமான களம் கண்டாகிவிட்டது.Résultat de recherche d'images pour "சதாசிவம் வியாழேந்திரன்"
இத்தனையிலும் நாம் படித்த பாடம் ஒன்றுதான் சிங்கள அரசுகள் எமக்கு சம உரிமையோ ஆளும் உரிமையோ ஒருபோதும் தராது என்பதுதான் .
ஆயுதப்போராட்டம் மெளனித்தன் பின்னர்
உரிமை பற்றி பேசிபலனில்லை என்கிறார்கள் ஒரு தரப்பினர் .
எது நடந்தாலும் குறைந்தபட்ச அதிகாரமாவது வேண்டுமென்கிறது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு . இடையில் காணாமல் போனோர் குடும்பங்கள் ஒருபக்கம் . அரசியல் கைதிகளின் குடும்பங்கள் ஒரு பக்கம் . காணியை பறிகொடுத்தோர் ஒருபக்கம் என போராட்ட வடிவங்கள் பலமுனைகளில் தொடர்கிறது .
சிங்கள அரசை சர்வதேச நீதிமன்றில் ஏற்றியே தீருவோம் என புலம்பெயர் அமைப்புகளும் ஒருபக்கம் இழுக்கிறது .
வறுமை, வாழ வழியில்லை , சகோதர இனத்தால் தினமும் சுரண்டப்படும் தமிழினம் .
போதிய வேலைவாய்ப்பின்மை / பொருளாதார நெருக்கடி சீதன கொடுமை / நுண்கடன் கொலைகள் என சுடுகாடாகிப்போன எம் நாட்டில் ,
எதை - யாரை வைத்து செய்வதென்ற கேள்வியே தொடந்துகொண்டிருந்தது -
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிகார துஸ்பிரயோகத்தை எதிர்த்தும் முன்னைய ஆட்சியாளர்களால் ஏற்ப்பட்ட நெருக்குதலை தவிர்க்கவும் மைத்திரியை ஐனாதிபதியாக்கினார்கள் எம்மவர்கள் ஆதரவோடு -
அதன் பின்னர் தேசியம் உரிமை என்ற நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களின் ஆணையை பெற்று பாராளுமன்றம் சென்றது .
நல்லாட்சி என்கிற நயவஞ்சக ஆட்சியில் எதிர்பார்த்த எதுவும் நிறைவேறவில்லை /
வடமாகாண அமைச்சர்களாக இருவர் நியமிக்கப்பட்டு மாகாண சபையும் தமிழர் வசமென்பதால் கனிசமான அபிவிருத்தியும் கிடைத்தது .
ஆனால் கிழக்கு தமிழர்கள் ஓரம் கட்டப்பட்டார்கள் .
அத்தோடு சகோதர இனத்தவர்களின் அதிகார துஸ்பிரயோகத்தால் ஏராளமான உயர் பதவிகள் முறைகேடாக முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு எம்மவர்கள் புறம் தள்ளப்பட்டார்கள் .
அத்தோடு மாகாண சபை முஸ்லீம்கள் வசமிருந்தபோது கிழக்கு மாகாணம் விஜயம் செய்த பிரதமரும் ஜனாதியும் எமது மக்கள் பிரதிநிதிகளை மனிதர்களாக கூட கணக்கெடுக்கவில்லை இத்தனைக்கும் அவர்கள் கொண்டுவரும் படஜட் முதல் அத்தனைக்கும் வெளியில் இருந்து ஆதரவு தருவோர் இவர்கள்தான் .
நிலமை இப்படி இருக்க மாகாண சபையை பயண்படுத்தி தமது முழு அதிகாரத்தையும் தமது இனத்துக்கு செலவளித்து கொண்ட லட்சியத்தில் வெற்றியும் கண்டது முஸ்லீம் தரப்பு .
கிழக்கிற்க்கு வரும் நிதியில் 1/5 பங்கு கூட தமிழர்பிரதேச அபிவிருத்திக்கு பயன் படுவதில்லை .
இது அத்தனையும் தெரிந்தும் சம்மந்தர் வாய் திறக்கவில்லை. அதுபோக மனிதாபிமான அடிப்படையில் ஒரு அரசியல் கைதியை கூட விட நல்லாட்சி அரசு இணங்கவில்லை .
