'பிரித்தானியாவில் கடமையாற்றிய கடைசி தமிழ் இராஜதந்திரி திரு.ஏ.தெட்சணாமூர்த்தி' அவர்கள் பற்றிச் சில வார்த்தைகள்.
தமிழ்ப் பெண்களின் போராட்ட ஆளுமையைக் கௌரவம் செய்த இராஜதந்திரி.
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-14.3.18
'இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்த வன்முறைகள், தமிழ் மக்களின் அமைதிக்கும் ஜனநாயக வாழ்க்கை முறைக்கும் எதிரானவை.சிங்கள பேரினவாதம் தமிழ்ச் சிறுபான்மை மக்களைத் தன் ஆயுத வன்முறையால் குரூரமாக நடத்துவது மனித இனம் வெட்கப் படவேண்டிய விடயம். இலங்கையின் காலனித்து சக்தியாக இருந்த பிரித்தானியா இந்த விடயத்தில் கவனம் எடுக்கவேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து, எனது தலைமையில் உண்டாக்கப் பட்ட, பிரித்தானிய தமிழ் மகளீர் அமைப்பு 1982ம் இறுதிக்கால கட்டம் தொடக்கம் போராடத் தொடங்கியது. இந்தப் பெண்கள் அமைப்புதான் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப் பட்ட முதலாவது இலங்கைத் தமிழர்களுக்கான மனித உரிமை அமைப்பாகும்.அக்கால கட்டத்தில் இலங்கையின் இராச தூதுவராக பிரித்தானியாவில் கடமையாற்றியர் திரு. தெட்சணாமூர்த்தி அவர்கள்.
.
வீதி இறங்கிய எங்களது பல போராட்டங்கள் இலங்கை தூதுவராலயத்தைக்குறி வைத்து நடத்தப் பட்டன. பிரித்தானிய பெரிய.சிறிய ஊடகங்கள் மட்டுமல்லாது,பெண்ணிய, இடதுசாரி ஊடகங்கள், மனித உரிமை ஸ்தாபனங்கள், பெண்கள் அமைப்புக்கள், சிறுபான்மையின மக்களின் அமைப்புக்கள்,எனப் பன்முக அமைப்புக்கள் இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடக்கும் கொடுமைகளைக் கண்டித்தன.
இலங்கை நிலமை குறித்து, ப.pபி.சி டி.வியில் எனது பேச்சுக்கள் இடம் பெற்றன.பிரித்தானியப் பொதுமக்கள்; பெரும் பான்மையினர் தங்களின் ஆதரவை எங்களின் (பெண்களின்) @போராட்டத்திற்கு வழங்கினர்.
தொழிற்கட்சி எங்கள் போராட்டத்தை முழுக்க முழுக்க ஆதரித்தது.திரு.ஜெரமி கோர்பின்,திரு,பேர்னி க்ராண்ட்,திருமதி ஷெர்லி வில்லியம்,திருமதி கிளாயா ஷோர்ட், போன்ற பாராளுமன்றவாதிகள்; தமிழ் அகதிகளாகப் பிரித்தானியுவுக்கு வருபவர்களுக்கு ஆதரவு தந்தார்கள்.
இலங்கையிற் தொடரும் தமிழர்களுக்கு எதிரான கொடுமையை பிரித்தானிய முற்போக்காளர்களுக்கு விளக்க,அக்கால கட்டத்தில் தொழிற்கட்சியின் முக்கிய பிரமுகரான திரு டோனி பென் தலைமையில் லண்டனின் மத்தியிலுள்ள் கொன்வேய் ஹாலில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.
பிரித்தானிய பாராளுமன்றத்தில், இலங்கைத் தமிழர்களின் நிலைபற்றிய கேள்விகளும் விவாதங்களும் அடிக்கடி நடந்தன.அன்று ஆடசியிலிருந்த திருமதி மார்கரெட் தச்சர் அவர்களின் அரசு இலங்கையில் பதவியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆயுத உதவி,பொருளாதார உதவிகள் செய்து கொண்டிருந்தன. லண்டன் வாழ் தமிழ்ப் பெண்கள் அவற்றையெல்லாம் எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தினோம்.இந்த போராட்டங்கள் லண்டனிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தை நிலை குலையப் பண்ணியது.
அக்கால கட்டத்தில் லண்டனிலுள்ள இலங்கைத் தூதுவரலாயத்தின் இராஜதந்திரியாக இருந்தவர் ஒரு தமிழர். இலங்கையின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர். படிப்பிலும் பண்பிலும் மற்றவர்களிடம் பெரிய மதிப்பை;ப் பெற்றிருந்தவர் என்று கேள்விப் பட்டிருந்தோம். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியிற் படித்து,றோயல் கல்லூரியில் ஆசிரியராகவிருப்பது என்பது அக்கால கட்டத்தில் ஒரு சிறந்த கல்விமகனாற்தான் செய்யமுடிந்த விடயம்.
