10/15/2018

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் பிள்ளையானுக்கு நன்றி சொல்லும் செல்வா

1978ல் உருவாகிய மட்டக்களப்பு நகரின் பிரதான புதிய பஸ்நிலையம் இந்த நீண்ட போர்க்காலத்தின் ஒருயுத்த கைதியை போல நலிந்து மெலிந்து ஒரு நடைபிணமாக காட்சியளித்தது. மட்டக்களப்பு வாவிதனில் மீன்கள் பாடவில்லை. பிணவாடைகள் மட்டுமே வீசின.L’image contient peut-être : une personne ou plus, personnes debout, ciel et plein air
எப்போது இந்த நிலை மாறும்? எப்போது எமது இயல்புவாழ்வு திரும்பும்? எப்போது இந்த வாவியிலே மீண்டும் மீன்கள்பாடும்? காலத்தின் மீது நம்பிக்கையிழந்து காத்துக்கிடந்தனர் மக்கள். சுருங்க சொன்னால் பாரதி பாடியதுபோல் என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? என்று மக்களுடன் சேர்ந்து மட்டக்களப்பு பஸ் நிலையமும் காத்துக்கிடந்தது. ஆனால் ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ்-முஸ்லீம் அரசியல்வாதிகள் வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள், எவருக்குமே இந்த மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ்நிலையம் கிடந்த கோலம் தெரியவில்லை. அதனை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்கின்ற ஓர்மம் வரவில்லை. ரிஸ்வி சின்னலெப்பை, சம்பந்தமூர்த்தி, செல்வராஜா, கோவிந்தன் கருணாகரன் (ஜனா), பிரின்ஸ் காசிநாதர், சாம் தம்பிமுத்து, கணேசமூர்த்தி பசிர் சேஹுதாவுத், அமிர்அலி, ஹிஸ்புல்லா, அலிசாகிர் மெளலானா, துரைராசசிங்கம், வெள்ளிமலை, ஜோசேப் பரராசசிங்கம், கனகசபை, தங்கேஸ்வரி, அரியநேந்திரன், ---- என்று எண்ணற்ற தலைமை கள் ஒவ்வொன்றாக கடந்து சென்றன.

ஆம் மட்டக்களப்பு மாநகரம் மீண்டும் தன்னை புது பொலிவு பெறசெய்யப்போகும் அந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்துக்கிடந்தது. அவனது பெயர் பிள்ளையான் என்றிருக்கும் என அதுவரை காலமும் யாருமே எண்ணிப்பார்த்திருக்கவில்லை.இந்த வரலாற்றின் நீட்சியில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக திகழ்ந்த பிள்ளையானின் ஆட்சிகாலமே எவருமே கண்டிருக்காத அந்த கனவை நனவாக்கியது என்பதை யாரும் மறுத்துரைக்க முடியாது..

* கடைத்தொகுதிகளுடன் கூடிய புதிய மத்திய பஸ் நிலையம் 7கோடி ரூபாய்கள் செலவில் பிரமாண்டமானதொன்றாக கட்டப்பட்டது.அந்த பஸ் நிலைய முன்றலில்தான் செல்வநாயகத்தின் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment