நாளைய தினம் (07.09.2018) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் பூட்டி புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் கர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு செங்கலடி ஏறாவூர் பற்று வர்த்தக சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
7 தடவைக்கு மேல் குறித்த தொழிற்சாலைக்கு எதிராக பலவகையான ஆர்ப்பாட்டங்கள் செய்தும் அது குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எங்களது நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்ற செய்தியை நாளைய தினம் அனைத்து மக்களும் இன மத பேதமின்றி ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்காக வீட்டுக்குள் முடங்கி வீதிகளை வெறிச்சொட்டுமாறு செங்கலடி வர்த்தக சங்கத்தினர் ஆகிய நாம் அழைப்பு விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.
0 commentaires :
Post a Comment