9/12/2018

இந்தியாவில் ஒருபாலின உறவுக்கு தடை நீக்கம்:

கொழும்பு மருதானையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் முத்தமிட்டுக் கொண்டதாக குற்றம் சுமத்தி, இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு 2016ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டிருந்தால், ஒருபாலுறவு என்பதை தண்டனைச் சட்டப் பிரிவில் இருந்து அகற்றிக் கொள்ளும் போராட்டம் வலுப்பெற்றிருக்கும் என ஒருபாலுறவு சமூகத்திற்காக குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர் மனோஜ் தெரிவித்தார்.எல்.ஜி.பி.டி கொண்டாட்டம்
இந்தியாவில் ஒருபாலுறவை தண்டனைக்குரிய சட்டப் பிரிவில் இருந்து அகற்றி இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இலங்கையிலுள்ள ஒரு பாலுறவு சமூகத்திற்கும் நம்பிக்கையைத் தந்துள்ளது. ஆனால், இந்தியாவைப் போன்று இலங்கையிலும் தண்டனைச் சட்டப் பிரிவில் இருந்து ஒருபாலுறவு விவகாரத்தை நீக்கிக் கொள்ள இன்னும் உறுதியோடு போராட வேண்டியிருப்பதாக பி.பி.சி. தமிழிடம் பேசிய மனோஜ் தெரிவித்தார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவில் ஒருபாலுறவு உள்ளடக்கப்பட்டிருந்தது. இதேபோல இலங்கையில் 365-365A பிரிவுகளில் ஒருபாலுறவு குற்றமெனக் கருதப்படுகிறது.
இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டமும், அதற்குக் கிடைத்த வெற்றியும் இலங்கையில் எந்த வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் இங்குள்ள ஒருபாலுறவு சமூகத்தின் எதிர்காலம் குறித்தும் ஆராய்ந்தோம்.
இந்தியாவில் ஒருபாலுறவு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கும், இந்தியாவிற்கும், இலங்கையின் நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

0 commentaires :

Post a Comment