4/30/2018

சபாலிங்கம்-24வது நினைவு தினம்

(1994 ம் ஆண்டு மே தினத்தில் புலிகளால் கொல்லப்பட்ட சபாலிங்கம் கொலை பற்றி தராகி சிவராம் The Island இல் எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம் இது. 20 மே 1994 இல் கனடா தாயகம் இதழில் பிரசுரமானது.)L’image contient peut-être : 1 personne, barbe et texte
ஈழ இயக்கத்தின் இறுதி வெற்றி வீரனாக தன்னைக் கருதிக்கொள்ளும் பிரபாகரனுக்கு வரலாறு அவருக்கு மட்டுமே சொந்தமானது. அது எத்தனை உயிர்களைப் பலி கொண்டாலும் பரவாயில்லை. இதுதான் அவரது இருப்பின் மையமே.
1991 இல் நான் ஐலண்ட ஞாயிற்றுப்பதிப்புக்காக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை (The Eluding Peace) சபாலிங்கம் அழகாக வெளியிட்டிருந்தார். அதிலிருந்து ஈழ இயக்கங்களின் ஆரம்பம் வளர்ச்சி பற்றி நன்கு ஆய்வு செய்யப்பட்டதும் ஆவணப்படுத்தப்பட்டதுமான நூல் ஒன்றை எழுதும்படி பல தடவைகள் என்னை வற்புறுத்தியிருந்தார். தமிழ் அரசியல் ஈழப் போர் போன்றவற்றில் ஏற்பட்ட வாராந்த தடங்கலினல் அந்த வேண்டுகோளுக்கு உடன்பட முடியவில்லை. பின்னர் அவர் தானாகவே அதைச் செய்ய முன்வந்ததாக கேள்விப்பட்டேன். ஈழ இயக்கத்தின் ஆரம்ப வரலாற்றின் பயங்கரமான பகுதிகள் பற்றிய அவரது விசாரணைகளே அவரது உயிருக்கு உலையாய் அமைந்ததை அறியக் கூடியதாக உள்ளது.தமிழ் அரசியல் தங்கள் ஏகபோக சொத்து என்று கருதும் புலிகளுக்கு தமிழ் இயக்க வரலாறும் அவர்களுக்கே உரியது.

பிரபாகரன் காலத்தை சேர்ந்த ஒருவர் முதன் முதலாக பேனாவைத் தூக்கினார் என்றால் அது சபாலிங்கம் தான். இப்போது அவர் இறந்து விட்டார். லண்டனில் செல்வாக்கு மிக்க குழு ஒன்று இந்தக் கொலைக்கு புலிகளே காரணம் என்று ஐரோப்பிய அரசுகளிடம் புலிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்திருப்பதாக அறிகிறேன். இதற்கு காரணம் ஐரோப்பா, இந்தியா, இலங்கை,வட அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், சமூக சேவையாளர், பத்திரிகையாளர் போன்றோருடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களில் சபாலிங்கம் ஒருவர். அவர்களின் பார்வையில் சபாலிங்கம் ஒரு நேர்மையான மனிதர். தனது செயற்பாடுகளுக்காக தன்னை கடனில் அமிழ்த்திக் கொண்டவர். பிரான்சில் உள்ள அவரது சகபாடிகள் அவரது மரணத்திற்கு காரணமாக பின்வருவதைக் கூறுகின்றனர். ”தாயகத்திற்கு” எழுதிய கட்டுரை ஒன்றில் ஈழ இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் பிரபாகரன் சம்பந்தப்பட்ட இரண்டு விடயங்களை கேள்விக்குள்ளாக்குகிறார். ஒன்று குட்டிமணி,தங்கத்துரை கைது. மற்றது நீர்வேலி வங்கிக் கொள்ளை. இந்த விடயங்கள் பற்றி தற்போது கூறப்படுகின்ற விடயங்களை கேள்விக்குள்ளாக்கி தான் விரைவில் உண்மையை வெளிக் கொணர்வதாகக் கூறியிருக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் மேற்படி இரு சம்பவங்களிலும் பிரபாகரன் துரோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார். குட்டிமணி தமிழ் நாடு செல்ல படகுக்கு காத்து நின்ற போது கைது செய்யப்பட்டார். அவர் தப்பிச் செல்வது பற்றிய விபரங்களை யாரோ தகவல் கொடுத்ததாக பரவலாக நம்பப் பட்டது. குட்டிமணி மீது கோபம் கொண்ட படகுகாரரால் தகவல் கொடுத்ததாக ஒரு தகவல். மற்றது குட்டிமணியைத் தொலைத்துக் கட்ட பிரபாகரனே செய்தி கொடுத்ததாக தகவல். டெலோ இயக்கம் இதையே வலியுறுத்தி வந்தது. ஆனால் 86இல் படகுக்காரன் இரக்கமின்றி புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். யாரும் இது பற்றி சரியாக கூறமுடியாது. அத்துடன் குட்டிமணியும் வெலிக்கடையில் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தார். நீர்வேலி வங்கிக் கொள்ளை பற்றி சபாலிங்கம் எழுப்பிய கேள்வியும் அதன் விளக்கமும் ஆச்சரியமானவை.

79 இல் புலிகள் இயக்கம் பிரிந்த போது பிரபாகரன் எந்த வளங்களும் இன்றி நண்பர்களுடன் குட்டிமணி,தங்கதுரை தலைமையிலான டெலோவில் சேர்ந்து அவர்களுக்காக கொஞ்ச காலம் வேலை செய்தார். அந்த நேரத்தில் அவர் நீர்வேலி வங்கிக் கொள்ளையில் பங்கு கொண்டார். டெலா இயக்கம் தொடங்கிய ஒபரோய் தேவனும் இதில் பங்கு கொண்டார். தாயகத்தில் வெளிவந்த கட்டுரையில் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட அனைவரும் இறந்து விட்டார்கள் என்பதை சபாலிங்கம் சுட்டிகாட்டினார். ஓன்றில் அரச படைகளாலோ,அல்லது புலிகளாலோ அவர்கள் கொல்லப்பட்டனர். ஏனவே இதில் சம்பந்தபட்டவர்கள் அனைவரும் இந்த உலகில் இருந்து அழிக்கப்படுவதில் பிரபாகரனுக்கு பயன் இருந்தது என்பதை சபாலிங்கம் கருத்துக் கூற முயன்றிருக்கிறார். நீர்வேலி வங்கி கொள்ளை பிரபாகரனின் வாழ்வில் ஒரு கறையாகும். புலிகளின் இயக்க விதிப்படி வேறியக்கங்களில் சேர்பவர்களுக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டது. தனது சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் பலரை அந்தக் காரணத்துக்காகவே பிரபாகரன் கொன்றிருக்கிறார். இங்கே சபாலிங்கம் அவ்வாறான விடயங்களுக்கு சான்று சேர்த்து புத்தகம் எழுத முயல்வதைக் காண்கிறோம்.

அதற்கு முன்னர் தாயகம் பற்றி…… இரண்டு யுத்தகாலங்களிலும் வெளிவந்த கடுமையான புலிகள் இயக்க எதிர்ப்பு வெளியீடு இதுவாகும். தாயகம் புலிகள் மீது விமர்சனங்கள் ஏற்படுத்திய தரத்துடன் ஒப்பிடுகையில் இராணுவத்தின் ”உளவியல் நடவடிக்கை ” சூரர்கள் பாலர் பாடசாலைப் பிள்ளைகள் போன்றே தோன்றுவர். இரண்டு வருடங்கள் பத்திரிகையாக வெளிவந்த பின்னர் 92 இல் புலிகள் தாயகம் விற்கும் கடைகளை மிரட்டி போட்டிப் பத்திரிகையான செந்தாமரைக்கு சார்பாக அதன் விற்பனையை குலைத்த போது அது சஞ்சிகையாக மாற நிர்ப்பந்திக்கப்பட்டது. தற்போது ரொறன்ரோவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான ஜோர்ஜ் குருஷ்சேவினால் வெளியிடப்படுகிறது. புலிகளை கடுமையாக விமசிக்கும் குருஷ்சேவ் போன்றவர்கள் தொடர்ந்தும் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கும்போது ஏன் சபாலிங்கத்தை கொல்வதற்கு யாரும் இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஆர்வமுள்ள புலிகள் பற்றிய விமர்சகர்கள் போலன்றி ஈழ இயக்கத்தின் ஆரம்பமுன்னோடிகளில் தற்போது எஞ்சியிருப்பவர்களில் ஒருவரான சபாலிங்கத்தால் இந்த விடயங்கள் கூறப்படுவது அவரைக் கொன்றவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கவேண்டும். இந்த ஈழ இயக்கத்திலிருந்துதான் பிரபாகரன் என்ற சிறுவன் ஒரு கெரில்லாவாக உருவாக்கப்பட்டான். 71 இல் ஜே.வி.பி ஒடுக்கப்பட்ட பின்னர் தமிழ் மாணவர் பேரவையை ஆரம்பித்த சத்தியசீலனுக்கு சபாலிங்கம் சகபாடியாவர். இந்த அமைப்பு சுதந்திர கட்சி காலத்தில் தரப்படுத்தலை எதிர்த்து தொடங்கப்பட்டதாகும். இந்த அமைப்பு ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தியது. 1972 இல் பிரபாகரன் சத்தியசீலனின் இரகசிய அமைப்பில் சேர்ந்து கொண்டார். கட்டுபெத்தையில் மாணவராக இருந்த சபாலிங்கம், சத்தியசீலன், பூபதி மற்றும் பலர் மார்ச் 73 இல் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இயக்கம் இந்த நிலையில் சிதைக்கப்பட்ட போதிலும் பிரபாகரன் தப்பித்துக் கொண்டார். அநுராதபுரம் புதிய சிறையில் சபாலிங்கம் சிறைவைக்கப்பட்டிருந்த போது. பிரபாகரனுடன் புதிய தமிழ் புலிகள் அமைப்பை ஆரம்பித்த செட்டி தனபாலசிங்கம், கண்ணாடி பத்தன், ரத்தினகுமார் ஆகியோர் சிறையுடைத்து தப்பிச் சென்றனர். இதன் பின்னர் சபாலிங்கமும் மற்றவர்களும் போகம்பரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஓருநாள் இரண்டாம் மாடியிலிருந்து தவறிவிழுந்தார். இந்த விபத்தில் இவரது இடக்கை நிரந்தரமாக பாதிக்கப்பட்டது. 75 மாசி மாதம் விடுவிக்கப்பட்ட சபாலிங்கம் பரந்தன் உப்பளத்தில் வேலை செய்தார். வரதராஐப்பெருமாள் முக்கியமானவராக இருந்த ஈழவிடுதலை இயக்கத்தில் இருந்த இன்னோரு உறுப்பினர் புஷ்பராஜா. இவரும் பெருமாள் போல ஈ.பி.ஆர்.எல்.எப்ஃல் சேர்ந்து கொண்டார். சபாலிங்கத்தின் சமீபத்திய வேலையில் புஷ்பராஜா நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததால் அவரையும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐச் சேர்ந்தவர் என்று பலர் அவசரப்பட்டு கூறினர்கள். ஓருநாள் இரவு அவர் உப்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது கதவையாரோ தட்டினர். அது சத்தியசீலனின் குழுவில் இருந்த சிறுவன். அவர் அங்கே அடைக்கலம் தேடினார். தனது வதிவிடத்தில் பல வாரங்கள் பாதுகாப்பான சூழ்நிலை வரும் வரை சபாலிங்கம் மறைத்து வைத்திருந்தார். புலிகள் தான் இந்தக் கொலையைச் செய்தார்கள் என்றால் எழுபதுகளில் தொடங்கிய ஈழ இயக்கத்துடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டிருந்து தற்போது மேற்கு நாடுகளில் வசிப்பவர்களுக்கு அது தரும் செய்தி இதுதான். வரலாற்று வெற்றிவீரன் பிரபாகரன் சொல்வதன்படி தான் எழுதப்படும். சத்தியசீலன், இணுவிலில் வைத்து பிரபாகரன் கைது செய்யப்படுவதிலிருந்து காப்பற்றிய சோட் பாலா இருவரும் ஜேர்மனியில் வாழ்கிறார்கள். ஐயர் என்ற யாழ்ப்பாண பிராமணர் புலிகளின் ஆரம்பகால பொருளாளராக இருந்து தற்போது ஐரோப்பாவில் வாழ்கிறார். 85 ல் பிரபாகரனுடன் மோதல் ஏற்படும்வரை பிரபாகரனுக்கு சமமாக இருந்த ராகவன் தற்போது லண்டனில் வசிக்கிறார். ஆனால் எல்லோரும் இன்றுவரை மௌனமாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் சந்திக்க சபாலிங்கம் திட்டமிட்டிருந்தார் அதன் மூலம் இன்னோரு வரலாற்றைச் சொல்ல அவர் முயன்றார்.

ஈழ இயக்கத்தின் இறுதி வெற்றி வீரனாக தன்னைக் கருதிக்கொள்ளும் பிரபாகரனுக்கு வரலாறு அவருக்கு மட்டுமே சொந்தமானது. அது எத்தனை உயிர்களைப் பலி கொண்டாலும் பரவாயில்லை. இதுதான் அவரது இருப்பின் மையமே. 

- துரோகி (மன்னிக்கவும்) தராகி சிவராம்.


»»  (மேலும்)

குஜராத்தில் புத்த மதத்துக்கு மாறிய 300 தலித்துகள் - காரணம் என்ன?

குஜராத்தில் உனா அருகில் உள்ள மோட்டா சமாதியாலா கிராமத்தில், சுமார் 300 தலித் குடும்பத்தினர் இந்து மதத்தை விடுத்து புத்த மதத்தை தழுவினார்கள்.புத்த மதத்தை தழுவிய உனா தாக்கப்பட்ட தலித்துகள்
இந்த கிராமத்தில் 2016ஆம் ஆண்டு பசு காவலர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொண்டவர்கள், வாஷ்ராம் சர்வாயியா மற்றும் அவரது சகோதரர்களை பசுக்களைக் கொன்றவர்கள் என்று குற்றஞ்சாட்டி அரை நிர்வாணப்படுத்தி சவுக்கால் அடித்து இழுத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, தலித்துகள் மத்தியில் மாபெரும் எழுச்சிக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக ஏராளமான தலித்துகள் புத்தமதத்தை தழுவினார்கள்.
உனா கிராமத்தைச் சேர்ந்தவர்களும், அங்கு தாக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் புத்தமதத்தை தழுவப் போவதாக அறிவித்தார்கள். தாங்கள் தொடர்ந்து ஒதுக்கப்படுவதாகவும், குஜராத் அரசு தங்களுக்கு எவ்வித ஆதரவும் வழங்கத் தவறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.
மதம் மாறும் நிகழ்ச்சிக்கு சர்வய்யா குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். குஜராத் முழுவதிலும் இருந்து வந்திருந்த தலித்துகளை அவர்கள் வரவேற்று விருந்தளித்தனர்
»»  (மேலும்)

மட்டக்களப்பு_மாவட்ட_வேலையற்ற_பட்டதாரிகளுக்கான_விஷேட_அறிவித்தல்.

நாளை(30.04.2018) காலை 9.00மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்குமான விஷேடமானதும் அவசரமானதுமான ஒன்றுகூடல் ஒன்று மட்டுநகர் #காந்தி_பூங்காவில் இடம்பெறவுள்ளது.L’image contient peut-être : texte
இவ் ஒன்றுகூடலில் பட்டதாரி பயிலுனர் நியமனம், ஆசிரியர் நியமனம் சம்பந்தமான பல விடயங்கள் பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.
எனவே மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் தவறாது சமூகம் தரவும்.
»»  (மேலும்)

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்கங்கள் -1986 ஏப்ரல் 29

ஏப்ரல் 29, 1986 என்றும் போல அன்றும் யாழ்ப்பாணத்தில் அந்த காலைப் பொழுது மலர்ந்தது. காலைச் செவ்வானம் தமிழீழம் கேட்டு போராடச் சென்ற இளைஞர்களின் குருதியில் தோய்வதற்காய் உதித்தாக எண்ணி இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அடித்தளத்தையிட்ட அதே மண்ணில் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படப் போகின்றது என்பதை அறியாமலேயே தமிழ் மக்கள் விழித்தெழுந்து தத்தமது கடமைகளுக்குத் தயாராகினர்.L’image contient peut-être : 2 personnes, texte
ஆம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்துடனேயே சகோதரப் படுகொலைகளும் ஆரம்பித்து விட்டது.
ஆனால் 1986 ஏப்ரல் 29ல் இடம்பெற்றதே மிக மோசமான ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டுப் படுகொலை.
தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000க்கும் அதிகம் என மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு தெரிவிக்கின்றது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது எதிரி எமது இனத்தின் மீது மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பிற்கு எவ்விதத்திலும் குறையாமல் மக்களால் வளர்த்துவிட்ட விடுதலை அமைப்புகலே எம்மை அழித்துள்ளன.
தமிழீழ விடுதலை நியாயமானதா? சாத்தியமா? என்பதற்கு அப்பால் 1986 ஏப்ரல் 29லேயே எமது தமிழீழ விடுதலைக் கனவு கலைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை.
”உங்கள் கைவசம் உள்ள ஆயுதங்களை எம்மிடம் ஒப்படைத்து சரணடையாவிட்டால் உங்கள் வீடு புகுந்து உங்களையும் உங்கள் குடும்பங்களையும் சுட்டுத்தள்ளுவோம்.”
என 24 ஆண்டுகளுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் தாயகம் எங்கும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கைகளை வழங்கினர்.
ரெலோவின் முகாம்கள் மோட்டார் செல் தாக்குதல்களுக்கு இலக்கானது.
ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள்,
ஆயுதம் தாங்காதவர்கள்,
நித்திரையில் இருந்தவர்கள்,
நோய்வாய்ப்பட்டு இருந்தவர்கள்,
சரணடைந்தவர்கள்
என்று எவ்வித பேதமுமற்று அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்னும் சிலர் சித்திரவதைக்கு உள்ளாகி மக்கள் முன்னிலையில் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
தங்களை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்ற பாடத்தை புகட்டுவதற்காக இவை திட்டமிட்ட முறையில் நடாத்தப்பட்டது.
தமிழ் மக்கள் பயப்பீதிக்குள் தள்ளப்பட்டு வாய்மூடி மௌனிக்க வைக்கப்பட்டனர். அன்று ஒடுக்கப்பட்ட அவர்களது குரல்கள் இன்றும் ஒடுங்கியே உள்ளது. ஒடுக்குபவர்கள் மட்டுமே மாறியுள்ளனர்.
வரலாற்றுத் தவறுகளைக் கற்றுக் கொள்ள மறுப்பவர்களை வரலாறு மன்னிப்பதில்லை.
 
»»  (மேலும்)

4/28/2018

யார் இந்த சிவராம் தராக்கி?

நட்சத்திரன் செவ்விந்தியன் 

புலிகளால் மாமனிதர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்ட சிவராமின் இரத்தக்கறை படிந்த கொடூரக் கொலைகளின் குற்ற வரலாறு அம்பலத்திற்கு வந்திருக்கிறது. தர்மரத்தினம் சிவராம் 1984 ல் PLOTE ல் போய்ச் சேர்ந்த போது புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளும் சித்திரவதைகளும் உச்ச நிலையிலிருந்தன. PLOTE இல் இருந்த நேர்மையான அசலான போராளிகளில் PLOTE இனாலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த மற்ற நேர்மையான போராளிகளான தீப்பொறி குழுவினர் முதலியோர் இக்காலப் பகுதியில் புளட்டிலிருந்து தப்பி வெளியேறிக் கொண்டிருந்தனர். தீப்பொறி குழுவின் மூலவர்களில் ஒருவரான உன்னதப் போராளி நொபேட் புளட்டின் கொடூரச் சீரளிவுகளை வைத்து எழுதிய ‘புதியதோர் உலகம்’ என்ற நாவல் 1985 இன் தான் வெளிவருகிறது.
சிவராம் முதலில் விடுதலைப் புலிகளில் தான் சேர விண்ணப்பித்தார். எனினும் மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் தனித்தனியே விடுதலைப் புலிகளில் சேருவதற்கு நம்பகமற்றவர் என்று சிவராம் திருப்பி அனுப்பப்பட்டார். இதன் பின்னரே சிவராம் புளட்டில் அசோக் எனப்படுகிற யோகன் கண்ணமுத்துவின் “அணைவோடு” இணைக்கப்பட்டார். இக்காலத்தில் தான் உமா மகேஸ்வரன் எல்லோரையும் அடிப்படையின்றி சந்தேகிக்கின்ற paranoid மனோவியாதிக்குட்பட்டிருந்தார். தன்னுடைய ஆங்கிலப் புலமையையும் மகேஸ்வரனின் பலவீனங்களையும் சாதுரியமாகப் பயன்படுத்தி சிவராம் தலமைக்கு மிகநெருக்கமாக குறுகிய காலத்திலேயே வந்துவிட்டார். இதன்போது புளட்டின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கும் உட்கட்சி சித்திரவதைகளூக்கும் படுகொலைகளுக்கும் விசுவாசமாக உடந்தை போனார்.
(1) 1984, 1985 காலப் பகுதியில் ஒரு தடவை யாழ்ப்பாணம் குருநகரில் சிவராமும் தீபனேசனும் வீதியில் தற்செயலாக தீப்பொறி குழுவினரைச் சேர்ந்தவர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. உடனடியாகவே சிவராம் தனது பையிலிருந்து SMGயை எடுத்து load பண்ணி அவர்களை நோக்கி சுடத்தயாரானார். அதிஸ்ரவசமாக பொது மக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டதால் கொலை எதுவும் நடக்காமல் இரு தரப்பினரையும் பிரித்து அனுப்பி வைத்தனர்.
(2) பேராதனைப் பல்கலைக்கழக பல்மருத்துவத்துறை மாணவனான செல்வம் என்பவர் தனது பட்டப்படிப்பையே தியாகம் செய்து போராட வந்திருந்தார். இந்த செல்வமும் அகிலன் என்கிற இன்னொருவரும் சந்ததியாரோடு சேர்ந்து PLOTEஇன் உட்கட்சிப் படுகொலைகள், ஜனநாயகமின்மை என்பவற்றிற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். மட்டக்களப்பிலிருந்து கைதேர்ந்த கொலையாளியான வெங்கட் ஐயும் அழைத்துக்கொண்டு சிவராம் தலமையில் ஒரு குழு மூதூருக்கு அகிலன் செல்வத்தைத் தேடிப் போனது. மூதூரில் ஒரு வீட்டிற்குள் சென்ற சிவராமும் வெங்கட்டும் அங்கிருந்த அகிலன் மற்றும் செல்வனையும் PLOTEஇன் மகளிர் பிரிவுத் தளபதியான கரோலினையும் கண்டனர். சிவராமும் வெங்கட்டும் கரோலினை தவிர்த்து அகிலன் செல்வனைக் கடத்திச் சென்று மூதூரில் ஒரு வயல் வெளியில் கொன்று அவ்வயல் வெளியிலேயே இருவரையும் புதைத்துத் திரும்பினர்.
மேற்கூறிய இரண்டு தகவல்களையும் நம்பகரமான மனித உரிமை அமைப்பான மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. PLOTE உறுப்பினர்களுக்கு சிவராமின் அகிலன் செல்வன் கொலைகள் நீண்ட காலமாகத் தெரிந்த திறந்த இரகசியமே. இதனைவிட தலமைக்கு எதிராகக் அகிலன் செல்வம் கிளர்ச்சி செய்தமையைப் பயன்படுத்தி தனிப்பட்ட பெண் விவகாரம் முதலியன சம்பந்தப்பட்ட கோப தாபங்களுக்காக இவ்விருவரும் சிவராமினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சிவராமைப்பற்றி நல்ல அபிப்பிராயம் அவருடன் பழகிய நல்ல மனிதர்களிடம் கிடையாது. அவர்கள் சொல்லுகிற குற்றச்சாட்டுகளில் ஒன்று சிவராம் பிறரை “அள்ளி வைப்பதில்” வல்லவர் என்பது.
1. மாலைதீவுக்கு படையெடுத்துச்சென்ற தன்னுடைய சக தோழர்களான புளட் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் “அள்ளி வைத்தவர்” சிவராமே என்பதை சிவராமுடன் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த இப்போது அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக துணைப் பேராசிரியராக இருக்கும் கார்ட்றி இஸ்மாயில் தான் லைன்ஸ் (www.lines-magazine.org) சஞ்சிகையில் எழுதிய ‘Mourning Sivaram’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதே “அள்ளி வைப்பு” தகவலை பாரிஸ் ஈழமுரசுவில் 90 களின் ஆரம்பத்தில் வெளிவந்த தொடரான ‘காந்தி தேசத்தின் மறுபக்கம்’ என்ற புளட் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரையிலும் காணலாம்.
2. முன்னைநாள் வீரகேசரி பத்திரிகையாளரான மட்டக்களப்பைச் சேர்ந்த நித்தி என்ற நித்தியானந்தனை (பின்னர் இவர் புலிகளில் இணைந்து ஒரு சமரின் போது இறந்து விட்டார்) புலி என்று புளட் மோகனிடம் காட்டிக் கொடுத்தது சிவராமே என்ற தகவலை நித்தியானந்தனே தனது நண்பரான இப்போது ஆஸ்திரேலியாவில் புலிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கும் நாகராஜா என்ற பத்திரிகையாளரிடம் தெரிவித்தை நாகராஜா சிவராமைப் பற்றி தேனீ இணையத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் காரணமாக புளட் மோகனால் சுடப்பட்ட நித்தியானந்தன் காயமடைந்தார் எனவும் பின்னர் நித்தி புலிகளில் இணைந்து கேணல் கருணாவின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்ட காலத்தில் சிவராமால் கருணாவை நெருங்கவே முடியவில்லை என்பதையும் நித்தியின் மரணத்தின் பின்னரே சிவராமும் கருணாவும் நெருக்கமாயினர் என்றும் நித்தி சிவராமை இந்திய உளவுப் பிரிவான ரோ வின் ஒற்றன் என்று தன்னிடம் கூறியதையும் நாகராஜா அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நித்தி காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்சிவராம், டி.பி.எஸ் ஜெயராஜ், நித்தி ஆகிய மூவரும் பல தடவைகள் கொழும்பில் ஒன்றாகச் சந்தித்து மது அருந்திக் குலவியதை ஜெயராஜ் தன்னுடைய Sunday Leader கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
(புளட் மோகன் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர் மோகன் பற்றி ஒரு நீண்ட செய்திக் கட்டுரையை சிவராம் தமிழ் நெற் இல் எழுதினார். அதில் நித்தியானந்தன் என்ற பத்திரிகையாளரை புளட் மோகன் கொல்ல முயற்சித்ததாகவும் எழுதினார். கொலையை ஏவி விட்டது யார் என்ற உண்மையைச் சொல்ல மோகனும் நித்தியானந்தனும் உயிரோடு இல்லை. சிவராமும் தமிழ்நெற் உம் எழுதுவதுதானே வரலாறும் நாடகமும்.)
3. சிவராமைப் பற்றி டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய நீண்ட கட்டுரையில் ஒரு கட்டத்தில் சிவராம் negative reputationஐப் பெற்றதாகவும் இது தொடர்பாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிவராமோடு பழகுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாகவும் அதற்கமைய தானும் அக்காலத்தில் சிவராமோடு நெருங்கிப் பழகவில்லை என்பதையும் ஜெயராஜ் எழுதுகிறார்.
விடுதலைப் புலிகளிலிருந்து கருணா தான் பிரியப்போவதாக அறிவித்த ஆரம்பத்தில் சிவராம் கூட கரிகாலன் மற்றும் ரமேஷ் ஆகியோரைப் போல கருணாவின் பக்கமே இருந்ததாக இப்போது பரவலாக நம்பப்படுகிறது. சிவராம் புளட்டிலிருந்த ஆரம்ப காலங்களில் இருந்தே கிழக்கு மாகாணத்தின் நலன்களிலும் முக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவாராக அறியப்பட்டவர். வன்னிப் புலிகளூம் இதனடிப்படையில் சிவராமே கருணாவைத் தூண்டி விட்டிருக்கலாம் என்று சிவராமை சந்தேகித்தனர். பிளவு ஏற்பட்டபோது கருணாவின் சார்பாக சிவராமே தங்களை முதன் முதலாகத் தொடர்பு கொண்டார் என்பதை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சியின் வட்டாரமொன்று தெரிவித்ததையும் கரிகாலனும் ரமேஷம் வன்னித் தலைமைப் பக்கம் கட்சி தாவியபோதே சிவராம் “இனிக் கருணா நிலைக்க முடியாது” என்ற முடிவுக்கு சிவராம் வந்ததையும் UTHR (J) அறிக்கை குறிப்பிடுகிறது.
