10/30/2018
| 0 commentaires |
"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தரப்புக்கு ஆதரவு தர வேண்டும்" - புளட் சித்தார்த்தன்
10/29/2018
| 0 commentaires |
புதிய அமைச்சரவை விவரங்கள்
பிரதியமைச்சர்
ஆனந்த அலுத்கமகே - சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர்
இராஜாங்க அமைச்சர்கள்
வடிவேல் சுரேஷ் - பெருந்தோட்டக் கைத்தொழிற்றுறை இராஜாங்க அமைச்சர்
| 0 commentaires |
மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமர் பதவிக்கான கடமைகளை ஏற்றார் - ரணில் நிலை என்ன?
10/28/2018
| 0 commentaires |
அலரி மாளிகை வாசம்
பிரதமர் அலுவலகத்தில் குடியேறுவதும் வெளியேறுவது கடந்த காலங்களில் பல தடவை சர்ச்சையாகியுள்ளன.
அவரது ஆட்சிக்காலம் கொஞ்சம் சர்ச்சை நிறைந்ததுதான். பலரை தூக்கி வீசினார். அப்படி இப்படி அது நடந்தது சில மாதங்கள்.
ஆனால், தேர்தல் நடந்து, அடுத்த ஆட்சி அமைந்தது. அலரிமாளிகையில் இருந்த பணியாளர்கள் இவருக்கு காலை உபசாரங்களுக்காக அவரை தேடினராம், ஆனால் அவரைக் காணவில்லை.
அலரி மாளிகை வாசலுக்கு வந்த அவர், அங்கு காலிவீதியில் (கோல்பேஸ் வீதி) வந்த காலி பஸ்ஸை நிறுத்தி ஒரு குடையுடன் ஏறி அப்படியே ஊருக்கு போய்விட்டாராம்.
இப்படிப்பட்ட பிரதமரும் இருந்த இடந்தான் இந்த அலரி மாளிகை. அதற்கு இப்படியான பின்னணி எல்லாம் இருக்கிறது. நான் எந்தக் கருத்தும் இங்கு சொல்லவில்லை.(No comment). கருத்தை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
| 0 commentaires |
வடிவேல் சுரேஷ், பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு
10/27/2018
| 0 commentaires |
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்
10/26/2018
| 0 commentaires |
கனடாவில் கந்தலாகி கிழிந்த தமிழ் தேசியம்
உஸ்மான் காலித் 3308 வாக்குகள். 24.14% இவரே வென்றவர்.ஏனைய தமிழ் வாக்காளர் விபரம்.
செல்லையா கிள்ளி1961. 14.31%
வரதராச மலர் 1587. 11.58%
செல்லா சோதி 481. 3.51%
சிறீநாதன் இலகுப்பிள்ளை 236 1.72%
10/22/2018
| 0 commentaires |
சிறையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பிள்ளையான்
ஆனாலும் தமிழரசு கட்சியினர் அவரை தமிழ் தேசிய துரோகி என்றே அழைத்தனர். இரண்டாவது முறையான கிழக்கு மாகாண சபையில் அவரே முதல்வரானால் தமது அறுபது வருட தமிழ் தேசிய வியாபாரம் பாழடிக்கப்பட்டுவிடும் என்று பயந்தனர். எனவே முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து பெரும் சதி செய்து அவரை தோற்கடித்தனர்.
ஆனாலும் நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதற்கிணங்க மக்கள் மத்தியில் பிள்ளையான் போன்ற ஒரு ஆளுமையான தலைமை இல்லாத குறை தெரிய ஆரம்பித்தது. இந்த ஆதங்கம் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியிலிருந்தும் வெளிப்பட தொடங்கியதுதான் அதிசயம்.
இதன்காரணமாக பிள்ளையான் தொடர்ந்து அரசியல் செய்தால் கிழக்கில் தாம் ஓரங்கட்டப்படுவது நிட்சயம் என்பதை உணர்ந்து கொண்ட தமிழரசு கட்சியினர் ரணில்- சம்பந்தன் கூட்டரசாங்கத்தை பயன்படுத்தி அவரை சிறையிலடைத்தது.
