வாழைச்சேனை புணானை மயிலந்தனையில் பொன்னன் மாாியாய் வயது (70) என்ற வயோதிபப் பெண் அருகிலுள்ள மகாவலி நீரோடையில் குளிக்கச் சென்று முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிாிழந்துள்ளாா்.அவரது சடலத்தின் ஒரு சில பகுதியே மீட்கப்பட்டுள்ளதாக உறவிணா்கள் தொிவித்தனா். ஏனையவற்றை உணவி்ற்காக உட்கொண்டு விட்டதாகவும் தொிவித்தனா்.கடந்த கால யுத்தத்தினால் பொிதும் பாதிக்கப்பட்டவா்கள் மயிலந்தனை மக்கள். மயிலந்தனை படுகொலை 1992 இல் இடம்பெற்ற விடயமாகும்.இப்பிரதேச மக்கள் இன்னும் சோமாலியா மக்களாகவே உள்ளனா். அரசின் அபிவிருத்தி எட்டாக்கனி. யானைகளின் தொல்லை. முதலைகளின் தொல்லை. குடிநீா் பிரச்சனை. வாழ்வாதார பிரச்சனை என பல்வேறு இடா்களை எதிா்நோக்கும் இவ் மக்களின் அவல நிலை கண்டு உதவி செய்பவா்கள் யாா்?.குளிப்பதற்கு ஒழுங்கான கிணறு இல்லை என்பதனால் நீரோடையில் குளித்தாா் அந்த முதாட்டி. கடித்துக் கொன்றது முதலை. ஊாில் இருக்கும் கிணறு சுத்தமாக இல்லை. என்ன செய்யவது?..இந்னும் பல மாாியாய்கள் காத்திருக்கிறாா்கள் முதலையின் பசிக்கு இரையாக யாா் தடுப்பது. .........?அம்மா உனது ஆத்மா சாந்தி அடையட்டும்.
நன்றி *ருத்திரா
0 commentaires :
Post a Comment