4/30/2018

குஜராத்தில் புத்த மதத்துக்கு மாறிய 300 தலித்துகள் - காரணம் என்ன?

குஜராத்தில் உனா அருகில் உள்ள மோட்டா சமாதியாலா கிராமத்தில், சுமார் 300 தலித் குடும்பத்தினர் இந்து மதத்தை விடுத்து புத்த மதத்தை தழுவினார்கள்.புத்த மதத்தை தழுவிய உனா தாக்கப்பட்ட தலித்துகள்
இந்த கிராமத்தில் 2016ஆம் ஆண்டு பசு காவலர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொண்டவர்கள், வாஷ்ராம் சர்வாயியா மற்றும் அவரது சகோதரர்களை பசுக்களைக் கொன்றவர்கள் என்று குற்றஞ்சாட்டி அரை நிர்வாணப்படுத்தி சவுக்கால் அடித்து இழுத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, தலித்துகள் மத்தியில் மாபெரும் எழுச்சிக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக ஏராளமான தலித்துகள் புத்தமதத்தை தழுவினார்கள்.
உனா கிராமத்தைச் சேர்ந்தவர்களும், அங்கு தாக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் புத்தமதத்தை தழுவப் போவதாக அறிவித்தார்கள். தாங்கள் தொடர்ந்து ஒதுக்கப்படுவதாகவும், குஜராத் அரசு தங்களுக்கு எவ்வித ஆதரவும் வழங்கத் தவறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.
மதம் மாறும் நிகழ்ச்சிக்கு சர்வய்யா குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். குஜராத் முழுவதிலும் இருந்து வந்திருந்த தலித்துகளை அவர்கள் வரவேற்று விருந்தளித்தனர்

0 commentaires :

Post a Comment