பருத்தித்துறை வீதி - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவுத் தூபியில்இ மேற்படி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதில்இ யாழ். மாநகர சபை பிரதி மேஜர் ஈசன்இ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ செயலாளர் எஸ். கஜேந்திரன்இ ஜனநாயகப் போரளிகள் கட்சிப் பிரதிநிதிகள்இ வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போதுஇ திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மலை அணிவித்துஇ மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம்இ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க முற்பட்டவேளையில்இ நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிக்கவிடப்பட்டது.
இதன்போதுஇ பாடலை நிறுத்துமாறு சி.வி.கே சிவஞானம் கோரினார்.
இதற்குஇ பாடல் ஒலிபரப்பியவர்கள்இ “நிகழ்வு முடிவடைந்து விட்டது என அறிவித்த பின் கருத்துத் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை. இங்கு அரசியல் தேவையற்றது என்பதே இங்கு முதன்மை” எனக் கூறிஇ பாடலை நிறுத்த மறுத்தனர்.
இதனால் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முன்னாள் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ். கஜேந்திரனுக்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன.
இதனிடையில் அவைத்தலைவர்இ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து முடித்துவிட்டார்.
ஆரம்பித்த கருத்து மோதல்களின் போது திலீபனின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையிலான தூசன வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றன.
நிகழ்வின் ஆரம்பத்தில் இருந்தே நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தொடர்பில் முரண்பட்ட பார்வை இருந்தது. பிரதான சுடர் இரண்டு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வு ஆரம்பிக்கும் ஒரு நிமிடம் முன்னதாக ஒரு சுடர் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment