வஞ்சிக்கப் படும் விரிவுரையாளர் திரு.சு.சிவரத்தினம்
கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிலைய விரிவுரையாளர் .
தனது கலாநிதிப் பட்டத்தை உரிய காலத்தில் முடித்திருந்தும் வேண்டுமென்றே இழுத்தடிக்கப் பட்டு அவரது பதவி தற்காலிகமாக்கப் பட்டு பழி வாங்கப் பட்ட சூழ் நிலையில் இப்போ பொய் குற்றம் சாட்டப் பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளமை மிகவும் கண்டிக்கத் தக்கது ஒரு கல்வியாளனுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்டுள்ள மிகப் பெரிய வன்முறை.
ஒரு பதவிப் பொறுப்பாளரே நீ விரிவிரையாளராக இருப்பதற்கு தகுதியில்லை என வன்மத்தை வெளிப் படுத்தியிருப்பது மிக கண்டிக்கத் தக்கது.
முன்னய காலங்களில் 15வருசம் கலாநிதிப் படிப்பு படித்தும்,முது தத்துவ மாணியயை 15 வருடம் படித்தும் பதவி உயர்வு பெற்றவர்கள் பல்கலைக் கழகத்தில் இருக்க குறிப்பிட்ட காலத்துக்குள் தன் கலாநிதி பட்டத்தை முடித்து பதவி உயர்வுக்கு தகுதியான சிவரத்தினம் வேண்டுமென்றே தாமதப் படுத்தி வஞ்சினம் தீற்கப் பட்ட காட்சிகளாய் உள்ளன.
சிவரத்தினம் ஒரு ஆற்றலுள்ள மிகச் சிறந்த விரிவுரயாளன் .படிப்பிக்காமல் பாடத்தை தவிர மற்ற எல்லா விசயங்களையும் பேசி பரீட்சைக்கு முன் கேள்வித்தாளை படிப்பித்து பம்மாத்து பண்ணும் விரிவுரையாளனல்ல சிவரத்தினம் உண்மையான ஆய்வாளம் அறிவார்ந்தவன்.
பல்கலைக் கழகத்துக்குள் சும்மா தலையயை மட்டும் காட்டி அரச சாரா நிறுவனங்களுக்கு வேலை செய்தவனல்ல சிவரத்தினம்.
வஞ்சிக்கப் பட்ட விரிவுரயாளர் சிவரத்தினத்துக்கு நீதி வேண்டும் மட்டக்களப்பு கல்வி சமூகமே இதனை கருத்திலெடுக்க வேண்டும்.
பல்கலைக் கழகம் மூடு மந்திரமல்ல
நன்றி
முகநூல் *முன்னாள் விரிவுரையாளர் பாலசுகுமார்
0 commentaires :
Post a Comment