6/12/2018

தண்ணீர் தொழிற்சாலையை நிறுத்தக்கோரி இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

புல்லுமலை பிரதேசத்தில் நூறுவருட திட்டத்துடன் நூறு ஏக்கரில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தண்ணீர் தொழிற்சாலையை நிறுத்தக்கோரி இன்று(12.06.2018) மட்டக்களப்பு பொது அமைப்புகள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்ததுடன் மாவட்ட செயலகத்திற்கு பேரணிணியாக சென்று அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.L’image contient peut-être : 6 personnes, personnes souriantes, foule et plein air
இவ் ஆர்ப்பாட்டத்தில் புல்லுமலை பிரதேச மக்கள், மட்டக்களப்பு ஊடக ஒன்றியத்தினர், மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், புல்லுமலை பிரதேச விவசாய அமைப்பினர், புல்லுமலை பிரதேச கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மட்டக்களப்பு இளைஞர் அமைப்பினர், கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்கள், மட்டக்களப்பு மகளீர் அமைப்பினர், மட்டக்களப்பு சமூக நலன் விரும்பிகள், மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள் என கட்சிபேதமின்றி பங்குகொண்டிருந்தனர்.
புல்லுமலை பிரதேசத்தில் சுமார் மூன்று கிராமங்கள் குடிநீர் வசதிகள் இன்றி இருக்கின்ற சூழ்நிலையில் எங்கோ இருந்துவந்த #காப்பரேட் கம்பனிமூலம் அப்பிரதேசத்திலுள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பில் 100 வருடங்கள் நீட்டநாள் திட்டத்தின்மூலம் நிலத்தடி நீரினை உறிஞ்சி அதை போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் செயலை எம்மால் ஏற்கமுடியாது.இது ஒருபுறமிருக்க......
புல்லுமலை பிரதேசத்தினை பொறுத்தவரை இதனை சூழ தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் வசிக்கின்ற பிரேசங்களாகும். குறிப்பாக மங்களகம பிரதேசத்தில் சிங்கள மக்களும், புல்லுமலையில் தமிழ் மக்களும், உறுகாமம் குளத்தினை அண்டிய பகுதியில் முஸ்லீம் மக்களும் வாழ்கின்றார்கள்.
புல்லுமலையில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தண்ணீர் தொழிற்சாலையால் இவ் மூவின மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். சுமார் பலநூறு அடி ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம் இங்கு நீர் உறிஞ்சப்படும் சந்தற்பத்தில் இப் பிரதேச நிலத்தடி நீர் வற்றப்பட்டு தாவரிப்பு குளங்கள், விவசாய குளங்கள், பொதுமக்களது குடிநீர் கிணறுகளது நீர்மட்டங்கள் குறைந்து காலப்போக்கில் இத்தொழிற்சாலையை சுற்றியுள்ள பலநூறு கிலோமீட்டர் நிலப்பரப்புகள் பாலைவனமாக்கப்பட்டுவிடும்.
பிரதேசங்களில் நீர்த்தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள நீர்நிலைகளது நீர்மட்டம் வெகுவாக குறைந்து இப் பிரதேச மேட்டுநில பயிர்ச்செய்கை, விவசாய செய்கை, கால்நடைவளர்ப்பு, மீன்பிடி போன்ற ஜீவனோபாய தொழில்கள் அறவே அழிந்துபோய்விடும். இதனால் இப்பிரதேச மக்கள் இப் பிரதேசங்களிலிருந்து வெளியேறவேண்டிய நிற்பந்தம் ஏற்படும்.
எனவே இவ்வாறான பிரதிகூலங்களை அதிகளவாக கொண்டு எமது எதிர்கால மனிதகுலத்தை அடியோடு அழிக்கும் காபரேட் கம்பனியான இத் தண்ணீர்தொழிற்சாலை மூடப்படவேண்டும்.

0 commentaires :

Post a Comment