4/20/2018

காந்தி பூங்காவில் இன நல்லுறவு வீதி நாடகம்

இன்று (19 .04.18) மட்/காந்திப்பூங்காவில் 'எகெட்' நிறுவனத்தின் ஏற்பாட்டில் "சகவாழ்வு" வீதி நாடகம் பார்க்கக்கூடிய வாய்ப்புக்கிட்டியது.L’image contient peut-être : 1 personne, debout et plein air
தமிழ், இஸ்லாமியர்களின் நல்லுறவை கட்டியமைக்கும் நாடகம். 1985 யிற்கு முன்னர் மட்டக்களப்பில் பிட்டும் தேங்காய்ப்பூவும் போலிருந்த அந்த வாழ்வின் நெருக்கம் தூய்மைவாதத்தின் வருகையும் அசிங்கம்பிடித்த இருதையங்களின் சங்கமங்களும் பிரிவுக்கோடுகளை மெல்ல விதைத்து பிரிவினைகளைத் தூவியதை நாசுக்காக நாடகம் காண்பித்தது. ஒற்றுமையாகக் கடல் தொழில்செய்து ஒண்டுக்கு மண்டடியாக வாழ்கின்ற சமுகம், தண்ணீர் ஓதுவதற்கு பதூர்காக்காவிடம் செல்கின்ற ஒரு தமிழன் ,கோழியை தொலைத்து நிற்கும் ஒரு இஸ்லாமியன் காளிகோவிலில் நேர்த்திவைக்கும் தன்மையையும், மாதாவின் ஊர்வலத்திற்கு ஒன்றுபடும் தமிழர், இஸ்லாமியர்,கிறிஸ்தவர் என. முன்னைய இயல்பு வாழ்வினை கண்முன் நிதர்சனமாக்கின..
திட்டமிட்டு தூய்மைவாதங்கள் ஊடுறுவி. விக்கிரங்களை உடைப்பதும், பள்ளிவாயலை உடைப்பதும் .தேவாலயத்துக்கு கல்லெறிவதும் என எங்கள் சிந்தனைகளைச் சிதைப்பதனால் ஏற்படும் சீரழிவுகளும் அதன் பின்னரான கற்பிதங்களும் பார்வையாளர்களை ஊன்றச்செய்து, சுய பரிசோதனையை வேண்டி நின்றது. இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஒரு அன்பர் சொன்னார் "தாங்கள் சிவானந்தா விடுதியில் இருந்து படிக்கின்ற காலத்தில் திருபள்ளி எழுச்சி பாடும்பொழுது இஸ்லாமிய தோழர்களும் நாங்களும்பாடுகின்றோம் என முண்டியடிப்பார்கள். இன்று நினைத்துக்கூடப்பார்க்கமுடியாத விடயம். எல்லாவற்றிற்கும் அரசியல்த்தான் காரணமென்றார்.
அதில் அதிக உண்மையுண்டு. இனிவரும் காலமாவது இளம் சமுகம் சீழ் பிடித்த இதயங்கள் போல்வாழாது. ஆரோக்கியமான வஞ்சனைகளற்ற. பழுத்த ஓலைகளின் பழிவாங்கும் எண்ணங்களைத்துறந்து , நாங்கள் மட்டும் இந்த உலகத்தில் வாழவேண்டும் என்ற தன்மையைவிட்டு அது இயங்கவேண்டும். அப்போதுதான் நல்ல
இணக்கம் ஏற்படும். இல்லாவிடின் பத்திரத்தில் மாத்திரமே இருக்கும்.




நாடக நெறியாளர் து. கௌரீஸ்வரன் சிறப்பாக வீதி நாடகத்தை ஆற்றுகை செய்திருந்தாலும் சிலவிடயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
மேடைநாடக த்தாக்கத்திலிருந்து நாடகத்தை ஆற்றுதல், திறந்தவெளிக்கு ஏற்றாப்போல் குரல்களை வசப்படுத்தல் அல்லது நவீன சாதனங்களை பயண்படுத்தல். அவசர கதைக்கூட்டலை விரிதாக்கல். இவற்றினூடாக சகவாழ்வு இன்னொருதிசைநோக்கி நகரும். 

*நன்றி முகநூல் * மலர்செல்வன்.

0 commentaires :

Post a Comment