ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, 'மூடு டாஸ்மாக்கை...' என்பது உள்ளிட்டப் பாடல் காணொளிகளைத் தயாரித்து, அதில் தாமே தோன்றிப் பாடியவர் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த கோவன். இதனால், அப்போதைய அரசின் கோபத்துக்கு இலக்காகி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பிறகு அவருக்கு ஆதரவாக எழுந்த குரல்களும், வைரலான அவரது பாடல்களும் அவரைப் பிரபலமாக்கின.
அண்மையில் தமிழகத்துக்கு வந்து சர்ச்சைக்குள்ளான ராமராஜ்ஜிய ரத யாத்திரை போன்றவற்றை எதிர்த்து கோவன் தோன்றி, தயாரித்த காணொளிகள் சமீபத்தில் பரவலான கவனத்தைப் பெற்றன. இதையடுத்து, கோவன் காவல் துறையினரால் வெள்ளிக்கிழமை திருச்சியில் திடீரென கைது செய்யப்பட்டார்.
0 commentaires :
Post a Comment