4/02/2018

மட்டக்களப்பு மாவட்டத்திலும் உதய சூரியன் சின்ன உறுப்பினர்கள் பதவி நீக்கப்படும் அபாயம்

தமிழர் விடுதலைக்  கூட்டணி சார்பில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியடைந்த உறுப்பினர்களில் சிலர் பதவி நீக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. அதாவது அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான  தேர்தலில் ஏராளமான சபைகளில் எந்தவொரு கட்சியும்  போதிய பெரும்பான்மையை பெற்றிருக்கவில்லை. இதன்காரணமாக குறித்த சபைகளில் ஆட்சியமைப்பது யார் என்கின்ற குழப்ப நிலை நீடிக்கின்றது.
.Résultat de recherche d'images pour "tulf"


இதன் காரணமாக பல கட்சிகள் ஏனைய கட்சியினை அல்லது   வெற்றி பெற்ற உறுப்பினர்களின்  தனிப்பட்ட ஆதரவினை தத்தமக்கு சார்பாக கூட்டு சேர்ப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலை மேலும் குழப்பநிலைக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக யாழ்-வலிகாமம் தெற்கு,மற்றும்  அம்பாறை மாவட்ட  திருக்கோவில் பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் தெரிவான உறுப்பினர் ஆதரவளித்துள்ளனர்.

அதன்படி வலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில் பிரதேச சபைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டதால் அவர்கள் நீக்கப்படவுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழரசு கட்சிக்கு வாக்களித்தமையால் அவர்கள் நீக்கப்பட்டு, புதியஉறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலும் இவ்வாரம் இடம்பெறவுள்ள தவிசாளர் தெரிவுகளில் சூரியன் சார்பில் தெரிவான உறுப்பினர்களில் யாரேனும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க நேர்ந்தால் அவர்கள் பதவிகளும் பறிபோக காத்திருக்கின்றது.




0 commentaires :

Post a Comment