10/22/2018

சிறையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பிள்ளையான்

 முதலாவது கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சந்திரகாந்தன் ஆகும். இவரது ஆட்சிக்காலம் கிழக்கின் பொற்காலம் என்றழைக்கப்படுமளவுக்கு பல்வேறு விதமான அபிவிருத்தி திட்டங்கள்  நடந்தேறின. Image associée

ஆனாலும் தமிழரசு கட்சியினர் அவரை தமிழ் தேசிய துரோகி என்றே அழைத்தனர். இரண்டாவது முறையான கிழக்கு மாகாண சபையில் அவரே முதல்வரானால் தமது அறுபது வருட தமிழ் தேசிய வியாபாரம் பாழடிக்கப்பட்டுவிடும் என்று பயந்தனர். எனவே முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து பெரும் சதி செய்து அவரை தோற்கடித்தனர்.  

ஆனாலும் நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதற்கிணங்க மக்கள் மத்தியில்  பிள்ளையான் போன்ற ஒரு ஆளுமையான தலைமை இல்லாத குறை தெரிய ஆரம்பித்தது. இந்த ஆதங்கம் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியிலிருந்தும் வெளிப்பட தொடங்கியதுதான் அதிசயம். 

இதன்காரணமாக பிள்ளையான் தொடர்ந்து அரசியல் செய்தால் கிழக்கில் தாம் ஓரங்கட்டப்படுவது நிட்சயம் என்பதை உணர்ந்து கொண்ட தமிழரசு கட்சியினர் ரணில்- சம்பந்தன் கூட்டரசாங்கத்தை பயன்படுத்தி அவரை சிறையிலடைத்தது.

பிள்ளையான் கடந்த மூன்று வருடகாலமாக தள்ளுபடியாக வேண்டிய வழக்கொன்றின் பெயரில் சிறையிலிருக்கின்றார்.அவர் சிறையிலிருந்தால் மக்கள் மத்தியில் பெருகி வரும் அவரது செல்வாக்கும் கட்சியின் வளர்ச்சியும்  தடைப்படும் என்று தமிழரசு கட்சியினர் போட்ட கணக்கு பிழைத்து போனது. கடந்த ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற உள்ளுராட்ச்சி மன்ற தேர்தலில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி எதிர்பாராத வெற்றி கண்டது. 

 பிள்ளையான் மீது எவ்வளவோ துரோக சேறடிப்புகளை தமிழரசு கட்சியினர்  செய்து வந்தாலும் அவையனைத்தும்  அரசியல் காழ்ப்புகளால் சோடிக்கப்பட்டவை என்கின்ற மக்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது.

 அதுமட்டுமன்றி பிள்ளையானின் மக்கள் நலன்சார்ந்த செயற்பாடுகள் பற்றிய மறைக்கப்பட்ட பல உண்மைகள்  வெளிவரத்தொடங்கியுள்ளன.

அந்தவகையில் கிழக்கில் மட்டுமல்ல வடக்கு மாகாணமக்களிடத்திலும்  பிள்ளையான் போன்றவர்களின்  ஆளுமை மிக்க அரசியல் பிரசன்னத்தின்  அவசியம்  உணரப்படுகின்றது. 

கடந்த சனிக்கிழமை 20.10.2018 யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாண காணி ஆணையாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. குருநாதன் பிள்ளையானின் ஆட்சிக்காலம்  பல தகவல்களை தெரிவித்தார். 

ஒருதடவை மத்திய அரசு 4000 சிங்கள மக்களை கிழக்கில் குடியேற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். நான் அப்போது முதல்வராக இருந்த பிள்ளையானை சந்தித்து விஷயத்தை கூறினேன். அவர் என்முன்னாலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேசி அதனை தடுத்து நிறுத்தினார் என தெரிவித்தார். உண்மைகள் உறங்குவதில்லை என்று சொல்வது பொய்யல்லவே.



0 commentaires :

Post a Comment