தான் ஒரு "தேச துரோகி" என்று ஒப்புக்கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம். இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு காரணம் விடுதலை புலிகள் அமைப்புதான் என்று குற்றஞ்சாட்டுகிறார் இவர். இப்படி நினைப்பதற்கு என்ன காரணம் என்பதை பிபிசி செய்தியாளர் நளினி சிவதசனிடம் விளக்குகிறார் ஜூட்.
எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் விவரங்கள் சிலருக்கு வருத்தமளிக்கும் வகையில் இருக்கலாம்.
"இலங்கைப் போர் இறுதி கட்டத்தில் இருக்கும்போது, விடுதலை புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன். என் மக்கள் கொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை, புலிகளுக்கு ஒரு முடிவு வேண்டும் என்று தோன்றியது" என கூறுகிறார் ஜுட் ரத்னம்.
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. இலங்கை அரசாங்கம், விடுதலை புலிகளை தோற்கடித்தது. ஆனால், அதற்கு ஒரு பெரிய விலை கொடுக்கப்பட்டது. 40,000 மக்கள், முக்கியமாக தமிழர்கள் இந்தப் போரின் இறுதியில் உயிரிழந்ததாக ஐ.நா கணக்கிட்டது.
போர் முடிந்து பல ஆண்டுகளான நிலையில், இலங்கை திரைப்பட இயக்குநர்கள் இதனை மறு ஆய்வு செய்கின்றனர்.
ஒரு முக்கிய சித்தரிப்பு
நிர்மலன் நடராஜா மற்றும் ஞானதாஸ் காசிநாதர் உள்ளிட்ட சில தமிழ் இயக்குநர்கள், பொதுமக்களை குறிவைத்து பலரை கொன்று அநீதி இழைத்ததாக இலங்கை அரசாங்கத்தை நுட்பமாக விமர்சித்துள்ளனர்.
ஆனால், தனது 'Demons in Paradise' திரைப்படத்தில் தமிழ் திரைப்பட இயக்குநரான ஜூட் ரத்னம், விடுதலைப்புலிகளை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment