4/06/2018

கூட்டமைப்பின் ஏகாதிபத்திய விசுவாசம் ரணிலை காப்பாற்றியது

10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான தமிழர் விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
.Résultat d’images associées

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது.
தற்போதைய "நல்லாட்சி" அரசாங்கம் பதவிக்கு வந்து சில வருடங்கள் ஆகிவிட்டபோதிலும், தமிழரின் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்தோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு குறித்தோ போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறும் தமிழர் தரப்பு விமர்சகர்கள், ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க எழுத்து மூல உறுதி மொழிகளை பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அதனால், 10 நிபந்தனைகளை விதித்தே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து, பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்ததாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின்போது அதனை எதிர்த்து வாக்களிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட 10 நிபந்தனைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ அமைப்பு கூறியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவு வழங்குவதற்குப் பதிலாகவே இந்த 10 விடயங்களையும் ரணில் ஏற்றுக்கொண்டதாகவும், அந்தக் கட்சி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.


0 commentaires :

Post a Comment