இலங்கையில் அதிபர் சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்ஷ இன்று பிரதமராக கடமைகளை ஏற்றுக் கொண்டார்.
பெளத்த மதத் தலைவர்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்ட ராஜபக்ஷவுடன் சில அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.
ராஜபக்ஷவும் அதிபரால் பதவி நீக்கப்பட்ட அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்கள் பலத்தைக் காட்டும் வகையில் நாடாளுமன்றம் எப்போது கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் உத்யோகபூர்வமாக பிரதமர் அலுவலகத்தில் அவர் தமது கடமைகளை ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி தம்மை பதவி நீக்கினாலும், அப்படி நீக்குவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்று கூறி, தாம் இன்னமும் பிரதமரே என்று கூறி வருகிறார் ரணில் விக்கிரமசிங்க. அவருக்கு நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்குமா? அவரது நிலை என்னவாகும் என்ற கேள்வியை இந்த கடமை ஏற்பு விழா எழுப்பியுள்ளது.
0 commentaires :
Post a Comment