பெருந்தோட்ட மக்களுக்கான, புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கான சட்ட மூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
பெருந்தோட்டத்துறை அபிவிருத்திகளை இலக்காக கொண்டு, மலைநாட்டு, புதிய கிராமங்கள், உட்கட்டுமான மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரத்தினால் இந்த யோசனை கொண்டுவரப்பட்டது.
இதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது.
இதன்படி குறித்த அதிகார சபையை உருவாக்குவதற்கான சட்ட மூலம் நேற்று வெளியாக்கப்பட்டதாகவும், இந்த சட்ட மூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பெருந்தோட்டப் பகுதிகளின் அபிவிருத்தி திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் அமுலாக்க நடவடிக்கைகள் இந்த அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment