9/02/2018

ஓரணியில் தேர்தலை எதிர்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்தால் எதிரணி உருவாகலாம்-கிழக்குத் தமிழர் ஒன்றியம்

ஓரணியில் தேர்தலை எதிர்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்தால் எதிரணி உருவாகலாம் : த கோபாலகிருஸ்ணன் (கிழக்குத் தமிழர் ஒன்றியம்)Résultat de recherche d'images pour "east lanka"

 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கைக்கும் நிலைப்பாட்டிற்கும் ஆதரவளிக்க முன்வந்துள்ளன என்றே அறிக்கைக் கிடைக்கிறது. பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைவதற்குத்தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வராது விட்டால் கிழக்குத் தமிழர் ஒன்றியம் என்ன நிலைப்பாட்டை எடுக்கும்?
கோபாலகிருஸ்ணன் : பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைய முன்வருகின்ற கட்சிகளுடன் கலந்துரையாடி, தீர்க்கமான முடிவொன்றினை கிழக்கு தமிழர் ஒன்றியம் எடுக்கும். அம்முடிவினை மக்களிடம் கொண்டு செல்வோம். மக்கள் முடிவெடுப்பார்கள். இது தவிர்க்கமுடியாததாகும். தீராத நோய் ஒன்றை குணப்படுத்த அறுவை சிகிச்சைதான் ஒரே ஒரு வழி என்றாகிவிட்டால் அதனை மேற்கொள்வதுதானே விஞ்ஞானபூர்வமான செயற்பாடாகும். அரசியல் என்பது ஓர் சமூக விஞ்ஞானமாகும். அதில் பரிசோதனை முயற்சிகள் அவசியமானதும் தவிர்க்கமுடியாததுமாகும்.
(நன்றி: அரங்கம்)

0 commentaires :

Post a Comment