9/21/2018

கிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்வைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Résultat de recherche d'images pour "கிழக்குத் தமிழர்"

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்குத் தமிழர்கள் சார்பில் அதி உச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் போட்டியிட வைக்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாக கிழக்குத் தமிழர் ஒன்றியம் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் தனித்தனியே சந்தித்து பேசியது. அதன் அடுத்த கட்டமாக கடந்த 22.08.2018 அன்று அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஓரிடத்தில் சந்திக்க செய்த கலந்துரையாடினோம்.
இக்கலந்துரையாடல் சந்திப்பின் தீர்மானத்திற்கமைய கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நகல் வடிவம் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் சென்றவாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் பின்னூட்டல்களையும் இறுதி நிலைப்பாடுகளையும் அறியத்தருமாறு கேட்டிருக்கின்றோம். அவற்றிற்கு அமைய பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைய சம்மதிக்கும் கட்சிகளின் ஒரு அரசியல் கூட்டு அமைப்பின் (Alliance) கீழ் ஒன்றிணைத்துப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கட்சிகளினால் கைச்சாத்திடப்பெற்றபின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காகத் தேர்தல் ஆணைக்குழுவிடம் செல்லவிருக்கின்றோம்.
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தற்போதைய நிலமை என்னவென்று வினவியபோது கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுத் தலைவர் பேராசிரியர் மா.செல்வராசா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment