4/27/2018

அணு ஆயுதமற்ற கொரிய பிராந்தியம்- இரு தலைவர்கள் உறுதி

கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.கொரிய

சந்திப்புக்கு பின்னர் பேசிய வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், இப்பகுதியின் துரதிருஷ்டவசமான வரலாறு(கொரிய போர்) மீண்டும் திரும்பாது என்பதை உறுதிப்படுத்த நெருக்கமாக ஒத்துழைக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக கூறினார்.
''பின்னடைவு, துன்பம் மற்றும் ஏமாற்றம் இருக்கலாம்'' என கூறிய அவர், ''வலி இல்லாமல் ஒரு வெற்றி அடைய முடியாது'' எனவும் கூறினார்.
வட கொரிய அதிபரின் மனைவி ரி சொல்-ஜு மற்றும் தென் கொரிய அதிபரின் மனைவி கிம் ஜுங்-சூக்கும் சந்தித்து பேசிக்கொண்டனர். வட கொரியா மற்றும் தென் கொரியா நாட்டின் முதல் பெண்மணிகள் சந்திப்பது இதுவே முதல் முறை என தென் கொரிய ஊடகம் கூறுகிறது.
வட கொரியா மற்றும் தென் கொரிய தலைவர்களின் "தைரியத்தை" சீனா பாராட்டியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் நீண்ட கால ஸ்திரத்தன்மைக்கு இது ஒரு திருப்பு முனையாக இருக்கும் என சீன வெளியுறத்துறை கூறியுள்ளது.
 வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பின்னர், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் உறுதி பூண்டுள்ளனர்.

0 commentaires :

Post a Comment