7/28/2018

கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது

கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது. ஐ.சி.யூ பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அறிக்கையை அடுத்து, மருத்துவமனை முன் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.


திமுக தலைவர் கருணாநிதி, ரத்த அழுத்த குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது' என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று தமிழக கவர்னர் பன்வாரிலால், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர். உடல் நலம் குன்றியுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும், ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

கோபாலபுரம் இல்லத்திலிருந்து, ஸ்ட்ரெச்சர் மூலம் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார். அங்கு தயார் நிலையில் இருந்த சிறப்பு மருத்துவர்கள் குழு, கருணாநிதியை ஐ.சி.யூ., வார்டில் அனுமதித்து சிகிச்சையை தொடர்ந்தனர். காவேரி மருத்துவமனைக்கு முன்பு தொண்டர்கள் திரண்டனர்; போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இதுவரை காவேரி மருத்துவமனைக்கு செல்லும் போதெல்லாம் தனது சொந்த காரில் கருணாநிதி சென்ற நிலையில், முதன் முறையாக ஆம்புலன்சில் மருத்துவமனை சென்றார்
»»  (மேலும்)

7/15/2018

உலககோப்பை கால்பந்து 2018: குரேஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன்

உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. Résultat de recherche d'images pour "football cup 2018"

உலகக்கோப்பை கால்பந்து இறுதியாட்டம் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்துவருகிறது. பிரான்ஸ் அணி அரை இறுதியில் பெல்ஜியத்தையும், குரேஷியா இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தன.
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. மாஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்து இப்போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது.
இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் பால் போக்பா அடித்த கோலால் பிரான்ஸ் 3-1 என முன்னிலை பெற்றது.
குரோஷியா அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பி கிட்டத்தட்ட 22 யார்டு தூரத்தில் இருந்து கோல் அடிக்கவே பிரான்ஸ் 4-1 என மிகப்பெரிய முன்னிலை பெற்றது. குரேஷியா கோல் கீப்பரால் கோல் மழை தனது வலையில் பொழிவதை பார்க்க மட்டுமே முடிந்தது.
தொடர்ச்சியாக கோல் வாங்கிக் கொண்டிருந்தாலும் குரேஷியா தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் மரியோ மண்ட்ஜூகிக் ஒரு கோல் அடிக்க குரேஷியாவின் நிலை 2- 4 என்றானது.
உலககோப்பை கால்பந்து மற்றும் ஈரோ கோப்பை/சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் கோல் அடித்த ஐந்தாவது வீரர் ஆனார் மரியோ மண்ட்ஜூகிக்.
முன்னதாக ஃபெரன்க் புஸ்கஸ், ஜோல்டன், முல்லர், ஜினடின் ஜிடேன் இந்த சாதனையைச் செய்திருந்தனர்.
»»  (மேலும்)

7/11/2018

நுரைச்சோலை வீடுகளை, அக்கரைப்பற்று பிரதேச செயலக இன விகிதாசாரத்திற்கு அமையவே கையளிக்க வேண்டும்.

நுரைச்சோலை வீடுகளை, அக்கரைப்பற்று பிரதேச செயலக இன விகிதாசாரத்திற்கு அமையவே கையளிக்க வேண்டும்.
ந.தே.மு. (NFGG) தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் வேண்டுகோள்.
(NFGG அக்கரைப்பற்று)L’image contient peut-être : maison, ciel, plein air et nature
சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்காக சவூதி நிதியுதவியுடன்   நுரைச்சோலை  500 வீடுகளையும், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இன விகிதாசாரத்திற்கமையவே கையளிக்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார்.
நேற்று 10.07.2018 செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போதே (DCC) அவர் இவ்வாறு தெரிவித்தார். சமீபத்தில் அம்பாரையில் இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் இது சம்பந்தமாக கடும் வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தமை தெரிந்ததே.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இது தொடர்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதால் அதற்கமையவே செயற்பட வேண்டியுள்ளது. மாறாகச் செயற்பட்டால் அது நீதீமன்ற அவமதிப்பு என்றாகி விடும்.
எவ்வாறாயினும், இன விகிதாசாரத்திற்கு அமையவே இவ் வீடுகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றே அத் தீர்ப்பு சொல்கிறது. ஆனால், எந்த இன விகிதாசாரம் என்று அத் தீர்ப்பில் வரையறுக்கப்படவில்லை. எனவேதான் அக்கரைப்பற்று பிரதேச இன விகிதாசாரத்தைக் கடைப்பிடிக்கும் வகையில், சட்ட நுணுக்கங்களைக் கையாள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் லஹுகல பிரதேசத்தில் மிகக் குறைவானோரே (03 பேரளவில்) சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்தும், 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதேபோன்றுதான் சுனாமியால் பாதிக்கப்படாத அம்பாறை பகுதியில் 10 க்கு மேற்பட்ட சுனாமி வீடுகள் அதிகாரிகளின் செல்வாக்கினால் நிர்மாணிக்கப்பட்டன.
இதேபோன்றுதான் கல்முனை, நிந்தவூர், ஆலையடிவேம்பு போன்ற பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு அதே பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டன.
ஆனால், அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு, அதே பிரதேச செயலகத்திற்குட்பட்ட நுறைச்சோலையில் வீடு வழங்கப்படுவதை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவதன் மர்மம் என்ன எனவும் அவர் அங்கு கேள்வி எழுப்பினார்.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் வகையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

