10/28/2018

அலரி மாளிகை வாசம்

யார் அலரி மாளிகையில் குடியிருப்பது என்பது இங்கு இப்போது விவாதம். ரணில் உடனடியாக போக வேண்டும் என்று புதிய பிரதமர் தரப்பு வலியுறுத்த, அவர் தரப்போ இழுத்தடிக்க இப்படி போகிறது இலங்கை அரசியல். L’image contient peut-être : 1 personne, debout
பிரதமர் அலுவலகத்தில் குடியேறுவதும் வெளியேறுவது கடந்த காலங்களில் பல தடவை சர்ச்சையாகியுள்ளன.L’image contient peut-être : ciel, herbe, arbre et plein air
ஆனால், இலங்கையின் பிரதமராக இருந்த விஜெயானந்த தஹாநாயக்க என்பவரின் கதை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் வினோதமானவர். 1950 – 1960 இல் சில மாதங்கள் இலங்கையின் பிரதமராக காபந்து அரசாங்கத்தில் பதவி வகித்தவர். எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா புத்த பிக்கு ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட, இவர் அரசுக்கு தற்காலிகமாக தலைமை தாங்கினார். பிரதமரானார். அலரி மாளிகையில் குடியேறினார்.
அவரது ஆட்சிக்காலம் கொஞ்சம் சர்ச்சை நிறைந்ததுதான். பலரை தூக்கி வீசினார். அப்படி இப்படி அது நடந்தது சில மாதங்கள்.
ஆனால், தேர்தல் நடந்து, அடுத்த ஆட்சி அமைந்தது. அலரிமாளிகையில் இருந்த பணியாளர்கள் இவருக்கு காலை உபசாரங்களுக்காக அவரை தேடினராம், ஆனால் அவரைக் காணவில்லை.
அலரி மாளிகை வாசலுக்கு வந்த அவர், அங்கு காலிவீதியில் (கோல்பேஸ் வீதி) வந்த காலி பஸ்ஸை நிறுத்தி ஒரு குடையுடன் ஏறி அப்படியே ஊருக்கு போய்விட்டாராம்.
இப்படிப்பட்ட பிரதமரும் இருந்த இடந்தான் இந்த அலரி மாளிகை. அதற்கு இப்படியான பின்னணி எல்லாம் இருக்கிறது. நான் எந்தக் கருத்தும் இங்கு சொல்லவில்லை.(No comment). கருத்தை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
நன்றி *சீவகன் பூபாலபிள்ளை- முகநூல் 

0 commentaires :

Post a Comment