"தமிழரசு கட்சியை உள்ளிருந்து விமர்ச்சிக்க முனைகின்றவர்கள் வெளியேறலாம்".என பாராளுமன்ற உறுப்பினர் அமலை நோக்கி தமிழரசு கட்சியின் செயலர் துரைராசசிங்கம் அறிவித்துள்ளார். இந்நிலையில் டெலோ சார்பிலான மட்டக்களப்பு முக்கியஸ்தர் ஜனா இதனை தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம். என தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனுடாக நடுநிலை காக்க முயல்கின்றாரா? என்கின்ற கேள்வி எழும்புகின்றது?
அமல் கேட்கின்ற கேள்விகள் சரியானவையா? இல்லை பிழையானவையா? என்பதே இப்போதுள்ள பிரச்சனையாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அடுத்த கட்சியொன்றின் முக்கியஸ்தர் என்னும் வகையில் இது பற்றி கருத்து தெரிவிக்க வேண்டியது அவசியம்தான். அது கூட்டுப்பொறுப்பு சார்ந்த விடயமுமாகும்.
ஆனால் அவர் தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு தப்பமுனைய கூடாது.
அமல் முன்வைக்கும் கேள்விகள் அவசியமற்றவையா? அப்படியானால் அது பிழை என்பதை அமலுக்கு சுட்டிக்காட்டிட வேண்டும்.மாறாக அந்த கேள்விகள் நியாயமானவை என கருதினால் தமிழரசு கட்சியிடம் அந்த கேள்விகளை நியாயமாக எடுத்து செல்ல வேண்டும்.
அதை விடுத்து இப்படி பொறுப்பற்ற விதமாக கருத்து சொல்லுவது கூடாது. அது தமிழரசு கட்சியானது ஏனைய கூட்டு கட்சிகளை கரு வேப்பிலையாக பாவித்து விட்டு உதறி தள்ளும் நிலையினை ஆதரிப்பதில் போய் முடியும்.

அதுவே தமிழரசு கட்சியின் ஏதேற்சை
அதிகார போக்குக்கும் கிழக்கின் மீதான தொடர்ச்சியான ஆதிக்க நிலைக்கும் இட்டுச்செல்லும்..
கட்சியின் செயற்பாடுகளை கேள்வி கேட்பது என்பது உட் கட்சி ஜனநாயகம்ஆகும். அதை மறுத்து "கேள்வி கேட்பதானால் வெளியே போ" என்பது ஜனநாயக மறுப்பாகும். இன்று அமலுக்கு? நாளை ஜனாவுக்கு?
0 commentaires :
Post a Comment