வன்னிப் புலிகள் மிகச் சரியாகவே தன்மீது சந்தேகம் வைத்திருப்பது சிவராமுக்கு மிகத்தெளிவாகவே தெரிந்திருக்கும். இதற்கிடையில் கருணாவின் படைகள் கலைந்து போன பின்னர் சிவராமின் மைத்துனரான கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வன்னிப் புலிகளால் கருணா விவகாரம் தொடர்பாக “கைது செய்யப்பட்டு” விசாரிக்கப்பட்டார். எப்படி தனது பிழைப்புக்காக 1997 ல் தமிழ் நெற் தொடங்கியபோது தன்னுடைய புலி விமர்சனத்தைக் கைவிட்டு புலிச்சார்பு நிலை எடுக்கத் தலைப்பட்டாரோ அப்படி ஒரு நிலமை இப்போதும் சிவராமுக்கு. இம்முறை வன்னிச் சார்பு எடுக்க வேண்டிய நிலமை.
தமிழ் நெற்றுக்கு நிதி செலவளிப்பவர்களில் வன்னிப் புலிகளின் ஆதிக்கமே இருக்கும். புலிகளின் வெளிநாட்டு அமைப்புக்களிலும் கிழக்கு மாகாணத்தவரின் செல்வாக்கு இல்லை. வடக்கு மாகாணத்தவரினதும் வன்னிப் புலிகளினதும் அதிக்கமே. தமிழ் நெற்றின் ஆசிரியாராக தொடர்ந்தும் இருக்க வேண்டும் புலிகளின் பணத்தில் உலகச் சுற்றுலாப் பயணங்களும் செய்ய வேண்டும் என்றால் (பிரித்தானிய சாம்ராச்சியம் கோலோச்சிய காலத்தில் ஒருவர் உலகம் சுற்ற வேண்டுமென்றால் அவர் பிரித்தானியக் கடற்படையில் சேர வேண்டும் என்பதைப்போல) வன்னித் தலைமைப் பக்கம் சாய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. கருணாவை மிகக் கடுமையாகக் கிண்டலடித்து கருணாவுக்கான ஒரு பகிரங்கக் கடிதத்தை வீரகேசரியில் எழுதினார். சிவராமின் பெருமளவிலான கட்டுரைகளைப் போலவே அதுவும் ஒரு கட்டணம் செலுத்தாத விளம்பரமே.
சிவராம் தனது தனிப்பட்ட பாதுகாப்பில் கடந்த காலங்களில் மிகக் கவனமாகவே இருந்துள்ளார். 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர் மற்றைய இயக்கங்களையும் அழிக்கத் தொடங்கினர். அடுத்ததாக புளட் மீது புலிகளால் யாழ் குடாநாட்டில் தாக்குதல் தொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடைசி நேரத்தில் புளட்டின் உறுப்பினர்களாக யாழ் நகரில் தங்கி இருந்தவர்கள் சிவராமும் மெண்டிஸ் என்கிறவருமே. இருவருமே நிலமையின் உக்கிரத்தைத் தணிக்கும் பொருட்டு ராஜதந்திரமான ஒரு நடவடிக்கையைச் செய்தனர். புளட் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ஒரு பத்திரிகை அறிக்கையை தயார் செய்து அதனை யாழ்ப்பாணத்தின் நான்கு பத்திரிகைகளிலும் வெளிவருமாறு செய்தனர். அறிக்கையைப் பார்த்த விடுதலைப் புலிகளின் திலீபன் ஏன் இவ்விதமான நடவடிக்கையை அவசரப்பட்டுச் செய்ததாக இரண்டு புளட் உறுப்பினர்களிடமும் நேரடியாகவே வந்து கேட்டார். இதற்குப் பதிலாக திலீபனிடம் சிவராம் நேரடியாகவே சொன்னார்
“உங்களை நம்பேலாது மச்சான்”
இதனோடு மட்டும் சிவராம் நின்றுவிடாது விரைவிலேயே ஒரு படகில் தமிழ் நாட்டுக்குத் தப்பிச்சென்று விட்டார். மெண்டிஸ் கிட்டுவோடு நட்பு பாராட்டுகிறவர். கிட்டு மெண்டிஸின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று கூறியதை நம்பி யாழ்ப்பாணத்திலேயே மெண்டிஸ் தங்கியிருந்தார். எனினும் சிவராம் வெளியேறிய சில தினங்களிலேயே மெண்டிஸ் புலிகளால் “கைது செய்யப்பட்டு” சில நாட்களின் பின் கொல்லப்பட்டார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து புலிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தவென்று வாசுதேவா தலமையிலான ஒரு குழு கிழக்கு மாகாணத்தில் புலிகளைச் சென்று சந்திக்கவிருந்தது. புலிகளை இது தொடர்பாக வாசுதேவா நம்புவதை கடுமையாக எச்சரித்த சிவராம் தானும் அக்குழுவில் செல்வதைத் தவிர்த்தார். முடிவில் பேசவென்று அழைத்து வாசுதேவா முதலியோரை புலிகள் கொன்றது எலோருக்கும் தெரிந்ததே.
இவ்வகையாக தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிகச்சரியான மதிப்பீடுகளைச் செய்த சிவராம் தனது இறுதிக் காலத்தில் தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிக அசட்டையாக இருந்தது அதிசயமே. அதுவும் புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளின் இரத்தக்கறைகளை காவிக்கொண்டும் தனது சக புளட் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் செய்து கொண்டும் கருணாவோடு கொழுவிக்கொண்டும் வன்னிப் புலிகளின் உத்தியோகப் பற்று அற்ற பிரச்சாரச் செயலாளராக கொழும்பில் இயங்கிக்கொண்டும் இன்னமும் கொழும்பில் வைத்து ஒரு “பத்திரிகையாளரான” தான் கொல்லப்படமாட்டேன் என்று சிறீலங்காவின் ஜனநாயகம் நீதி சட்டம் ஒழுங்கு என்பவற்றில் நம்பிக்கை வைத்து இருந்ததானது ஒரு முரண் நகையே.
சிவராமைப் பற்றி தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் அவர் ஒரு துப்பாக்கி தாங்கிய போர் வீரர் என்ற மாதிரியான பிரமைகளை கட்டமைத்துள்ளன. உண்மையில் சிவராம் ஒரு சமரில் (battle) கூட பங்குபற்றியதில்லை. அவரது துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் யாரையாவது கொன்றது என்றால் அது அவரது சக புளட் இயக்கத் தோழர்களான அகிலனும் செல்வனுமே.
மாமனிதர் விருது வழங்கப்பட்டதை அடுத்து தமிழ் பத்திரிகைகளில் பலர் சிவராமுக்கு அதிபுனையப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளை போட்டிபோட்டுக்கொண்டு எழுதினர். அவர் ஒரு உன்னதமான பத்திரிகையாளராகவும் புத்திஜீவியாகவும் கட்டமைக்கப்பட்டார். இப்படி எழுதியவர்கள் விடுதலைப் புலிகளையும் புலிப்பாசிசத்தையும் அண்டிப் பிழைப்பு நடத்தும் ஊடக “யாவாரிகள்”. இவர்களில் பலர் சிவராமின் உண்மை வரலாற்றை அறிந்தவர்கள் என்பது போக கடந்த காலங்களில் சிவராமை கடுமையாக விமர்சித்தவர்கள். தெரிதல், காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களிலும் அஞ்சலிகள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆன்மீக மற்றும் சோதிட மாத இதழ்கள், மங்கையர் மஞ்சரி, அம்புலிமாமா என்பவற்றிலும் சிவராமுக்கு அஞ்சலிகள் வரலாம் என்று எதிர்பார்த்தேன்.
ராஜ்பால் அபேயநாயக்கா சிவராமை யேசு கிறிஸ்து அளவுக்கு ஆக்காத குறைதான். Sunday Times இல் வெளிவந்த சிவராமின் அஞ்சலிக் கூட்ட அழைப்பில் சிவராமின் ‘விசிறிகள்’ (fans) எலோரும் வரலாம் என்று வெட்கமின்றி எழுதப்பட்டது. அவர் ஒரு சினிமா நட்சத்திரமாக உருவாக்கப்பட்டார். சிவராமின் அடிமுதல் நுனி வரை அறிந்த நடுநிலமையான பத்திரிகையாளரான டி.பி.எஸ் ஜெயராஜே சிவராமின் மறுபக்கங்கள் பற்றி அடக்கி வாசித்தார். ஜெயராஜ் எழுதிய நீண்ட தொடரில் புனைவுகளே அதிகம் என்பது போக அதில் அதிகளவான தரவுப்பிழைகள் இடம் பெற்றன.
அகிலன் செல்வம் கொலையைப் பற்றி எழுதுகிற ஜெயராஜ் “எனினும் விசாரணையின் போது சிவராம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதாக” புனைந்து பல்டி அடிக்கிறார். வேலிக்கு ஓணான் சாட்சி என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட புளட்டின் கங்காரு நீதிமன்றங்களில் ஜெயராஜுக்கு எப்போது உடன்பாடு வந்ததோ தெரியாது. தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத பேரா. சிவத்தம்பி, சிவராமை ” நீ எத்தகைய பெரிய மனிதன்” என்று எழுதினார்.
மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் நம்பகரமற்றவர் என்று மிகச் சரியாகவே மதிப்பிடப்பட்ட சிவராம் தனது குறுகிய கால வாழ்க்கையினாலும் அதனை உறுதிப்படுத்திச் சென்றிருக்கிறார்.
(தேசம் சஞ்சிகை இதழ் 25 (நவம்பர் – டிசம்பர் 2005))
»»  (மேலும்)

மே தினத்தை மறுக்கும் பௌத்த சிந்தனை முறை

உலக தொழிலாளர்களின் போராட்ட தினமான மே 1ம் திகதியை, இலங்கை அரசு வேறு ஒரு திகதிக்கு மாற்றி இருக்கின்றது. பௌத்த மதத்தின் கொண்டாட்டத்தை முன்னிறுத்திய இந்த திகதி மாற்றமானது, இலங்கையை பௌத்த நாடாக பிரகடனம் செய்திருக்கின்றது. இலங்கை மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்க பௌத்த சிந்தனை முறையையே, அரசும் - ஆளும் வர்க்கமும் கையாள்வது வெளிப்படையாக இதன் மூலம் அம்பலமாகி இருக்கின்றது.Résultat d’images pour may
இலங்கையில் ஆட்சியாளர்களும் - ஆளும் வர்க்கமும் காலகாலமாக பௌத்த – சிங்கள மக்களின் பெயரில், இன-மத ரீதியாக மக்களை ஒடுக்கிய வரலாற்றின் ஒரு அரசியல் நீட்சியாகவே, பௌத்த கொண்டாட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்திருக்கின்றது. இதன் மூலம் மதம் - இனம் கடந்த, போராடும் உழைக்கும் மக்களின் மேதின போராட்டத்தையும், அதன் பாரம்பரிய வர்க்க வரலாற்றையும் மறுதலித்திருக்கின்றது. அதேநேரம் மதரீதியாக உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி இருக்கின்றது.
உழைக்கும் வர்க்கத்தை அடிமைப்படுத்தி சுரண்ட உதவுகின்ற எல்லா இனவாத-மதவாத தேர்தல் கட்சிகளும், இதனை எதிர்க்கவில்லை. குறிப்பாக இன-மத ஒடுக்குமுறையை  முன்னிறுத்தி செயற்படும் தமிழ் - முஸ்லீம் இனவாத-மதவாத கட்சிகள், பௌத்த ஆதிக்கம் மூலம் முன்னிறுத்தும் நவீன ஒடுக்குமுறையை எதிர்க்காத பின்னணியில் இருப்பது, அக்கட்சிகளின் வர்க்கக் குணாம்சமே. 

இதுவரை காலமும் மே தினத்தை தங்கள் தினமாகக் காட்டி, நீலம் - பச்சை - சிவப்பு கொடிகளுடன் மே தினத்தை "வர்க்கம் கடந்த" முதலாளித்துவ வர்க்க கொண்டாட்டமாக்கிய முதலாளித்துவக் கட்சிகளும், மே தினத்தை பிறிதொரு தினத்துக்கு மாற்றி தொழிலாளர்களின் முதுகில் குத்தியதை வரவேற்றுள்ளது. இதன் மூலம் இதுவரை காலமும் போலியாக தம்மை முன்னிறுத்தி, தொழிலாளர்களை ஏமாற்றி வந்த முகமூடியை இழந்துள்ளனர்.
பௌத்த சிந்தனையை முன்னிறுத்திய இந்த தேர்தல் கட்சிகளில், போலி இடதுசாரிகட்சிகளும் அடங்கும். குறிப்பாக ஜே.வி.பி இரட்டை வேடத்துடன் தன்னை அம்பலமாக்கி இருக்கின்றது. வடக்கில் மே முதலாம் திகதி மே தினமாக கொண்டாடுகின்ற அதேநேரம், மக்களை பிரித்தாளும் அரசின் பௌத்த சிந்தனைக்கு அமைவாக தெற்கில் பௌத்த கொண்டாட்டத்தை கொண்டாடுவதற்கு ஏற்ப, மே தினத்தை அரசு முன்வைத்த திகதிக்கு கொண்டாடுகின்றது.
உழைக்கும் வர்க்கத்தை இனம் - மத ரீதியாக பிளக்கும் வண்ணம், ஜே.வி.பி இன-மத ரீதியாக இரு மேதினங்களை அறிவித்து இருக்கின்றது. அரசை விடவும் உழைக்கும் மக்களை இன-மத ரீதியாக பிரித்து வாக்குப் பெறுவதில், தாங்களே கெட்டிக்காரர்கள் என்பதை நிறுவ முனைந்திருக்கின்றது.
இதன் மூலம் உழைக்கும் மக்களைப் பிரித்தாளும் அரசின் பௌத்த சிந்தனைக்கு ஜே.வி.பியின் அணுகுமுறை பச்சைக் கொடி காட்டியிருப்பதுடன், பௌத்த வாக்குகளை பெறுதவற்கு ஏற்ப உழைக்கும் வர்க்கத்தைப் பிரித்து அதன் முதுகில் குத்தி இருக்கின்றது.  தன்னை உழைக்கும் வர்க்கத்தின் கட்சியாக காட்டிக் கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றும் முதலாளித்துவ பௌத்த கட்சி தான் ஜே.வி.பி என்பதை, தனது பிரித்தாளும் இரட்டை அணுகுமுறைகள்  மூலம் வெளிப்படுத்தி நிற்கின்றது.
இனம் - மதம் மூலம் மக்களை ஒடுக்குகின்ற முதலாளித்துவ தேர்தல் கட்சிகளின் வரிசையில் ஜே.வி.பி அணிதிரண்டு நிற்பதுடன்;, தமிழ் மக்களை ஏமாற்ற வடக்கில் தொழிலாளர் வர்க்க கோசம் போடுவதுமாக, உழைக்கும் வர்க்கத்தைப் பிரிக்கும் புதிய அத்தியாயத்தை ஜே.வி.பி தொடங்கி இருக்கின்றது.
இந்த தொழிலாளர் விரோத மற்றும் உழைக்கும் வர்க்கத்தை பிரிக்கும் முதலாளித்துவ பௌத்த சிந்தனை முறையை எதிர்த்து, புதிய ஜனநாயகக் கட்சியும், முன்னிலை சோசலிசக் கட்சியும் மே 1 திகதியை, தங்கள் தொழிலாளர் தினமாக அறிவித்திருக்கின்றது. அதேநேரம் மேதினத்தின் வரலாற்று முக்கியத்துவத்துடன், வர்க்க போராட்டத் தினமாக பிரகடனம்  செய்திருக்கின்றது. 
நாம் அனைவரும் மதம் - இனம் கடந்த புரட்சிகர கட்சிகளின் பின் அணிதிரள்வதன் மூலம், தொழிலாளர்களின் உரிமையை மட்டுமின்றி, பௌத்த சிந்தனைமுறையிலான ஒடுக்குமுறைக்கு எதிராக, உழைக்கும் வர்க்கத்தை பிரித்தாளுவதற்கு எதிராகவும் அணிதிரள்வதையே, போராட்ட வரலாறுகள் எம்மிடம் கோரி நிற்கின்றது.     