»»  (மேலும்)

7/09/2018

கொழும்பு துப்பாக்கிச் சூடு: நவோதய மக்கள் முன்னணித் தலைவர் சுட்டுக் கொலை

இலங்கையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா (40 வயது) சுட்டுக் கொல்லப்பட்டார்.Résultat de recherche d'images pour "எஸ்.கே. கிருஷ்ணாவின்"

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.
தலைநகர் கொழும்பில், செட்டியார் தெருவில் உள்ள தமது வியாபார நிலையத்தில் இருந்த போது, காலை 7.45 அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
நவோதய மக்கள் முன்னணி தலைவர், கிருஷ்ணா, 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு சுயேச்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கலப்பு முறையில் இம்முறை நடந்த உள்ளுராட்சித் தேர்தலில், நவோதய மக்கள் முன்னணிக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைத்திருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புறக்கோட்டை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 15 வருடங்களாக நவோதயா பொதுநல அமைப்பை கொழும்பு தலைநகரில் இவர் நடத்தி வந்தார்.
தேர்தலில் போட்டியிருவதற்காக இந்த அமைப்பு நவோதயா மக்கள் முன்னணி என அண்மையில் மாற்றப்பட்டது.
எஸ்.கே. கிருஷ்ணாவின் சமூக சேவையை பாராட்டி அவருக்கு தேசமான்ய, தேசபந்து உள்ளிட்ட பட்டங்களும் வழங்கப்பட்டன.
நவோதயா அமைப்பின் ஊடாக கொழும்பு தலைநகரில் உள்ள சுமார் 20,000 குடும்பங்கள் நேரடியான உதவிகளை பெற்றுவந்ததாக பிபிசி தமிழுக்கு பேசிய அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

7/07/2018

என்.கே. ரகுநாதன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு

அண்மையில் காலம் சென்ற எழுத்தாளர் என்.கே. ரகுநாதன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு நாளை பாரிஸ் நகரில் இடம்பெறவுள்ளது. L’image contient peut-être : 2 personnes, personnes souriantes, texte
»»  (மேலும்)

7/04/2018

இலங்கை: 30 ஆண்டுகளுக்கு பின் முஸ்லிம் ஒருவர் அரசாங்க அதிபராகிறார்

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பிறகு மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை, நியமிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியாளராக நியமனம் பெற்றுள்ள ஐ.எம். ஹனீபா

இதன்படி, ஐ.எம். ஹனீபா என்பவரை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க செவ்வாய்கிழமை அனுமதி கிடைத்துள்ளது.
முஸ்லிம் சமூகத்திலிருந்து இலங்கையில் அரசாங்க அதிபர் பதவியை வகிக்கும் இரண்டாவது நபர் எனும் பெருமையை இதன்மூலம் ஹனீபா பெறுகிறார்.
முதலாவது அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட எம்.எம். மக்பூல், 1988ஆம் ஆண்டு ஆயுதக் குழுவினரால்சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐ.எம். ஹனீபாவை நியமிக்க தற்போது அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் எந்தவொரு மாவட்டத்திலும் கடந்த 30 வருடங்களில் முஸ்லிம் எவரும் அரசாங்க அதிபராக நியமிக்கப்படவில்லை.
இந்தப் பதவிக்கு தகுதியான பலர் முஸ்லிம் சமூகத்தில் இருந்தாலும், அவர்களை நியமிக்காமல் அரசாங்கம் அநீதி இழைத்து வருவதாக, ஆட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் வெளிப்படையாக குற்றஞ்சாட்டிவந்தனர்.
ஐ.எம். ஹனீபா சாய்ந்தமருது பிரதேச செயலாளராக பணியாற்றி வரும் நிலையில், தற்போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம் பெறுகிறார்.
அம்பாறை மாவட்டம் - சம்மாந்துறையை சேர்ந்த இவர், 1999ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் பணிபுரியத் தேர்வானவர். இதற்கு முன்னர் இவர் ஆசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

7/02/2018

மெக்ஸிகோ தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் ஓபராடர் வெற்றிமுகம்

மெக்ஸிகோ அதிபர் தேர்தலில், இடது-சாரி வேட்பாளரான ஆன்டரஸ் மனுவேல் லோபஸ் ஓபரடார் வெற்றி முகம் காட்டுகிறார்.ஆன்டரஸ் மனுவேல் லோபஸ் ஓபரடார்
ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்குப்பதிவில் மெக்ஸிகோ நகர முன்னாள் மேயரான இவர், 53% வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தோல்வியை ஒப்புக்கொண்ட பிற முக்கிய போட்டியாளர்களும், லோபஸிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்கட்ட முடிவுகள் படி, ஆளும் கட்சியின் வேட்பாளரான ஜோஸ் அன்டோனியோ மூன்றாவது இடத்தில் உள்ளார். தமக்கு அடுத்தபடியாக வந்த வேட்பாளர் ரிக்கார்டோ அனயா-வை விட ஏறத்தாழ இரு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளார் ஓபராடர்.
»»  (மேலும்)