முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் சிவ.சந்திரகாந்தனின் விடுதலை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்.
2008 காலப்பகுதியில் சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதல்வராக பதவியேற்ற போது கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக பதவி வகித்தவர் இந்த மொஹான் விஜயவிக்கரம ஆகும். அவரது முகநூல் பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் சந்திரகாந்தனின் தடுப்புக்காவல் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டமைச்சராக்க பதவி வகித்த கதிர்காமரது கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் அண்மையில் விடுதலையாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் சட்டம் எல்லோருக்கும் சமமானதாக பிரயோகிக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவர்களது பதவிக்காலத்தில் மாகாண சபைகளின் அதிகாரம் பற்றிய பரஸ்பர முறுகல் நிலை இருவருக்கும் இடையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 commentaires :
Post a Comment