தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களின் ஒன்றியும் ஏற்பாடு செய்த அடையாள உண்ணாவிரதம் இன்று 25.06.2018 காலை 7 மணிக்கு ஆரம்பமானது.
சந்திரகாந்தன் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் சுமார் பதின் மூன்று வருட காலம் ஈடுபட்டிருந்தவர் என்பதோடு ஜனநாயக பாதையில் பயணித்து கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதல்வராக தெரிவாகியிருந்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. தற்போது சுமார் இரண்டரை வருடங்களாக அரசியல் பழிவாங்கல் காரணமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 commentaires :
Post a Comment