                     
»»  (மேலும்)

4/27/2018

குருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடு

29 ஞாயிறு மாலை 05.00 மணிக்கு கொழும்பு 13 இல் சட்டத்தரணி செய்யத் பஷீர் அவர்களின் குருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது. Résultat de recherche d'images pour "குருக்கள் மடத்துப் பையன்"
இது அனைவருக்குமானபொதுவான திறந்த அழைப்பு அல்ல. ஏனெனில் நிகழ்வில் 30 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் கலந்துகொள்வதாயின் தமது வருகையை தயவு செய்து உறுதிப்படுத்தவும்.
அவசியம் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவே வேண்டும் என்று அவாவுவோர் 0777617227 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

»»  (மேலும்)

அணு ஆயுதமற்ற கொரிய பிராந்தியம்- இரு தலைவர்கள் உறுதி

கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.கொரிய

சந்திப்புக்கு பின்னர் பேசிய வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், இப்பகுதியின் துரதிருஷ்டவசமான வரலாறு(கொரிய போர்) மீண்டும் திரும்பாது என்பதை உறுதிப்படுத்த நெருக்கமாக ஒத்துழைக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக கூறினார்.
''பின்னடைவு, துன்பம் மற்றும் ஏமாற்றம் இருக்கலாம்'' என கூறிய அவர், ''வலி இல்லாமல் ஒரு வெற்றி அடைய முடியாது'' எனவும் கூறினார்.
வட கொரிய அதிபரின் மனைவி ரி சொல்-ஜு மற்றும் தென் கொரிய அதிபரின் மனைவி கிம் ஜுங்-சூக்கும் சந்தித்து பேசிக்கொண்டனர். வட கொரியா மற்றும் தென் கொரியா நாட்டின் முதல் பெண்மணிகள் சந்திப்பது இதுவே முதல் முறை என தென் கொரிய ஊடகம் கூறுகிறது.
வட கொரியா மற்றும் தென் கொரிய தலைவர்களின் "தைரியத்தை" சீனா பாராட்டியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் நீண்ட கால ஸ்திரத்தன்மைக்கு இது ஒரு திருப்பு முனையாக இருக்கும் என சீன வெளியுறத்துறை கூறியுள்ளது.
 வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பின்னர், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் உறுதி பூண்டுள்ளனர்.

»»  (மேலும்)

4/26/2018

அபாயா இப்பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் ?


தமிழர் சிறுபான்மையாகத் திகழும் பாடசாலைகளிலோ அல்லது, நிறுவனங்களிலோ குறித்த இடத்தின் பெரும்பான்மையான இனத்தின் கட்டுப்பாட்டுக்களுக்கு உட்பட்டு, அடி பணிந்து நடப்போம் என்பதா ? அல்லது எவ்வித பகுத்தறிவுமல்லாமல் தான்தோன்றித் தனமாக, தனி நபர் பிரபல்யத்திற்காகவும், வாக்கு வங்கியினை விருத்தி செய்வதற்காகவும் வீதிக்கு இறங்கிச் சுய இன்பம் காணப் போகின்றீர்கள் என்பதா ?
Résultat de recherche d'images pour "abaya design"

