6/27/2018

1975 அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை - பி.ஜே.பி. ஆட்சியிலோ இன்று அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை! - கி.வீரமணி

மதச்சார்பின்மை - சமூகநீதி - பொருளாதாரச் சீர்குலைவுகள்
மக்கள் பாடம் கற்பிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை Résultat de recherche d'images pour "veeramani"
1975 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி கொண்டு வந்தது அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை; இப் பொழுது நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சியிலோ அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை யாகும். 1975 இல் ஆளும் கட்சிக்கு தேர்தலில் மக்கள் கற்பித்த பாடத்தை இந்த ஆட்சியாளரும் சந்திக்கப் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
1975 ஜூன் 25 ஆம் தேதி இந்திரா காந்தி அரசால் முன்பு எப்போதும் இந்தியா கண்டிராத ஒரு நெருக்கடி காலம் (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்டது.
43 ஆண்டுகளுக்கு முந்தைய நெருக்கடி நிலை
பத்திரிகைச் சுதந்திரம் முதல் நீதித்துறையின் சுதந்திரம் உள்பட பல அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, நாட்டின் முக்கிய தலைவர்கள், தலைவர்களுக்கு அடுத்த நிலை கட்சி ஊழியர்கள் முதலியோர் மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். (அதில் திராவிடர் கழகமும் உண்டு).
இந்திய ஜனநாயக வரலாற்றில் இல்லாத கரும்படலம் அது என்பதில் அய்யமில்லை.
அதற்காக சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் திருமதி இந்திரா காந்தி வருத்தமும் தெரிவித்துப் பதிவும் செய்தார்!
அந்த நெருக்கடி நிலைபற்றி குறைகூற பி.ஜே.பி.,க்கு தார்மீக உரிமை உண்டா?
43 ஆண்டுகள் ஓடிவிட்டன. உண்மைதான்! அதை காங்கிரசு கட்சிக்கு எதிரான பிரச்சார ஆயுதமாக பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், பிரதமர் மோடியும் அவரது குரலாக விளங்கும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் பயன் படுத்திட ஓங்கிக் குரல் எழுப்புகின்றனர்!
அதற்குரிய தார்மீக உரிமை பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கும்பல்களுக்கு இன்று உண்டா என்ற கேள்விக்கு அறிவு நாணயத்துடன் பதில் கூறவேண்டும்.
அன்று நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது பகிரங்க மாக; உரிமை பறிப்புகள் பகிரங்கமாக சட்டத்தின் துணை யுடன் நடைபெற்றன.
அந்த - நெருக்கடி நிலைபற்றி இன்று நெக்குருகப் பேசும் இந்த காவிகளின் ஆட்சியில் நாட்டில் காணும் நிலை என்ன? அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைதானே!
உண்ணும் உரிமையும் பறிபோகிறதே!
1. அரசியல் சட்டத்தின் பீடிகையில் உள்ள மதச் சார்பின்மை என்ற சொல்லையே நீக்கிவிட்டு குடியரசு நாளில் மத்திய அரசு செய்தி ஏடுகளில் விளம்பரப்படுத்துகிறது!
2. அன்று எண்ணும் (சிந்தனை) சுதந்திரப் பறிப்பு - இன்று உண்ணும் உரிமையும் பறிப்பு! மக்கள் என்ன உணவு சாப்பிடுவது என்பதை ஆளும் வர்க்கமா - அரசா தீர்மானிப்பது?
3. நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என் பதை உச்சநீதிமன்ற நீதிபதிகளே - செய்தியாளர்கள் கூட்டம் கூட்டி அறிவிக்கும் பட்டாங்கமான நிகழ்வு நடை பெறுகிறது!
4. பெரும் பெரும் முக்கிய பதவிகளுக்கு அமெரிக்கா விலிருந்து அழைத்து வரப்பட்ட ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தொடங்கி - இன்று வந்துள்ள செய்திப்படி - தேசிய மனித உரிமை ஆணையத்தின் உ.பி. மற்றும் அரியானா மாநிலங்களில் மதச்சிறுபான்மையினர் குறி வைத்து என்கவுண்ட்டர் கொலைகள் செய்யப்படுவது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் ஏதும் கூறாமல் அமைதியாக இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாமல், இதற்காக நியமிக்கப்பட்ட ஆணையத்தின் சிறப்பு மேற்பார்வையாளர் ஹர்ஷ் மாண்டர் தன் பதவியை இராஜினாமா செய்துள்ளதுவரை எத்தனை எத்தனையோ தொடர் நிகழ்வுகள்.
5. நாட்டின் தலைசிறந்த அறிவு ஜீவிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் - கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்புகள்போல் உள்ள இராமசேனா, இந்து சேனா போன்ற இந்துத்துவ தீவிரவாதக் குழுக்களால் பயிற்சி கொடுக்கப்பட்டு திட்டமிட்டு கொலை செய்யப்படும் அபாயகரமான சூழ்நிலை!
6. பா.ஜ.க.வுக்குள்ளேயே இருந்தவர்கள் ஆங்கே நிலவும் கருத்துரிமை பறிப்புக் காரணமாக வெளியேறி, பகிரங்கமாக விமர்சனம் செய்யும் விபரீதமான சூழ்நிலை இப்போது உள்ளதே!
முன்னாள் நிதியமைச்சரான யஷ்வந்த் சின்கா என்ற ஓய்வு பெற்ற பீகார் அய்.ஏ.எஸ். அதிகாரி இன்று நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது என்று கூறியுள்ளாரே!
7. குறிப்பாக பொருளாதாரத் துறையில், பண மதிப்பிழப்பு , பொது சேவை வரி என்ற பெயரில் மாநிலங்கள் மாதந்தோறும் டில்லியிடம் கையேந்தி பிச்சை கேட்கும் விசித்திர நிலை - அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடி நிலைதானே - கூட்டாட்சித் தத்துவமே குழிதோண்டிப் புதைக்கப்படும் கேலிக்கூத்து நடைபெறுகிறதே!
8. விவசாயிகள் தற்கொலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பெருகிவரும் நிலை.
9. வேலை கிட்டாத கொடுமையால் - 80 லட்சம் இளைஞர்கள் அவதி!
10. பன்னாட்டு முதலாளி வர்க்கத்தின் படையெடுப்புப் பல மடங்கு பெருக்கம். ஆக்டோபஸ் போல ஆதிக்கக் கரங்கள் அதிகாரவர்க்கத்தினையே ஆளுமை செய்யும் தோற்றம் உள்ளதே!
சமூகநீதிக்குச் சாவு மணி!
11. சமூகநீதிக்கு சாவு மணி அடிக்கும் போக்கு - அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பதவி நியமனங்களில் அரசின் தலையீடு - குருகுலக் கல்வி என்னும் பெயரால் பார்ப்பனீய - இந்துத்துவ சமஸ்கிருதக் கலாச்சாரத்தைத் திணிக்கும் கல்வி.
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமையைப் பறிக் கும் வண்ணம் படுகொலைகள், வன்கொடுமை சட்டத் தின் பற்களைப் பிடுங்கும் தீர்ப்பினைக் கண்டும் காணாததுபோல இருப்பது.
இப்படி ஏராளம் சொல்லிக் கொண்டே போகலாம்.
நட்பு வேடம் போட்டு நயவஞ்சகத்தால் மாநில உரிமைகள் முதல் மனித உரிமைகள் வரை பறிக்கும் இன்றைய அறிவிக்கப்படாத ஆபத்தான நெருக்கடியை மிஞ்சும் ஆளுமையைவிட, அறிவித்துவிட்டு அன்று நடந்த நெருக்கடி நிலை ஆயிரம் மடங்கு மேல் அல்லவா?
தேர்தல் முடிவு பாடம் கற்பிக்கும்!
அன்று ஆட்சியாளர்கள் சந்தித்த தேர்தல் முடி வினை - இன்றைய அறிவிக்கப்படாத நெருக்கடியின் நாயகர்கள், ஆட்சியாளர்கள் சந்திக்கப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை! ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது என்பதை எவரே மறுக்க முடியும்?
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
27.6.2018
»»  (மேலும்)

6/26/2018

மலையக அரசியல் தலைமைகளின் பாராட்டப்பட வேண்டிய சாதுரியம்

பெருந்தோட்ட மக்களுக்கான, புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கான சட்ட மூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.Résultat de recherche d'images pour "மிழ் முற்போக்கு கூட்டணியின்"
பெருந்தோட்டத்துறை அபிவிருத்திகளை இலக்காக கொண்டு, மலைநாட்டு, புதிய கிராமங்கள், உட்கட்டுமான மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரத்தினால் இந்த யோசனை கொண்டுவரப்பட்டது.
இதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது.
இதன்படி குறித்த அதிகார சபையை உருவாக்குவதற்கான சட்ட மூலம் நேற்று வெளியாக்கப்பட்டதாகவும், இந்த சட்ட மூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பெருந்தோட்டப் பகுதிகளின் அபிவிருத்தி திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் அமுலாக்க நடவடிக்கைகள் இந்த அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

»»  (மேலும்)

6/25/2018

கிழக்கின் முதல் முதல்வர் சந்திரகாந்தனின் விடுதலையை கோரி உண்ணாவிரதப்போராட்டம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களின் ஒன்றியும் ஏற்பாடு செய்த அடையாள உண்ணாவிரதம் இன்று 25.06.2018 காலை 7 மணிக்கு ஆரம்பமானது.  

சந்திரகாந்தன் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் சுமார் பதின் மூன்று  வருட காலம் ஈடுபட்டிருந்தவர் என்பதோடு ஜனநாயக பாதையில் பயணித்து  கிழக்கு மாகாண சபையின் முதலாவது  முதல்வராக தெரிவாகியிருந்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. தற்போது சுமார் இரண்டரை வருடங்களாக அரசியல் பழிவாங்கல் காரணமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.L’image contient peut-être : 5 personnes, personnes souriantes
»»  (மேலும்)

6/24/2018

திருநீற்று பட்டையும் குங்குமப் பொட்டும் தாடியும் தமிழ் தேசியத்தை பாதுகாக்குமா?

டமாகாண சபையின் நிர்வாகதிற்குட்பட்ட அரசதிணைக்களங்களின் சில நேர்மையான அதிகாரிகளுடன் பேசுகின்ற பொழுது எல்லோரும் சொல்லிவைத்தால் போல கூறுவது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் முதலைமைச்சர் பதவிக்கு தகுதி அற்றவர் என்பதுதான். Résultat de recherche d'images pour "விக்னேஸ்வரன்"
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை அவர்கள் தன்னிடம் நெருக்கமானவர்களிடம் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபக்கேடுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்று சொல்லித்திரிகின்றார்.
விக்னேஸ்வரன் வருகைதரும்போது அவர்காலில் விழுந்து மரியாதை செய்யும் கம்பன் கழகத்தினரும், விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றிய கம்பவாருதி ஜெயராஜ் அவர்களும் முதலமைச்சரின் தற்போதைய நடவடிக்கைகளில் பாரிய அதிருப்திகொண்டு அறிக்கைவிடுகின்றனர்.
இதைவிட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பல மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் மீது காழ்ப்புணர்வையே காட்டுகின்றனர்.
இவற்றின் உச்சகட்டமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கட்சிக்கு கட்டுப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவரின் அண்மைக்கால நடவடிக்கைகளுக்காக கூட்டமைப்பு அவரிடம் விளக்கம் கோரவேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முதலமைச்சர் மீது குறை கூறுவது வேறு யாருமல்ல.
அவர்மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்கள் தான்.
அவரை அரசியலுக்கு கொண்டுவருவதில் தீவிர ஆர்வம் காட்டியவர்கள் தான். 


திடீரென எல்லோரும் இவர்மீது குற்றம் சுமத்துவதற்கான காரணம் என்ன?
இவர் செய்த பாரிய தவறுகள்தான் என்ன?
ஒரு நல்ல மனிதன்,
ஒரு அப்பழுக்கில்லாத ஆன்மீகவாதி,
ஒரு தலைசிறந்த இலக்கியவாதி,
ஒரு துறைபோன சட்ட அறிவாளர்,
ஒரு தீவிர தமிழ் ஆர்வலர்.
இவ்வாறாக அனைத்து ஆற்றலும் நிறைந்த ஓர் கல்விமானை எதிர்ப்பது என்பது பாரிய கேள்விக்குரிய ஒன்றாகும்.
உண்மையில் மேலேசொன்ன அனைத்து தகைமைகளும் நிறைந்த அற்புத மனிதர் விக்னேஸ்வரன் என்பதில் இருவேறுபட்ட கருத்துக்கே இடம் இல்லை.
பிரச்சினைக்குரிய தளங்கள் இரண்டுதான் .
1) அவரின் அரசியல் நடவடிக்கைகள்.
2) அவருடைய நிர்வாகத்திறன்.
அரசியல் நடவடிக்கைகள்.
இதைப்பற்றி அதிகம் நான் எழுதவிரும்பவில்லை. எனது முந்தய கட்டுரைகளில் இவரின் அரசியல் செயல்பாடுகள் பற்றி அதிகமாகவே எழுதியிருக்கிறேன்.
ஆனாலும் சுருக்கமாக சொல்வதென்றால் தோற்றுப்போன ஒரு அரசியல் வாதியாகத்தான் நான் இவரை கருதுவேன்.
கற்பனையான, காலத்துக்கு ஒவ்வாத, நடைமுறைக்கு அப்பாற்பட்ட,மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுகின்ற அரசியல் கொள்கையைத்தான் முதலமைச்சர் அவர்கள் பின்பற்றுகின்றார்.
அரசியல் தெளிவோ, ராஜதந்திரமோ சிறிதளவு கூட இல்லாத சிறு மாணவனாகவே அறிக்கைகளை விடுகின்றார். தன்னை நியாயப்படுத்துவற்காக அவர் கையில் எடுத்துள்ள ஆயுதம் தமிழ் தேசியம்.



ன்னை ஒரு தீவிர தமிழ் தேசியவாதியாக காட்டிக்கொள்ளவே அதிகம் விரும்புகிறார்.
தமிழினிக்காக இவர் எழுதிய ஒருபக்க கட்டுரையும் அதையே சொல்லுகிறது. உண்மையிலேயே தமிழினி பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. தமிழினியின் விடுதலைக்காக கடைசிவரை ஒருதமிழ் வழக்கறிஞர் கூட வாதிடவில்லை . சிங்கள வழக்கறிஞர்களே தமிழினியை விடுவித்தார்கள். அப்போதெல்லாம் நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் பழம் தின்று கொட்டைபோட்ட விக்னேஸ்வரன் என்ன செய்தார்?. அப்போது வராத தமிழ்தேசிய உணர்வு தமிழினியின் மரணதிற்குபின்புதான் முதலமைச்சருக்கு வந்ததா?
இந்த இரட்டை வேடம்தான் முதலமைச்சரின் இன்றைய அரசியல் நிலைப்பாடு.
சிங்கள மக்களையும் தென்னிலங்கை அரசியலையும் ஆணிவேறு அக்குவேறாக அறிந்திருப்பவர் முதலமைச்சர். அவர்களோடு தனிப்பட்ட ரீதியில் மிகமிக நெருக்கமானவர்.
அவருக்கு தென்னிலங்கையின் அரசியல் நிலைப்பாடு தெளிவாகவே தெரியும்.
தென்னிலங்கையில் இருந்து நாம் பெறக்கூடியவை எவை ,பெறமுடியாதவை எவை ,பேசித்தீர்த்துகொள்ளக்கூடியவை எவையென அவருக்கு மிகமிக துல்லியமாக தெரியும்.
தெரிந்தும் பெறமுடியாதவை என தெளிவாக தெரிந்தவற்றுக்காகதான் முதலமைச்சர் குரல் கொடுக்கின்றார்.
இது சந்திரனில் இருந்து அரிசியை கொண்டுவருவதற்கு ஒப்பானது.
யாரை ஏமாற்றுவதற்கு இந்த அறிக்கைகள்.
உண்மையில் முதலமைச்சர் தன்னை தானே ஏமாற்றுகின்றார் என்பதே உண்மை.
கடந்த தேர்தலில் இவர் ஆடிய நடுநிலை நாடகம் இவருடைய அரசியல் முதிர்ச்சியின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இவர் விட்ட அறிக்கைகளில் இவரின் அரசியல் தெளிவின்மையும் தடுமாற்றமும் அப்பட்டமாக தெரிகிறது.
இவரின் அண்மைக்கால அறிக்கைகளையும் பேச்சுக்களையும் அவதானிக்கும் பொழுது ஒன்று தெளிவாக தெரிகிறது. பெரும்பான்மை இனத்துடனான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதை தவிர்த்து மீண்டும் மீண்டும் இன முரண் பாட்டுக்கு தூபமிடுவதாகவே இவரின் நடவடிக்கைகள் அமைகின்றது.
அரச எதிர்ப்பு மூலம் தன்னை ஒரு தீவிர தமிழ் தேசியவாதியாக காட்ட முற்படுவது தெளிவாக தெரிகிறது.


ரச பதவி வேண்டும், 3 லட்சம் வாடகையில் டெம்பில் ரோட்டில் வாசஸ்தலம் வேண்டும், அரச சொகுசு வாகனம் வேண்டும், வேண்டிய பொழுது கொழும்பு-யாழ்ப்பாணம் இலவச விமான டிக்கெட் வேண்டும், மத்திய அரசின் போலிஸ் பாதுகாப்பு வேண்டும் இவையெல்லாம் அரச செலவில் வேண்டும் , ஆனால் மக்களுக்கான நல்ல திட்டங்கள் வரும்போது மட்டும்தான் மத்திய அரசு வேண்டத்தகாதது ஆகின்றது.
போலிஸ் அதிகாரம் மாகாண சபையிடம் வரும்வரை தனக்கான மத்திய அரசின் போலிஸ் பாதுகாப்பை இவர் வேண்டாம் என சொல்லலாம் அல்லவா?
தனக்கான எல்லாத்தேவைகளுக்கும் மத்திய அரசு தேவை, மக்களுக்கான தேவைகளுக்கு மட்டும் மத்திய அரசுடனான எதிர்ப்பு அரசியல்.
ஏன் இந்த இரட்டை வேடம்.?


இதன் அர்த்தம் மத்திய அரசிடம் சரணாகதி அடைவது என்பதல்ல.
மத்திய அரசிடம் இருந்து பெறக்கூடிய உச்சக்கட்ட பலன்களை மக்களுக்கு பெற்றுகொடுக்கும் அதேவேளை தீர்க்கப்படாது இருக்கும் பிரச்சனைகளுக்காக ராஜதந்திர ரீதியில் செயல்படுவதே ஒரு முதிர்ந்த அரசியல்வாதியின் வெற்றி.
இந்த வகையில் விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு தோற்றுப்போன அரசியல் வாதியே.
நிர்வாக நடவடிக்கைகள்
உண்மையில் யாழ்பாணத்தை கொழும்பு,கண்டி,போன்று ஒரு mega city ஆக கட்டியெழுப்புவற்கான பூர்வாங்க நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது.
இது உயர் மட்டத்தில் இருக்கும் பலருக்கும் தெரிந்த ஒரு விடயம்.
எத்தனையோ ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவிருக்கிறது.
இதற்காக உலகவங்கி ,ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதிநிறுவனங்கள் எப்போதுவேண்டுமென்றாலும் நிதியைத்தர தயாராகவே இருக்கின்றன.
இந்த mega project ஐ எதிர்கொள்ளகூடிய நிலையில் வடமாகாண சபையும் அதன் அமைச்சர்களும் அதன் தலைமைப் பொறுப்பதிகாரியுமான முதலமைச்சரும் தயாராக இருக்கின்றார்களா என்றால் இல்லை என்பதே மிகத்தெளிவான பதில்.
நிர்வாக மட்டத்திலுள்ள அனைவருக்கும் இது தெரியும்.
இதற்கான அடிப்படையான சில தயார் படுத்தல்களையாவது வடமாகணசபையும் முதலமைச்சரும் செய்கின்றார்களா என்றால் அதுவுமில்லை.
Pro-Active ஆனா எந்த செயல் பாட்டையும் முதலமைச்சர் செய்வதில்லை.
மக்களாலும், வடமாகாண சபை mp களாலும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரைக்கும் முதலமைச்சர் அவர்கள் constructive ஆனா எந்த பதிலையும் சொல்லவில்லை.


ரச திணைக்கள உயர் அதிகாரின் ஊழல்களை வடமாகாண சபை MP கள் வடமாகணசபை அமர்வுகளில் சம்பந்தபட்ட அமைச்சர்களிடம் கேட்கும்போது அதற்கான சரியான பதிலோ /நடவடிக்கையோ அளிக்கப்படுவதில்லை /எடுக்கப்படுவதில்லை . மாறாக இந்த முறைகேடுகளை MP க்களுக்கு தெரியப்படுத்தும் சில நேர்மையான அதிகாரிகள் துரோகிகளாகவே கருதப்படுகின்றார்கள்.இவற்றையெல்லாம் முதலமைச்சர் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றார். வினைத்திறன் மிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
சில மக்கள் சந்திப்புகளின்போது மக்களின் கோரிக்கைகளுக்கான பொறுப்புணர்வுள்ள பதிலை முதலமைச்சர் அளிப்பதில்லை. அண்மையில் புங்குடுதீவில் நடந்த மக்கள் சந்திப்பின் பொது அம்மக்கள் புங்குடுதீவிற்கு தனியான காவல் நிலையம் வேண்டுமென்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கான முதலமைச்சரின் பதில் வேடிக்கையானது. போலிஸ் அதிகாரத்தை வடமாகாண சபைக்கு பெற்றுக்கொள்ளுவதற்காக நாம் போராடிக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் புதிய போலிஸ் நிலையத்தை மத்திய அரசிடம் கேட்கமுடியாது என்ற கருதுப்படவே முதலமைச்சர் பதிலளித்தார். போலிஸ் அதிகாரம் மாகாண அரசிடம் வரும்வரை அப்பகுதி மக்கள் அல்லல்படவேண்டும் என்பதா முதலமைச்சரின் வாதம் ?
இதைபோல மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டறிவதை விட அவை தீர்க்கப்பட முடியாது என்பதற்கான காரணங்களையே முதலமைச்சர் சொல்கின்றார்.
அண்மையில் மணல் பிரச்சினை சம்பந்தமான கரவெட்டி ஒன்றியம் முன்வைத்த கோரிக்கைக்கும் முதலமைச்சர் இவ்வாறே பதிலளித்தார்.