பிள்ளையான் கடந்த மூன்று வருடகாலமாக தள்ளுபடியாக வேண்டிய வழக்கொன்றின் பெயரில் சிறையிலிருக்கின்றார்.அவர் சிறையிலிருந்தால் மக்கள் மத்தியில் பெருகி வரும் அவரது செல்வாக்கும் கட்சியின் வளர்ச்சியும் தடைப்படும் என்று தமிழரசு கட்சியினர் போட்ட கணக்கு பிழைத்து போனது. கடந்த ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற உள்ளுராட்ச்சி மன்ற தேர்தலில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி எதிர்பாராத வெற்றி கண்டது.
பிள்ளையான் மீது எவ்வளவோ துரோக சேறடிப்புகளை தமிழரசு கட்சியினர் செய்து வந்தாலும் அவையனைத்தும் அரசியல் காழ்ப்புகளால் சோடிக்கப்பட்டவை என்கின்ற மக்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது.
அதுமட்டுமன்றி பிள்ளையானின் மக்கள் நலன்சார்ந்த செயற்பாடுகள் பற்றிய மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரத்தொடங்கியுள்ளன.
அந்தவகையில் கிழக்கில் மட்டுமல்ல வடக்கு மாகாணமக்களிடத்திலும் பிள்ளையான் போன்றவர்களின் ஆளுமை மிக்க அரசியல் பிரசன்னத்தின் அவசியம் உணரப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை 20.10.2018 யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாண காணி ஆணையாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. குருநாதன் பிள்ளையானின் ஆட்சிக்காலம் பல தகவல்களை தெரிவித்தார்.
ஒருதடவை மத்திய அரசு 4000 சிங்கள மக்களை கிழக்கில் குடியேற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். நான் அப்போது முதல்வராக இருந்த பிள்ளையானை சந்தித்து விஷயத்தை கூறினேன். அவர் என்முன்னாலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேசி அதனை தடுத்து நிறுத்தினார் என தெரிவித்தார். உண்மைகள் உறங்குவதில்லை என்று சொல்வது பொய்யல்லவே.
| 0 commentaires |
வடக்கின் 05 வருட சாபம் வரும் 24ஆம் திகதியுடன் நீங்குகிறதா?
10/18/2018
| 0 commentaires |
அரசியற் கைதிகள் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும். SDPT
10/15/2018
| 0 commentaires |
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் பிள்ளையானுக்கு நன்றி சொல்லும் செல்வா
எப்போது இந்த நிலை மாறும்? எப்போது எமது இயல்புவாழ்வு திரும்பும்? எப்போது இந்த வாவியிலே மீண்டும் மீன்கள்பாடும்? காலத்தின் மீது நம்பிக்கையிழந்து காத்துக்கிடந்தனர் மக்கள். சுருங்க சொன்னால் பாரதி பாடியதுபோல் என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? என்று மக்களுடன் சேர்ந்து மட்டக்களப்பு பஸ் நிலையமும் காத்துக்கிடந்தது. ஆனால் ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ்-முஸ்லீம் அரசியல்வாதிகள் வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள், எவருக்குமே இந்த மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ்நிலையம் கிடந்த கோலம் தெரியவில்லை. அதனை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்கின்ற ஓர்மம் வரவில்லை. ரிஸ்வி சின்னலெப்பை, சம்பந்தமூர்த்தி, செல்வராஜா, கோவிந்தன் கருணாகரன் (ஜனா), பிரின்ஸ் காசிநாதர், சாம் தம்பிமுத்து, கணேசமூர்த்தி பசிர் சேஹுதாவுத், அமிர்அலி, ஹிஸ்புல்லா, அலிசாகிர் மெளலானா, துரைராசசிங்கம், வெள்ளிமலை, ஜோசேப் பரராசசிங்கம், கனகசபை, தங்கேஸ்வரி, அரியநேந்திரன், ---- என்று எண்ணற்ற தலைமை கள் ஒவ்வொன்றாக கடந்து சென்றன.
ஆம் மட்டக்களப்பு மாநகரம் மீண்டும் தன்னை புது பொலிவு பெறசெய்யப்போகும் அந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்துக்கிடந்தது. அவனது பெயர் பிள்ளையான் என்றிருக்கும் என அதுவரை காலமும் யாருமே எண்ணிப்பார்த்திருக்கவில்லை
* கடைத்தொகுதிகளுடன் கூடிய புதிய மத்திய பஸ் நிலையம் 7கோடி ரூபாய்கள் செலவில் பிரமாண்டமானதொன்றாக கட்டப்பட்டது.அந்த பஸ் நிலைய முன்றலில்தான் செல்வநாயகத்தின் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
10/11/2018
| 0 commentaires |