மறவன் புலவையும் மாட்டிறைச்சியையும் முன்வைத்து --பாகம் ஒன்று
எம்.ஆர்.ஸ்டாலின்
மறவன்புலவு சச்சிதானந்தம் அல்லது காந்தளகம் சச்சிதானந்தம் என்பவரால் 'சிவசேனை' என்னும் அமைப்பு கடந்த ஆண்டு இலங்கையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த நிகழ்வின் போதே அவர் இந்துக்கள் மட்டுமே தமிழர்கள், இந்துக்கள் அல்லாதோர் அதாவது தமிழ் பேசும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் தமிழர்கள் அல்ல என்கின்ற வகையில் மத வெறி கருத்துக்களை வெளியிட்டிருந்தார். எனினும் அதனைத்தொடர்ந்து இவ்வமைப்பின் செயற்பாடுகள் எதுவும் வெளிப்படையாக இடம்பெற்றதாக தெரியவில்லை.
ஆனாலும் சென்றவாரம்(26/05/2018) யாழ்ப்பாணத்தில் இவ்வமைப்பினர் நடத்தியுள்ள மாட்டிறைச்சிக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டம் பல வகைகளிலும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு எதிரான அரசியல் தீவிரமான முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக்கெதிரான முறையில் இந்த 'மாட்டிறைச்சி அரசியலை' மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறது. விஷ்வ இந்துப்பரிசத், சிவசேனா, ஆர் எஸ் எஸ் (ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம்) போன்ற தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்புக்கள் பசு வதை சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று குரல்கொடுத்து வருவதோடு மாட்டிறைச்சி உண்ணுகின்றவர்களை குறிவைத்து தொடர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். குறிப்பாக இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் குறிவைத்து நடத்தப்படும் இது போன்ற பல நூறு (கொலைகள் உட்பட்ட) வன்முறை சம்பவங்கள் வருடா வருடம் இந்தியாவில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த போக்கில் இலங்கையிலும் இந்த பசுவதை பற்றிய பிரச்சாரம் இப்போது தமிழ் பிரதேசமொன்றில் முதன் முதலாக தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தென்னிலங்கையை பொறுத்த வரையில் மாட்டிறைச்சி உண்பதெற்கெதிரான பிரச்சாரங்கள் மிக நீண்ட காலமாகவே இடம்பெற்று வருகின்றன. காலனித்துவ ஆட்சிக்கெதிராக எழிற்சி பெற்ற பெளத்த தேசியவாதத்தின் முக்கிய தலைவர்கள் மாட்டிறைச்சிக்கெதிரான உணர்வுகளை சிங்கள மக்களிடையே பரப்பி வந்தனர்.
பெளத்த கோட்பாட்டின் அடிப்படையிலமைந்த 'பஞ்ச சீல' கொள்கையின் முக்கிய கூறான 'கொல்லாமை' என்பதன் அடிப்படையினை முன்வைத்தே மாட்டிறைச்சிக்கெதிரான இந்த பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனபோதும் இந்த பிரச்சாரங்களின் குறியாக இஸ்லாமிய வெறுப்புணர்வையும் இணைத்து பரப்புவதே அவர்களின் உள்நோக்கமாக இருந்தது. இது கொழும்பு கண்டி போன்ற நகர்ப்புற வியாபாரங்களை ஒட்டிய சிங்கள-முஸ்லீம் வியாபாரிகளிடையேயான பொருளாதார போட்டிகள் காரணமாக உருவானமை முக்கியமானதொன்றாகும். குறிப்பாக அநகாரிக தர்மபாலா போன்ற பெளத்த தலைவர்கள் மாட்டிறைச்சி தின்பதற்கெதிரான பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது இன/மத கலவரமாக அறியப்படுகின்ற சிங்கள-முஸ்லீம் கலவரம் 1915ல் இடம்பெற்றது. இந்த கலவரத்தின் பின்னணியில் இத்தகைய முஸ்லீம் இனத்தின் மீதான சிங்கள-பெளத்தர்களின் வெறுப்புணர்வுப் பிரச்சாரங்களே பெரும் பங்குவகித்திருந்தன.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள பகுதிகளில் எழுந்த மாட்டிறைச்சி உண்பதற்கெதிரான பரப்புரைகள் அவ்வப்போது கைவிடப்பட்டிருந்தாலும் அவற்றின் தொடர்ச்சி இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. காலத்துக்கு காலம் உருவாகி வருகின்ற வீரவிதான,சிஹல உறுமய,பொது பலசேனா, சிங்கள ராவய, போன்ற பெளத்த-சிங்கள இன மேலாதிக்க அமைப்புக்களின் முக்கிய செயற்பாடுகளாக அவையே இன்றுவரை இருந்து வருகின்றன. இத்தகைய அமைப்புகளில் தீவிர செயற்பாட்டாளராய் இருந்துவந்த போவத்த இந்திர ரத்தின தேரர் என்னும் பிக்கு ஒருவர் கடந்த 2013 ஆம் ஆண்டிலே மாட்டிறைச்சி உண்பதற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தனது எதிர்ப்பினை வெளிக்காட்டும் உச்ச முயற்சியில் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின்னர் வந்த காலங்களில் ஞானசார தேரரின் வழிநடத்தலில் இயங்கும் பொது பலசேனா அமைப்பானது முஸ்லிம்களுக்கெதிரான பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் அவற்றின் தொடர்ச்சியாக இடம்பெற்ற வன்முறைகளும் கண்டி கலவரங்கள் போன்ற முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல்களும் அண்மையில் இடம்பெற்று முடிந்தவரலாற்றின் துயர நிகழ்வுகளாகும்.
தொடரும்

0 commentaires :
Post a Comment