உடை, உணவு என்பன ஒருவரின் உரிமையே தவிர, ஒருபோதும் திணிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாதவை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி/ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளது உடை தொடர்பாக எழுந்த சர்ச்சையினால் பலர் வீதிக்கு இறங்கிப் போராடியமையினைக் காணக் கூடியதாக இருந்தது. இதற்கான தலைமையினை அங்கீகரிக்கப்பட்ட இனவாதிகள் வழங்கியமை விசேட அம்சமாகும்.
இங்கு முக்கியமாக இரண்டு விடயங்கள் மேற்கோள் காட்டப்பட்டன. ஒன்று, குறித்த முஸ்லிம் ஆசிரியைகள் பாடசாலை சீருடை விதி முறைகளை மீறி ஆடை அணிந்து வந்தமையும்,இரண்டாவதாக, குறித்த ஆசிரியைகளின் கணவர்கள் பாடசாலை நிருவாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்தமையுமாகும்.
நான் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏராளமான பாடசாலைகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு ஏராளமான ஆசிரியர்கள், ஆசிரியைகளைச் சந்தித்திருக்கின்றேன். சில பாடசாலைகள் சீருடைகளை ஆசிரியைகளுக்கு வழங்குகின்றது, பலவற்றிற்கு அவ்வாறன வசதி வாய்ப்புகள் இல்லை.
இதில் என்ன விசித்திரமான விடயமென்றால், கற்பிப்பதற்கும், ஆசிரியர்களின் சீருடைகளுக்கும் எவ்வித நேரடிச் சம்பந்தமும் இல்லை என்பதே. இந்தச் சீருடைச் சட்டங்கள் குறிப்பாக பெண்களை மாத்திரம் மையப்படுத்தி உருவாக்கப்பட்டமை பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. என்னைப் பொறுத்த மட்டில், ஆசிரிய, ஆசிரியைகள் நேர்த்தியான, ஒழுக்கமான ஆடை அணிந்து வர வேண்டும், அவை மாணவர்களின் ஒழுக்கத்துடன் தொடர்புபட்டவை என்று இவ்வாறான பின்பற்றல்களை உருவாக்கியவர்கள் யோசித்திருக்கலாம்.
இதன் அடிப்படையில், அபாயா என்றழைக்கப்படும் குறித்த ஆடையானது ஒழுக்கமற்றது ? அத்துடன் இதனை ஒத்த ஆடை அணியும் வழமையானது வெறுமனே இஸ்லாமியர்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. அபாயா என்பதன் தமிழ்ப் பதம் போர்வை. இஸ்லாமியர்களுடன், யூதர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளட்ட பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான ஆடையினை அணியும் முறையினை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேற்குலகினைப் பொறுத்த வரையில் இதற்கான தடைகள் கூட பல்வேறு வழக்குகளின் பின்னர் நீக்கப்பட்டுள்ளன. சமுக விருத்தி என்பது ஒரு போதும் உரிமைகளைப் பறிப்பதல்ல. மாறாக உரிமைகளை வழங்குவதே.
இதுவே உலகில் நாம் நாளுக்கு நாள் கண்ணூடாகக் காணும் காட்சியாகும்.
நாம், தமிழர்களை எடுத்துக் கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் பல இலட்சம் தமிழர்கள் உலகளாவிய ரீதியில் பரந்து வாழ்கின்றனர். புலம்பெயர் நாடுகளில் எமது கலாச்சாரத்தினை வளர்க்கின்றீர்கள். இராஜ கோபுரம், பால் குட பவனி, இரதோற்சவம், பறவைக் காவடி என்பன இன்று சர்வ சாதாரணமாகி விட்டன. இதற்கு எதிராக அங்குள்ளவர்கள் பாரிய தடைகளை விதிப்பதில்லை. மாறாக, பல்வகைமையினை விரும்புகின்றனர். கனடாவிலோ, இங்கிலாந்திலோ, டுபாயிலோ அவ்வாறான விடயங்களுக்குத் தடை ஏற்பட்டிருப்பின் எவ்வாறு இருந்திருக்கும் ? நீங்கள் இன்று அபாயா அணிந்து வருவதை ஏற்க மறுக்கின்றீர்கள் என்றால், அங்குள்ள தமிழர்களினதும், இந்துக்களினதும் புதிதாக உருவாக்கப்பட்ட அடையாளங்கள் தகர்க்கப்பட வேண்டும் என்பதனையா மறைமுகமாகச் சொல்ல வருகின்றிர்கள் ?
ஏன் அவ்வளவு தூரம் செல்கின்றோம். சற்று வடக்குக் கிழக்கிற்கு வெளியே செல்வோம். அங்கு எத்தனையோ தமிழர் பெரும்பான்மையாக அல்லாத பாடசாலைகளில் தமிழ் ஆசிரியைகள் கல்வி கற்கின்றனர் ? ஒரு வேளை சட்டங்களிலும், வழமைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, சிங்களப் பள்ளிக்கூடங்களில் சிங்கள முறையில் சேலை உடுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டால், அங்குள்ள தமிழ் ஆசிரியைகளின் நிலை என்ன ? அல்லது நாளை முதல் அனைத்து இஸ்லாமியப் பாடசாலைகளிலும், இஸ்லாமியர் அல்லாத ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக அபாயா மாத்திரமே அணிய வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டால் இதற்கான பதில் என்ன ?
இங்கு வெறுமனே உங்களது கீழ்த்தரமான காழ்ப்புணர்வே வெளிக்காட்டப்பட்டது. வேறொன்றும் இல்லை. ஒரு மக்கள் ஆர்ப்பாட்டத்தில், ஒரு சமூகம் பேசும் மொழியினைக் கொச்சைப் படுத்துவதும், இனவாதத்தைத் தூண்டும் வாசகங்களைத் தாங்கியதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
இலங்கையில் பல்வேறு பிராந்தியங்களில் வாழும் தமிழர்கள் கூடத் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத பேச்சு வழக்கினைக் கொண்டமையும், நான் இன்றும் வியக்கும் சிறந்த அறிவிப்பாளரான பி.எச் அப்துல் ஹமிட் அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதையும் இங்கு வெளிப்படையாகக் கூறியே ஆக வேண்டும்.
குறித்த ஆசிரியைகளின் சீருடை விவகாரம் தொடர்பாக எழுத்துமூலமாக அதிபரால் வழங்கப்பட்ட கடிதங்கள் ஏதும் உள்ளனவா ? அவ்வாறு இல்லாத பட்சத்தில், அதிபரால் கல்வித் திணைக்களத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான முறைப்பாடுகள் ஏதும் உள்ளனவா ? இவற்றினை நிச்சயம் பரிசிலிக்க வேண்டும்.
இரண்டாவது விடயமான, கணவர்களின் எச்சரிக்கை விடயமானது நிச்சயம் முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியவை. நிச்சயமாக யாராலும் அவ்வாறான் எச்சரிக்கைகளை விடுக்க முடியாது. இது தொடர்பாக அதிபரோ, அல்லது நிருவாகத்தில் பங்கெடுக்கும் யார் சரி முறைப்பாடுகளை மேற்கொண்டனரா ? அவ்வாறு இல்லாவிடில் ஏன் மேற்கொள்ளவில்லை ?
ஒன்றைப் புரிந்து கொள்வோம். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒரே மொழியினைப் பேசும் இரு இனங்கள். நாம் மொழி ரீதியாக விரும்பியோ, விரும்பாமலோ, ஒன்று பட்டிருக்கின்றோம். இலங்கை பூராகவும் ஒரே பாடத்திட்டத்தினைப் பின்பற்றுகின்றோம். இன்று தமிழன் என்று வீதிக்கிறங்கி இனவாதத்தினை விதைப்பவர்கள் சிலரின் காலடி கூடப் பட்டிருக்காத தென்னிலங்கையில் முஸ்லிம் சமூகம் அதி யுத்த காலத்திலும் கூட தமிழை வாழ வைத்தனர், வைத்துக்கொண்டு இருக்கின்றனர். எந்தவொரு தமிழனும் வாழாத எத்தனையோ கிராமசேவகர் பிரிவுகளில் நூறு வீதமான தமிழ் மொழிப் பாடசாலைகள் இயங்குகின்றன. முஸ்லிம்கள் அதனை விட்டுக்கொடுக்கத் தயாருமில்லை.
இங்குள்ள முக்கிய விடயம், தமிழ் உணர்வோ அல்லது, இனப்பற்றோ அல்ல. மாறாகத் தேவையற்ற இந்துத்துவம் ஊடறுக்கின்றது. தாயக மண்ணில் இந்திய ராணுவம் செய்த அட்டூளியங்களை நாம் ஒரு போதும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. இன்று அவர்களது தேவை ஒரு தமிழ், முஸ்லிம் அல்லது சிங்கள முஸ்லிம் கலவரம். இது பல்வேறு வழிகளில் மக்களைச் சென்றடைகின்றது. ஆகவே நாம் இவ்விடயம் தொடர்பாகத் தெளிவடைய வேண்டும். இன்று இஸ்லாம் விரோதப் போக்கினைக் கொண்ட இந்துக்களால் மத்திய கிழக்கு நாடுகளில் உங்களது சகோதர, சகோதரிகளை வேலைக்கு அடிமைகளாக அனுப்புவதற்கு எதிராக என்ன வேலைத்திட்டங்கள் உள்ளன ? அது போன்று தமிழருக்கு எதிரானப் போக்கினைக் கொண்ட முஸ்லிம்களும், தமிழ் மொழியினைக் கை விடத் தயாரில்லை என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.
ஆகவே இது ஒரு தற்காலிக நிலைமை. இதனை முற்போக்குச் சக்திகளால் மாத்திரமே மாற்ற முடியும். இவ்வாறு அன்றாடம் தொழில் செய்து, தமது சொந்த உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுவதும் ஆட்சியாளனுக்குக் கிடைத்த பெரும் வெற்றியே. நீங்கள் இன்று இதற்காகப் பிளவுபட்டதனால், நாளை ஓரு போதும் உங்களது தொழில் ரீதியான உரிமைகளுக்காக ஒன்றுபடக் கூடாது என்பது அவர்களின் அவா. ஆகவே இங்கு தோல்வி அடைவது சாதாரண மக்களே.
சற்று சிந்திப்போம். இலங்கையில் தமிழ் முஸ்லிம் விரிசலை இஸ்ரேலின் மொசாட் முன்னின்று அரங்கேற்றியது. தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம் பெயர்களிலான புலனாய்வு உத்தியோகத்தர்களும், முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ் பெயரிலான புலனாய்வு உத்தியோகத்தர்களும் அனுப்பப் பட்டனர். இதனால் இடம்பெற்ற தாக்கம் கொஞ்சமல்ல. இன்று புலனாய்வுக்குப் பதிலாக FAKE ACCOUNT கள் அதே வடிவில் உலா வருகின்றன. மீண்டும் விரிசல்களை உருவாக்குகின்றன.
கயவர்களின் கோஷங்களை விட, நல்லவர்களின் அமைதி பாதகமானது. இனியும் நல்லவர்கள் அமைதி காக்க வேண்டாம். முன்வாருங்கள். உலகில் எங்கும், யாரும், எந்நேரமும் சென்று தலை நிமிர்ந்து வாழக்கூடியதோர் உலகினை உருவாக்குவோம்.

நன்றி தோழர் *அருண் ஹேமச்சந்திரா 


»»  (மேலும்)