5/26/2018

கதிர்காமரை சுட்டவன் விடுதலையாக முடியுமென்றால் சந்திரகாந்தன் ஏன் தடுத்து வைக்கப்பட வேண்டும்? -முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்.

»»  (மேலும்)

5/22/2018

இந்திய போலீசாரின் வெறியாட்டம் 10 பேருக்கும் மேல் பலி

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தவர்களில் ஒருவர்புரட்சிகர இளைஞர் முன்னணியின் முன்னணி செயல்வீரர் தோழர். தமிழரசன் என்வருமாகும்.அத்தோடு  மேட்டுப்பட்டி கிளாஸ்ட்ன (40), தூத்துக்குடி  கந்தையா (55), குறுக்குசாலை கிராமம் தமிழரசன்(28), ஆசிரியர் காலனி சண்முகம் (40), தாமோதர் நகர் மணிராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இறந்தவரின் 3 பேரின் அடையாளம் தெரியவில்லை. துப்பாக்கிசூட்டில் 17 வயது மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் பலியான மாணவி வெனிஸ்டா உடல் என்று அடையாளம் தெரியவந்துள்ளது. வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் மாணவி வெனிஸ்டா உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.மேலும் 29 வயதான வினிதா என்கின்ற பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.L’image contient peut-être : 1 personne

தமிழ் நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் இது போன்ற துப்பாக்கிச் சூடு நடந்தது இல்லை, ஒரே நாளில் 8 பேர் போலீஸ் சுட்டுக் கொன்றதால் தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. அதுமட்டும்மல்லாமல் போலீசாரால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகள்   
என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கல்வீச்சில் 20 போலீஸ் உள்பட 65 பேர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை பேரணியாக சென்றனர். அப்போது பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து முன்னேறினர்.


அப்போது தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்ததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். ஆகையால் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அதுமட்டும் அல்லாமல் ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு தீவைக்கப்பட்டது.







»»  (மேலும்)

5/11/2018

கிழக்கின் அழகிய பன்மைத்துவம் -அலிக்கம்பையிலிருந்து பிரதி தவிசாளர்

ஏராளமான அவமானங்கள், புறக்கணிப்புகளுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எனப்படும் உள்ளூராட்சி துணைத் தலைவர் பதவி ஏற்றுள்ளார் விக்டர் ஜெகன்.
விக்டர் ஜெகன்

இந்தியாவிலிருந்து நீண்டகாலம் முன்பு இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படும் தெலுங்கு பேசும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஜெகன்.
ஜெகன் இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அலிக்கம்பைக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டு, இதே பதவிக்கு முதன் முறையாகவும், இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் இரண்டாவது தடவையாகவும் தெரிவாகியுள்ளார். இவருக்கு இப்போது 32 வயதாகிறது.
தன்னை 'குறவர்' என அழைப்பதை ஜெகன் விரும்பவில்லை. குறவர் சமூகத்துக்குரிய எந்தவொரு அடையாளமும் தமக்குத் தேவையில்லை என்று ஜெகன் கூறுகின்றார். குறவர் என்பதற்காகவே அவரும் அவரின் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எதிர்கொண்ட அவமானங்களும், புறக்கணிப்புகளும் அவரை இந்த மனநிலைக்குக் கொண்டுவந்துள்ளது.
இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் ஆலயடிவேம்பு பிரதேசம் அமைந்துள்ளது. இங்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஆலையடி வேம்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில்தான் அலிக்கம்பை கிராமமும் உள்ளது. இங்கு முழுதும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் வாழ்கின்றனர்.
இவர்கள் தங்களுக்கிடையில் தெலுங்கு மொழியிலேயே பேசிக் கொள்கின்றார்கள். குறவர்கள் பற்றிய புராணக் கதையொன்று இலங்கையில் உள்ளது. அலிக்கம்பையில் கிராம சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இளையதம்பி குலசேகரன் எழுதிய "அலிக்கம்பை வனக்குறவர்களும் வாழ்க்கை முறையும்" எனும் நூலில் அந்தக் கதை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"வேட்டையாடுதல், மந்தை வளர்ப்பு போன்ற தொழில்கள் காரணமாக குரவர்கள் இடம்பெயர்ந்து வாழத் தொடங்கினர். அனுராதபுரப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர்தான் தற்போது அலிக்கம்பைக் கிராமத்தில் உள்ளனர்" என்று, இளையதம்பி குலசேகரன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அலிக்கம்பை கிராமத்தில் தற்போது 370 குடும்பங்களைச் சேர்ந்த 1,320 பேர் வாழ்கின்றனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது, அபிவிருத்தியில் அலிக்கம்பைக் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் தகரம் மற்றும் ஓலைகளால் ஆன குடிசைகளில்தான் இன்னும் வாழ்கின்றனர். தண்ணீரைப் பெற்றுக் கொள்வதில் இக்கிராம மக்கள் மிக நீண்ட காலமாக கஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
வேட்டையாடுதல் மூலமும், பாம்பாட்டி மக்களை மகிழ்வித்தல் மற்றும் குறி (சாத்திரம்) சொல்லுதல் போன்றவற்றின் ஊடாகவும் இவர்கள் தமது வாழ்கைக்கான வருமானத்தினை ஒரு காலத்தில் பெற்று வந்தனர். ஆனால், இப்போது வேட்டையாடுவதற்கு அரசு தடைவிதித்து விட்டது. பாம்பாட்டுவதைப் பார்ப்பதிலும், குறிகேட்பதிலும் மக்களுக்கு ஆர்வமில்லை. அதனால் வேறு தொழிலைச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு இவர்கள் தள்ளப்பட்டனர். இப்போது விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் கூலித் தொழில்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், வறுமை இவர்க
இலங்கையில் 1956ஆம் ஆண்டளவில் பணிபுரிந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை குக் என்பவர் அலிக்கம்பை மக்களின் வாழ்க்கை முறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். இந்த மக்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கும், அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் உணவுகளைப் பெறுவதற்கான முத்திரைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அருட்தந்தை குக் உதவியாக இருந்தார். அதற்கு முன்னர் இவர்களின் பெயர்கள் அரசு பதிவுகளில் இருக்கவில்லை. இக்காலத்தில் இவர்களை கிறிஸ்தவ மதத்துக்கு அருட்தந்தை குக் மாற்றினார்.
குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏனைய சமூகத்தவர்களிடமிருந்து இன்னும் உரிய மரியாதை கிடைக்கவில்லை. அநேகமான தருணங்களில் அவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். தான் முதன்முதலாக பிரதித் தவிசாராய் தெரிவு செய்யப்பட்ட போது, தமது சபையிலிருந்த உறுப்பினர்களில் கணிசமானோர் அதனை விரும்பவில்லை என்கிறார் ஜெகன். குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதித் தவிசாளராக்குவதற்கு சிலர் வெளிப்படையாகவே வெறுப்பினை வெளிட்டதாகவும் ஜெகன் கூறுகின்றார்.
நாங்கள் சாப்பிட்ட பாத்திரங்களில் சாப்பிடுவதைக் கூட, சில சமூகத்தவர்கள் தவிர்த்துக் கொள்கின்றார்கள். அதிகமானோரின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது" என்று கூறி, அலிக்கம்பை கிராமத் தலைவர் பெத்த சின்னவன் மரியதாஸ் கவலைப்பட்டார்.
இவ்வாறு, ஒதுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தம்மை ஏற்றுக் கொள்வதற்குத் தயங்குகின்றவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்துக்குரிய சபையொன்றின் பிரதித் தவிசாளராக தெரிவானமை குறித்து, பலரும் வியப்பாகவே பார்க்கின்றனர்.
"இலங்கையின் அரசியல் முறைமைதான் ஜெகனை இந்தப் பதவியில் தொடர்ந்தும் அமர்த்தி வருகிறது. இல்லாவிட்டால், அவருக்கு இந்தப் பதவி கிடைத்திருக்காது. 2006ஆம் ஆண்டு ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றமையின் காரணத்தினால்தான், ஜெகனுக்கு பிரதித்தவிசாளர் பதவியை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் காரணமாகத்தான் இந்தத் தடவையும் அவர் பிரதித் தவிசாளராகியுள்ளார்" என்கிறார் அலிக்கம்பையில் அமைந்துள்ள புனித சேவியர் ஆலயத்தின் அருட்தந்தை சூசை நாயகம்

»»  (மேலும்)

