வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒக்டோபர் 8 ஆம் திகதி வடமேல் மாகாணத்தினதும், 10 ஆம் திகதி மத்திய மாகாணத்தினதும், 25 ஆம் திகதி வட மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.அதனடிப்படையில் குறித்த மூன்று மாகாணங்களும் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.குறித்த மூன்று மாகாணங்களின் ஆயுட் காலம் நிறைவடைந்ததும் மொத்தமாக கிழக்கு உட்பட்ட 6 மாகாணங்களுக்கான ஆயுட் காலம் நிறைவடையும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இதேவேளை எல்லை நிர்ணய குழு அறிக்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.எவ்வாறாயினும் எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு அறிக்கையை முன்வைக்க இரண்டு மாத காலம் செல்லும் எனவும் அதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 commentaires :
Post a Comment