க்களின் எந்த பிரச்சினைக்கும் இவர் தீர்வுகண்டதாக தெரியவில்லை.
இவரின் ஆணைக்குட்பட்ட திணைக்களங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக இவர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
மாகாண சபையின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக இவர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.
இவருடன் சந்திக்க வரும் பிறநாட்டு அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் இவர் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.
முதலில் இனப்பிரச்சினையை தீருங்கள்.
பின்னர் அபிவிருத்தியை பற்றி பேசுங்கள் என்பதேயாகும்.
இது எவ்வளவு பிற்போக்கு சிந்தனை.
இனப்பிரைச்சினைக்கான தீர்வு முயற்சிகளோடு சமாந்தரமாக அபிவிருத்திக்கான முயற்சிகளுக்கு முதலமைச்சர் தயாரில்லை. இதனால் பெரு அளவிலான பணம் தடுக்கப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் சொல்லும் காரணம் சிரிப்புக்கிடமானது. அபிவிருத்திஎன்ற போர்வையில் தென்னிலங்கை நிறுவனங்களுக்கும் பணத்தை வாரிவழங்கும் வெளிநாட்டு சூழ்ச்சிதான் இந்த அபிவிருத்தி நாடகம் என்பதே அவர்பதில். அவருக்கு ஒன்று தெரியவில்லை. MEGA PROJECTS ஐ முன்னேடுப்பதற்கான வளங்கள் எதுவுமே எம்மிடம் இல்லை.
மனிதவளம், தொழில்சார் வல்லுனர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்டுமான நிறுவனங்கள், உபகரணங்கள் , இயந்திரங்கள், கட்டமைக்கப்பட்ட நிர்வாகம் என எதுவுமே எம்மிடம் இல்லை.
இவை எல்லாவற்றிற்கும் நாம் தென்னிலங்கையையே சார்ந்திருக்க வேண்டும்.
இதுவே உண்மை.
இதைவிடுத்து தென்னிலங்கைக்கு பணம் சென்றுவிடும் என்று அபிவிருத்தி திட்டங்களை பிற்போடுவது முதலமைச்சரின் அனுபவமின்மையும் தவறான எடுகோள்களையுமே எடுத்துக்காட்டுகின்றது.
இது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.


விக்னேஸ்வரன் அவர்கள் வினைத்திறன் இல்லாத ஒரு முதலமைச்சர் என்பதற்கு பின்வரும் காரணங்களை முன்வைக்கிறேன் .
1) அரசியல் தெளிவின்மை
2) இராஜ தந்திர அனுபவமின்மை
3) நிர்வாக திறனின்மை
4) மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஆளுமையின்மை
5) Pro-Active சிந்தனையின்மை
6) இனப்பிரச்சினையையும் அபிவிருத்தியையும் ஒரே தட்டில் இட்டு அளவிடுதல்
7) தன்னுடனான உட்கட்சி முரண்பாட்டை முறையாக கையாளாமை .
இறுதியாக ஒன்றை சொல்கின்றேன்.
முதலமைச்சர் ஒரு பழுத்த ஆன்மீகவாதி.
இந்து மதகொள்கைகளை தன் வாழ்வின் அடிப்படையாக கொண்டவர்.
பாவங்களுக்கு அஞ்சுபவர்.
மனிதநேயம் மிக்கவர்.
அவருடைய மதக்கொள்கைக் கொள்கைகளில் ஒன்று யோகநெறி.
யோகம் என்பது ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட கடைமையை சரிவர செய்தல் ஆகும்.
பலன் மீது பற்றுக்கொள்ளாது ஒருவன் தன் கடமையை தொடர்ச்சியாக ஆற்ற வேண்டும்.


இவர்களே தர்மவான்கள்.
இவர்களே இறைவனின் விருப்புக்குரியவர்கள்.
இவர்களே பிறவிப்பெரும் கடலை தாண்டக்கூடியவர்கள்.
கடைமையில் தவறுபவர்கள் இவற்றிற்கு தகுதியற்றவர்கள்.
கடைமையை செய்யாதவர்களில் முதலமைச்சரும் ஒருவர் .
வினைத்திறன் இல்லாதவர் விக்னேஸ்வரன்.
அரசியலைவிட்டு விலகிவிடுங்கள் ஐயா !
இந்த கட்டுரையை எழுதுவற்கு மூலகாரணமான நண்பர்களுக்கு நன்றி



*நவாதரன்   நன்றி முகநூல் 
»»  (மேலும்)