5/10/2018

மலேசியா: 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி

மலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹாடீர் மொஹமத் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளார். 
மஹாடீர் முகமத்
92 வயதாகும் அவர், 60 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த பேரீஸான் நேஷ்னல் கூட்டணியை அண்மையில் நடந்த தேர்தலில் தோற்கடித்தார்.
ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம்சுமத்தப்பட்ட தனது அரசியல் மாணவரும், மலேசிய பிரதமருமான நஜிப் ரசாக்கை எதிர்த்து இந்த தேர்தலில் போட்டியிட தனது அரசியல் ஓய்வை விலக்கி கொண்டு மஹாடீர் முகமத் தேர்தல் களமிறங்கினார்.
மஹாடீர் மொஹமதின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவையாகும்.
தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஹாடீர் மொஹமத், ''நாங்கள் பழிவாங்க நினைக்கவில்லை; நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விரும்புகிறோம்'' என்று கூறினார்.
வியாழக்கிழமையன்று தனது பதவியேற்பு நடக்கும் என்று மஹாடீர் மொஹமத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
»»  (மேலும்)

இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் தேர்தலாக மாறியிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தல்

இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் தேர்தலாக மாறியிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தல், காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று பெரிய கட்சிகளுக்குமே மிக மிக முக்கியமான தேர்தலாக உருவெடுத்திருக்கிறது.
Résultat de recherche d'images

கர்நாடக மாநில சட்டமன்றத்தில் 224 இடங்கள் இருக்கின்றன. மே 12ஆம் தேதியன்று 223 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஜெயநகர் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளரான பி.என். விஜயகுமார் உயிரிழந்துவிட்டதால் அந்தத் தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. மே 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தற்போதைய சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி 119 இடங்களை வைத்திருக்கிறது. பா.ஜ.க. 42 இடங்களையும் மதச் சார்பற்ற ஜனதா தளம் 29 (40 இடங்களில் வெற்றிபெற்றாலும் பல உறுப்பினர்கள் பின்னர் வெளியேறினர்) இடங்களையும் வைத்திருக்கின்றன.
»»  (மேலும்)

5/09/2018

பட்டதாரிகள் மீது வன்முறையை ஏவி விட்ட நல்லாட்சி அரசு

நாங்கள் எம் தூரதேசமிருந்து உங்களது புகையை புசிக்க வரவுமில்லை, உங்களது தண்ணீரில் குளிக்கவும் வரவில்லை......
நாங்கள் கோரியது எமது தொழிலுரிமையை, நீங்கள் எமது போராட்டத்தை அடக்க எம்மீது கண்ணீர்புகையையோ உங்கள் துர் நாற்ற தண்ணீரையோ வீசவேண்டாம், எமது தொழிலுரிமையை எமக்காக வீசுங்கள்..
கையாலாகாத நல்லாட்சி அரசே!!!
நீங்கள் ஒன்றைமட்டும் நினைவில் வையுங்கள், எம்மீது நீங்கள் வீசிய கண்ணீர் புகை அனைத்தும் எமது நாட்டின் முறையற்ற கல்வி கொள்கையை எண்ணி ஏழை குடும்ப பட்டதாரிகளது மனதில் பற்றும் போராட்ட தீயின் வெளிபாடுகள்..... நீங்கள் எம்மீது பீச்சியடடித்த அத்தனை தண்ணீரும் கையாலாகாத #நல்லாட்சி அரசின்கீழ் தொழிலற்று கதறியழும் ஏழை பட்டதாரிகளின் கண்ணீர்களில் மொத்தம்.....
»»  (மேலும்)

இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் வரும்….; ஆனா …… வரும்

உயிர் தப்புதல், உடைமைகளை பாதுகாத்தல் என்பதே இலங்கைச் சிறுபான்மை இனங்களான தமிழ் பேசும் மக்களின் முப்பது வருடத்திற்கு மேலான பிரதான அபிலாசையாக இருந்தது. இன்றைய இலங்கையானது, யுத்தமும் அதன் தொடர் இழப்புகளாக இருந்த கொலைகளும், மரணமும், பொருள் அழிவும் காணாத ஒன்பது வருடங்களைக் கடந்து வருகிறது. இலங்கைவாழ் சமூகங்களின் மத-பண்பாட்டு கலாசாரங்களின் புனிதங்களையும், அதனையே தமது தனித்துவமான ‘இருத்தலுக்கான’ வரலாற்று ஆதாரமாகவும் நிலைநிறுத்தும் முயற்சிகளே இனக்களுக்கிடையிலான தற்போதைய முரண்பாடுகளாக மேலோங்கி வருவதாகத் தெரிகிறது. திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரி விவகாரம் உட்பட.
இலங்கை தேசமானது பௌத்த மதப் புனிதத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டதனால், அது மாகாவம்ச வரலாற்றுப் பிரதியினால் சிங்கள மக்களுக்கான வாக்களிக்கப்பட்ட ஒரு புனித பூமி. இந்திய தேசமானது பெயரளவில் மதப்பாகுபாடற்ற ஒரு தேசமாக அரசியல் சாசனத்தில் பொறிக்கப்பட்டிருப்பினும், நடைமுறையில் இந்துமதத்திற்கும், இந்துமக்களுக்குமான வாக்களிக்கப்பட்ட ஒரு புனித பூமி. அதை மேலும் தீ வைத்து சடைத்து வியாபிக்க வைப்பதையே தனது பிரதான பணியாக மேற்கொண்டுவருகிறது அரசியல் அதிகாரத்திலுள்ள பாராதிய ஜனதா கட்சி. எனவே இலங்கையும், இந்தியாவும் அடிப்படையில் மத அடிப்படைவாதத்தையே பிரதானமாக தமது அரசியலோடு பிணைக்கப்பட நாடுகளாகும். இதில் நாம் இந்தியாவிலுள்ள இந்துமதம், சாதியம், பார்ப்பனர் போன்ற விவகாரத்தை ஒருபுறம் ஓரத்தில் நிறுத்திக்கொள்வோம். காரணம் இந்துமதமோ சாதியமோ நாம் எதிர்கொள்ளவிருக்கும் ஒரு புதிதான புதினம் அல்லவே. ஆனால் இந்திய இந்துமத அடிப்படைவாதமானது பல்வேறு முகங்களில் இலங்கையையும் சூழ்ந்து நிலைகொள்வதற்கான முயற்சிகளை நாம் அவதானித்தும் வருகின்றோம். அதன் எச்சரிகையாகவே; இலங்கையில் ஆர்.எஸ்.எஸ். வரும், ஆனால் அது பல்வேறு முகங்களுடன் வரும் என நாம் அஞ்சுகின்றோம்.எனவே நாம் இன்றைய பிரதான பேசுபொருளாகவும் கருதுவது இலங்கையில் வேரூன்ற முனையும் இந்தியாவின் அரசியல்-மத-பண்பாட்டுக் கலாசார தலையீடுகளும் அதன் விளைவுகளும் குறித்ததாகும். மதங்களின் அடிப்படை வாதத்திற்கும், மதங்களோடு பிணைக்கப்பட்ட வெவ்வேறு பண்பாட்டுக் கலாசார மரபுகளுக்கும் (சாதியம் உட்பட) வேறுபாடுகள் அதிகம். மத-பண்பாட்டுக் கலாசார மரபுகளை தமது நம்பிக்கைகளாக பேணுவதென்பது சம்பந்தப்பட்ட மனிதர்களின், சமூகத்தின் சுதந்திரம். ஆனால் மத அடிப்படைவாதம் என்பது அந்த மதம் சார்ந்த சமூகத்தின் அரசியல் சமூக-அதிகார இருப்பின் தனித்துவ ஆக்கிரமிப்புக்கான ஒரு வடிவமாகவே செயல்பட்டு வருகிறது. இவ்வாறான மத அடிப்படைவாத மனநிலை வேரூன்றி சடைக்கும் சமூகமானது பிற சமூகங்களின் தனித்துவங்களையும், சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தவே முனையும். அதற்காக தனது அரசியல் அதிகாரத்தை பிரயோகித்து பல்வேறு வன்முறை வழிமுறைகளையும் மேற்கொள்ள தயங்காதென்பதையும் நாம் அனுபவரீதியாகவும் அறிவோம்.
மறவன்புலவு  சச்சிதானந்தம் என்பவர் 2016ல் சிவசேனை எனும் இந்துமத அமைப்பை இலங்கையில் ஸ்தாபித்தபோது அதன் விளைவுகள் குறித்து நாம் அப்போதே எச்சரித்திருந்தோம்.  ஆனால் 2016ல் இருந்து தற்போதைய இரண்டுவருட காலத்திற்குள் இந்துமத அடிப்படைவாதசக்திகளானது பல்வேறு அடையாளங்களுடன் ஊடுருவி வருவதை பல முற்போக்குசக்திகள் உட்பட, ஊடகங்களும் அவதானித்தேவருகின்றது.
இந்துமத பண்பாட்டுக் கலாசாரப் பாதுகாப்பு எனும் பெயரில் இந்திய இந்துமத அடிப்படைவாத சக்திகள் பல்வேறு வடிவங்களில் ஊடுருவி வருவதை நாம் எச்சரிக்கையோடு அணுகவேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் எனும் அடையாளத்துடன் வரட்டும் அப்போது பார்த்துக்கொள்வோம் என எம்மால் இதை அலட்சியப்படுத்திவிட முடியாது. சிவசேனை என மறவன்புலவு சச்சிதானம் காவிவந்ததை, அச்செயல்பாட்டை, வெறுமெனே சிவாஜியின் சேனை அதற்கும் சிவசேனாவிற்கும் தொடர்பு இல்லை என எங்களால் ‘எம்.ஜி.ஆர்’ வீரம் பேசமுடியாதிருக்கிறது. அப்படித்தான் அது மறவன்புலவு சச்சிதானந்தம் போன்ற தனிமனித நடவடிக்கைகளாக மட்டும் இருக்குமேயானாலும் இதை மேலோட்டமாக அவதானித்து கடந்தும் போய்விடலாம். ஆனால் எதிர்காலத்தில் இந்து மதவாதமானது தமிழ் அரசியல் அதிகாரத்தோடும் பிணைக்கப்படும் ஆபத்து இருப்பதற்கான சமிக்ஞையை ஐயா சம்பந்தன் அவர்கள் திருகோணமலை சிறீ சண்முக இந்து மகளிர் கல்லூரி விவகாரத்தில் வெளிப்படுத்தியும் இருக்கின்றார்.
திருகோணமலை சிறீ சண்முக இந்து மகளிர் கல்லூரி விவகாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் நிலைப்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் (NFGG) தெரிவித்துள்ளது. இக்கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் உடை அணியும் விவகாரம் சம்பந்தமான கடிதம் ஒன்று அமைச்சர் றிசாத் பதியூதின் அவர்களால் இரா சம்பந்தன் அவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதியும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின் பதிலும் அதற்கான விளக்கங்களும் பிற இனங்களுக்கான ஒரு அச்சுறுத்தலாகவே நாம் கருதுகின்றோம்.
‘’தமிழ் மற்றும்  முஸ்லிம்  இனங்களைச்  சேர்ந்த  தமிழ்  பேசும் மக்கள்  தொடர்பாக எமது தலைவர்தந்தை செல்வநாயகம் அவர்கள் பின்பற்றியதும், அவரைத் தொடர்ந்து தலைவர் .அமிர்தலிங்கம் அவர்கள் பின்பற்றியதுமான  நாம்தமிழ்பேசும்மக்கள்’   என்ற  கொள்கையை  நானும் தொடர்ந்து பின்பற்றிவருகிறேன் என்பதை  மக்களும் நீங்களும் நன்கு  அறிவீர்கள்.‘’ என்பதனூடாக தமிழ் மொழி பேசுபவர்கள் எனும் ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டே அவர்களது பல்வேறு தனித்துவங்கள் கேள்விக்குள்ளாக்கப்படும் சூழலை இந்த ஒற்றையடையாளம் வலியுறுத்தும். இவ்வாறான விபரீதம் குறித்த உரையாடல்கள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு முதிர்ந்த நிலையிலும், இரா.சம்பந்தன் அவர்களின் மிதவாதம் தளர்ந்து போகவில்லை.
‘’1960 களுக்குப்  பின்னர்  இந்தப்பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்னர்  இங்கு இந்து மகளிர்மாத்திரம்  உயர்கல்வி  கற்றுவந்ததோடு, இந்து  கலாசாரப் பாரம்பரியங்களும்  பின்பற்றப்பட்டு வந்த  வரலாறு  உண்டு‘’ என்கிறார். எனவே இரா.சம்பந்தன் அவர்களுக்கு திருகோணமலையின் இந்துப் பாரம்பரியக் கலாசார ‘வரலாற்றை’ முஸ்லிம் சமூகத்தினருக்கு வலியுறுத்தவும், ஞாபகப்படுத்தவும் வேண்டிய தேவையும் அவசியமும் என்ன? இவர் எந்த சமூகத்துக்கான அரசியல் பிரதிநிதியாக தன்னை வெளிப்படுத்துகிறார். திரு.செல்வநாயகம் காலத்து அரசியல் ‘வரலாற்றுச் சிந்தனைச் சகதிக்குள்’ இருந்தும் மீள முடியாதவர்கள் இவர்கள்.
‘இந்துத்துவ அரசியல் எண்ணமோ, பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பிரிவோ, பார்ப்பன சாதிய மேலாதிக்கமோ இலங்கையில் வாழும் தமிழ்ர்களிடம் இல்லை,’ அவ்வாறு நிகழ்வதற்கு சாத்தியமே இல்லை என சிலர் வாதிட்டாலும், இந்துப் பண்பாடு கலாசாரம் என்ற அடையாளத்துடன் இந்துமத அடிப்படைவாதத்தை ஊன்றுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவே நாம் அவதானிக்கின்றோம்.
பிற இனங்கள் மீதான பாராபட்ச மனப்பான்மை கொண்ட அரசியல் அதிகார இருப்பிற்கான செயல்பாடுகளானது எப்போதும் ஒரேவழிமுறையைப் பேணுவதாக அமைவதில்லை. சந்தர்ப்பங்களுக்கும் சூழலுக்கும் அமைவாக வெவ்வேறு ஒடுக்குமுறை வடிவத்தை பிரயோகிக்கவே முனையும். இலங்கையின் தற்போதை யுத்தமற்ற சூழலில் இனமுரண்பாட்டை தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருப்பதற்கான புறநிலைக் காரணிகள் என்பது சிங்கள அரசியல் அதிகாரத்திற்கு பலவீனமாகப் போகலாம். இவ்வாறான தற்போதைய நிலைமையில் முஸ்லிம் சமூகமே மகாவம்சப் பிரதியினால் வாக்களிக்கப்பட்ட தமது புனித பூமிக்கு களங்கமான சமூகமாக கருதப்படுகிறது. யுத்தத்திற்குப் பின்பான இலங்கையிலுள்ள சிங்கள கடும்போக்காளர்களின் நடவடிக்கைகளும் அதையே ஊர்ஜிதப்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகங்களுக்கெதிரான வன்முறை நடவடிக்கைகளும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நாம் அவதானித்தே வருகின்றோம். மாறி, மாறி வரும் சிங்கள அரச அதிகார சக்திகளும் அதை எவ்வாறு எதிர்கொள்கின்றதென்பதையும் அவதானிக்க்கூடியதாக இருக்கின்றது.
பொதுபலசேனாவிற்கும்  ஆர்.எஸ்.எஸ்  அமைப்பு களுக்குமிடையிலான  உறவின்  தாற்பரியம்  குறித்து  இவ்வாறு  ஒருகருத்தும்  நிலவுகிறது: ‘’இலங்கையை  பவுத்த  தேசமாகப்  பிரகடனப்படுத்தி  நாடு  முழுவதும் புத்தகோயில்களை  எழுப்பத்திட்டமிடும்  பொதுபலசேனா  ஒருபோதும்  இந்துத்துவத்தை  பரப்ப  முயலும்சக்திகளின்  நீடித்த  நட்புச்சக்தியாக  இருக்காது. இந்த  இடத்தில்  பவுத்தர்களுக்கு  இந்தியாமீதும்  இந்து  ஆட்சியாளர்கள்மீதும்  வரலாற்றுரீதியாகவே  உள்ள  ஆதி  அச்சத்தை  நாம்  மறந்துவிடலாகாதுபவுத்தஇந்துநாகரிகங்களின்  கூட்டென்பதெல்லாம்  அவர்களின்  தந்திரவார்த்தைகள். இந்தியாவில்  பவுத்தத்தைப்  பார்ப்பனியம்  கருவறுத்தது  ஒன்றும்  புராணக்கதையல்லவரலாறு!‘’ என்பதாக வரலாற்றை மட்டுமே ஆதாரமாக மேற்கோள்காட்ட முனையும் மேற்படி கருத்துநிலையானது எவ்வாறு வரலாற்றில் நீடித்த நட்பு சக்தி என ஒன்றை எதிர்பார்க்க முடிந்தது! அதிகாரத்தை அல்லது ஒரு திட்டத்தை அடைவதற்கான தனித்துவமான பலமோ ஆதரவோ கிடைக்காதபோது பல்வேறு முரண்பாடுகள் கொண்ட சக்திகளானது, தற்காலிகமான நட்பு சக்திகளாக இணையவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படும். இதற்கான சிறு உதாரணமாக அண்மையில் நட்பு சக்திகளாக ஈ.பி.டி யும், தமிழ் கூட்டமைப்பும் அதிகாரத்தை பகிர்ந்துகொண்டதைக் கூறலாம். இதில்  பிரதானமான நோக்கம் என்பது இலக்கை அடைவதென்பதே.  மாறாக இணையும் சக்திகளுக்கிடையிலான உறவுகள் நீடிக்குமா நீடிக்காத என்பதில் முரண்பாட்டுடன் இணங்கும் தரப்பினருக்கு துளியும் அக்கறை இருப்பதில்லை.
சிங்கள கடும்போக்காளர்களின் (பொதுபல சேனா போன்ற) மறைமுகமான ‘இலக்கு’ முஸ்லிம் சமூகம். இந்திய ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துமத அடிப்படைவாத சக்திகளின் ‘இலக்கு’ இந்தமத அடிப்படைவாத கருத்தியலையும் தமது அரசியல்-பொருளாதார ஆளுமைகளையும் இலங்கைக்குள் வேரூன்ற வைப்பது. எனவே இந்த அடிப்படையான இலக்குகளை கருத்தில்கொண்டு இவர்கள் தற்காலிகமாக இணைவதற்கான வாய்ப்பு இருக்கலாம்.
இங்கே நாம் நிதானமாக அவதானிக்க வேண்டியது, இந்துமதம் என்பதாகவோ, பார்ப்பனியம், என்பதாகவோ, சாதியம் என்பதாகவோ அல்ல. மதஅடிப்படைவாதம் என்பதையே. பார்ப்பனிய இந்துமதமானது பல்வேறு கிராமியச் சிறு தெய்வங்களையும் உள்வாங்கி வளர்ந்தது. புத்தரையும் அது விட்டுவைத்ததா? இல்லையே! இந்த நிலைமையில் இலங்கையையோ அல்லது தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களையோஇராவணஜென்மபூமி’ என பிரகடப்படுத்தினால் அதுவே இந்திய இந்துத்துவ அடிப்படைவாத சக்திகளின் இலக்கிற்கு அனுகூலமாக அமைந்துவிடும் ஆபத்துள்ளது. இராவணனுக்கும் இராமனுக்கும் உள்ள பிரச்சனை சீதை தானே தவிர மதமல்லவே. இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் நலன்களோடும் பிணைப்பதற்கான அரசியலை மேற்கொள்ளவேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்து பண்பாட்டு கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, முஸ்லிம் ஆசிரியைகள் கட்டுப்பட்டு பணிந்து நடக்கவேண்டும் என்கின்ற பாணியில் அச்சுறுத்துகிறார். அவரது நோக்கத்திற்கேற்ப இராவண  ஜென்ம  பூமி என்பதும் தமிழர்களுக்கான வாக்களிக்கப்பட்ட பூமி என்பதான கருத்தூன்றப்பட்டு வளருமானால் விளைவு என்னவாகும்!
‘’இன்றுஇலங்கையில்வாழும்இந்துக்கள்தொகையில்வெள்ளாளர்இருபதுவிழுக்காடு, வெள்ளாள  ஆதிக்கசக்திகளுக்கு  வெளியே  உள்ளவர்கள்  எண்பது  விழுக்காடு…, இலங்கையின்  அறுதிப்பெரும்பான்மை  இந்துக்கள்  வெறுக்கத்தக்க  ஆர். எஸ்.எஸ்சிவசேனை  அரசியலை  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதற்கான  எந்தநியாயமோதே  வையோ  அரசியல்கலாசாரபொருளியல்  ரீதியாக அவர்களிற்குக்கிடையாது.‘’ எனும் நோக்கு நிலையில் பிரிந்து நிற்பதாகக் கருதும் மக்கள், வாக்களிக்கப்பட்ட ‘இராவண ஜென்ம பூமி’ எனும் கருத்தியலோடு இணைந்துவிட்டால் நிலைமை என்னவாகும்!
இனவாத யுத்தம் அணையாப் பெருந் தீயாகப் பரவியபோது தலித்துக்களையும், மலையக மக்களையும், கிழக்கு மாகாண மக்களையும் கொல்லக்கொடுத்து தாம் தப்பித்ததுபோன்று வாக்களிக்கப்பட்ட ‘இராவண ஜென்ம பூமியில்’ இனங்களுக்கிடையிலேயான மதஅடிப்டைவாதக் கலவரங்கள் தொடங்குமாயின் மேலே குறிப்பிட்ட அந்த இருபது வீதமானவர்களும் நாட்டைவிட்டு ஒடிவிடுவார்களே!
மத அடிப்படை வாதத்தோடும், இனவாதத்தோடும், லஞ்ச ஊழல்களோடும் பிணைக்கப்பட்ட அரசியலாகவே சிங்கள மக்களுக்கான அரசியல் செயல்பாடுகளை அவதானிக்க முடிகிறது. ஆனால் அதிர்ஸ்டவசமாக சிங்கள அரசியல் செயல்பாடுகள் போன்று எந்தவிதமான ‘மோசடி அரசியல்’ எதுவும் செய்யாது, சும்மா தங்கள் இஸ்ரத்திற்கு மக்களை ஏமாற்றுவதோடு பிணைக்கப்பட்ட அரசியலை மட்டுமே மேற்கொண்டு வந்த ‘அப்பாவிகள்’ (!!!). எமது தமிழ் மிதவாத அரசியல் தலைமைகள். இன்றைய யுத்தமற்ற சூழலில் அவர்களுக்கும் தற்போது பெரும் நெருக்கடிதான்; மக்களை ஏமாற்றும் வழிமுறையையே தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாதிருப்பதென்பது. சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக தமிழ் மக்களையும் மிக இலகுவாக தீண்டக்ககூடிய இனவாதத்தின் பின்னணியிலேயே மத அடிப்படைவாதத்தையும் பிரயோகிக்க முனையலாம். இதுவரைகாலமும் மக்களை ஏமாற்றும் அரசிலை மேற்கொண்டவர்கள் தொடர்ந்தும் தமது இருப்பிற்காக இலகுவாக பற்றி எரியக்கூடிய வழிமுறையையே தேடுவார்கள். அதற்கான முதற்கொள்ளியை திருகோணமலை கல்லூரி விவகாரத்தில் இரா. சம்பந்தன் ஐயா அவர்களே வைத்திருப்பதாக கருதுகின்றோம். அதுமட்டுமல்லாது அதற்கு நாமே வாக்களிக்கப்பட்ட ‘இராவண ஜென்ம பூமி’ எனும் பொல்லைக் கொடுத்து அடிவாங்க வேண்டிய நிலை வந்தால்….!ஒன்றை நாம் சிந்திக்கவேண்டும். வரும்காலங்களில் அரசியல் யுத்தம் ஒன்று ஏற்படுமாயின் பிறநாடுகள் வந்து அதை அணைத்துவிட வாய்ப்பிருக்கிறது. ஆனால் எமக்கான வாக்களிக்கப்பட்ட பூமி எனும் அடிப்படை மதவாதக் கருத்துநிலை மக்கள் மத்தியில் ஊன்றிவிட்டால்!! அவை கடந்தகால யுத்தத்தை மிஞ்சிய கொடூரமாகவே இருக்கும்.
‘’எமது கண்களுக்கு முன்னால் விரிந்துகிடக்கும் உலக அனுபவம்‘’
அமெரிக்க இஸ்ரவேல் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்குள் மட்டுமே பாலஸ்தீன இஸ்ரவேல் விவகாரமானது தீர்வு கிடைக்க வழியில்லாதிருக்கின்றதென்பதே எம்மில் பலருக்கும் உள்ள கருத்து நிலையாகும். அதிலும் மிகப்பெரிய உண்மையுள்ளதை மறுப்பதற்கில்லை. ஆயினும் மூன்று சமூகங்களுக்கான வாக்களிக்கப்பட்ட பூமியாக கருதப்பட்டு வருவதே சிக்கலுக்கான அடிப்படைக் காரணமாகும். இஸ்லாமிய, கிருஸ்தவ, யூத சமூகங்களானது; தமக்கான வாக்களிக்கப்பட்ட பூமியே ஜெருசேலம் எனும் கருத்துநிலையிலேயே தொடர்ந்தும் மோதிக் கொண்டிருக்கின்றனர்.
பிறிதொருவரின் கருத்தை, அபிப்பிராயத்தை, நிராகரிப்பதோ, அலட்சியப்படுத்துவதையோ நோக்கமாகக் கொண்டு இப்பதிவை நாம் முன்வைக்கவில்லை. இன்றைய இந்திய, இந்துமத கலாசார அரசியல் அதிகார சக்திகள் ஏதோ ஒரு வடிவத்தில் மத அடிப்படைவாதத்தை இலங்கையிலும் வேரூன்ற முயற்சிக்கின்றார்கள் என்பது எமது எண்ணமாகும். அதற்கு தமிழ் அரசியல் தலைமைகளும் துணைபோகும் அவலம் நிகழ்ந்து விடுமோ எனும் அச்சமே இப்பதிவுக்கான எமது அடிப்படைக் காரணம்.
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணிபிரான்ஸ்
»»  (மேலும்)