புதிய திருத்த சட்டமூலம் என்ற ஒன்றே அவர்களின் பதிலாக இருந்தது .
நினைவஞ்சலிகள் / சிலை திறப்பு விழா தவிர தமிழ் தேசியகூட்டமைப்பு தலைமை கிழக்கிற்கு வருவதில்லை -
இங்கு என்ன நடந்தாலும் அமலும் யோகேஸ்வரனும் ஆர்ப்பாட்டம் பண்ண வந்துவிடுவார்கள் அவர்களால் எதுவும் முடியாது காரணம் தலைமை இதுபற்றி பேச தயாரில்லை -
சிறிநேசன் இடையிடையே பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பார் /
நிலமை .
அதுபோக எந்தவொரு பிரச்சினையிலும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தன்னிச்சையாக பேசக்கூடாது என்பதில் துரைராஜ சிங்கம் மிககவனமாக இருந்தார்.
                       இதனால் உட்கட்சி மோதல் ஆரம்பமானது . அமலை எந்தவொரு நிகழ்வுக்கும் அழைப்பதை தவிர்த்து அரசியலில் இருந்து ஒரம் கட்ட நினைத்தார்கள் கிழக்கு கூட்டமைப்பார் . உதாரணம் : சந்தை திறப்பு விழா , தந்தை செல்வா திறப்பு விழா ( இன்னும் பல) .
இடையில் கிழக்கில் நில அபகரிப்பு வேலைவாய்ப்பின்மை என நெருக்கடி தொடரும் சந்தர்ப்பத்தில் ரணில் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்துக்கு வந்தது .
இதை பேரம் பேசி ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற நிலையில் தலைமை மட்டுமே பேரம் பேசி ஆதரவு தருவதென முடிவெடுத்தார்கள் .
இதன் போது என்ன காரணத்துக்காக ஆதரிக்கவேண்டும் எழுத்து மூல ஆவணம் எங்கே என்று அமல் கேட்க கைகலப்புக்கு சுமந்திரன் இறங்கியிருக்கிறார் . இங்கே நிலமை இன்னும் மோசமானது .
கிழக்கில் ஏதும் என்றால் அமல் என்ன புடுங்கிறாரா என நாம் கேட்க இறுதியாக மனோவூடாக ஐ தே கட்சியில் இணைந்து குறைந்த பட்சம் ஒரு பிரதி அமைச்சையாவது பெறலாம் என முயன்றால் ரணில் சுமந்திரன் கூட்டு இதற்கு தடையானது .
சுதாகரித்துகொண்ட அமல் மனோவூடாக சில நிதி ஒதுக்கீடுகளை செய்தார் . ஆனால் கூட்டமைப்பில் இருந்தும் அரசியலில் இருந்தும் அமலை ஓரம் கட்டவேண்டுமென்ற கொள்கையில் மாற்றம் இருக்கவில்லை கூட்டமைப்புக்கு .
இதனிடையே ஆட்சியை கலைக்க எத்தனித்த மகிந்த தரப்பு ரங்காவூடாக அமலை அணுகி பேரம் பேசியிருக்கிறார்கள் .
சாதாரணமாக முஸ்லீம் நபரொருவருக்கு இருக்கும்பவர் கூட பாராளுமன்ற உருப்பினரான அமலுக்கு இல்லை பொலிஸ் நிலையத்தில் என்பதை உணர்ந்துகொண்டவர். 
எதிர்கால அரசியலைப்பற்றி திட்டம் தீட்டினார் .
இந்த குளறுபடிகளை அறிந்துகொண்ட தரப்பொன்று லண்டனில் வைத்து பிரதி அமைச்சுக்கான காய்நகர்தலை செய்ய, ஒரம் கட்டப்படுவதை அறிந்து இது காலத்தின் தேவை என்பதையும் அறிந்து கூட்டமைப்பில் இருந்து விலகினார் .
இதற்கு துரோகி பட்டம் வழங்கி எதையும் சாதிக்க முடியாது. இது எவ்விதத்திலும் துரோகமும் இல்லை என்பதே எனது முடிவு .
மாற்றம் தேவையெனில் மாறுவதில் தவறில்லை .
அன்புடன் அன்டனி
நன்றி முகநூல் 




»»  (மேலும்)