1983ம் ஆண்டு கலவரத்தின்பின் எங்கள் போராட்டங்கள் உச்ச கட்டங்களைக் கண்டன.பிரித்தானியா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமையை விளக்கும் பேச்சாளராக என்னை அழைத்தார்கள்.ஐரோப்பா சார்ந்த மனித உரிமை ஸ்தாபனங்களிற் சில,இடதுசாரி ஸ்தாபனங்கள் சில எங்கள் போராட்டத்தை ஆதரித்தன.
இந்த ஐரோப்பிய நாடுகள் உள்ளடக்கிய தமிழ்ப் பெண்களின் போராட்டங்கள் இலங்கை அரசைத் தர்மசங்கடத்திலாழ்த்தியது. லண்டனிலுள்ள தழிழர்கள், 'எங்களுக்குக் கொடுமை செய்யும் இலங்கை அரசின் பிரதி நிதியாக ஒரு தமிழன் (மட்டக்களப்புத் தமிழன்!) லண்டனிலுள்ள இலங்கை ஸ்தானிகராலயத்தில் பணிபுரிவதைக் கட்டோடு வெறுத்தார்கள். பிரித்தானியத் தமிழ்ப் பெண்கள் தங்கள் போராட்டத்தால் இலங்கை அரசை 'வைது' கொட்;டும் கால கட்டத்தில், ஒரு 'தமிழன்' இலங்கை ஸ்தானிகராலயத்தில் பெரிய பதவியை வகிப்பதை இனவாதச் சிங்களவர்களும் எதிர்த்தார்கள்.
அந்த மிகவும் சிக்கலான் காலகட்டத்தில்,இலங்கை ஸ்தானிகராலயத்தில் நடக்கவிருக்கும் ஒரு வைபவத்திற்கு எனக்கு அழைப்பிதழ் வந்தது.
எங்களுக்கு அந்த அழைப்பிதழ் மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. ஏதிரியான சிங்கத்தின்; குகைக்குள் நுழைவதா?
எங்களுக்கு அந்த அழைப்பிதழ் மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. ஏதிரியான சிங்கத்தின்; குகைக்குள் நுழைவதா?
பல விவாதங்களின்பின் அந்த வைபவத்திற்கு நான் போகவேண்டும்,அங்குபோய் எங்கள் போராட்டத்தைப் பற்றி அவர்களுக்குச் சொல்லவேண்டும் என்ற லண்டன தமிழ் மகளீர் அமைப்பினர் அனுமதி தந்தார்கள்.
அங்கு போனதும்,அமைதியும்,முகத்தில் அறிவுச் சுடரும் பரந்த இனிமையான புன்னகையுடன் இலங்கை இராஜதந்தியான திரு தெட்சணாமூர்த்தி அவர்கள் என்னை வரவேற்றார்.
வழமையான அறிமுகத்தின்பின்,'நீங்கள் இங்கு வந்ததையிட்டுச் சந்தோசப்படுகிறேன்' என்று சொன்னார்.'
அவரின் சந்தோசம் எனக்குள் பல கேள்விகளை எழுப்பின. அவர் இலங்கைத் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் ஒரு அரசைப் பிரதிநிதிப்படுத்தும் இராஜதந்திரி. நான் அவர் சார்ந்திருக்கும் அரசின் கொடுமைகயை எதிர்த்துப் போராட்டம் நடத்துபவள்.
ஓயாமல் எங்கள் போராட்டங்கள் பற்றியும் அதை விளக்கும் புகைப் படங்களும் பிரித்தானியப் பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கும்போது என்னவென்று என்னைச் சந்திப்பதில் அவருக்குச் சந்தோசம் வரும்?
அவரின் சந்தோசம் எனக்குள் பல கேள்விகளை எழுப்பின. அவர் இலங்கைத் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் ஒரு அரசைப் பிரதிநிதிப்படுத்தும் இராஜதந்திரி. நான் அவர் சார்ந்திருக்கும் அரசின் கொடுமைகயை எதிர்த்துப் போராட்டம் நடத்துபவள்.
ஓயாமல் எங்கள் போராட்டங்கள் பற்றியும் அதை விளக்கும் புகைப் படங்களும் பிரித்தானியப் பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கும்போது என்னவென்று என்னைச் சந்திப்பதில் அவருக்குச் சந்தோசம் வரும்?
தமிழ்ப் பெண்களின் போராட்டத்தை மதித்து என்னை அவ்விடம் அழைத்த அவரிடம் எனக்கு மதிப்பு வந்தது. ' நீங்கள் பணிபுரியும் உங்கள் அரசின் கொடுமைகளை உலகத்திற்குச் சொல்ல உங்கள் ஸ்தானிகராலயத்திற்கு முன் அடிக்கடி போராட்டம் நடத்தும் உங்கள் எதிரியான என்னை ஏன் உங்கள் ஸ்தானிகராலயத்துக்குள் நுழைய அழைப்பிதழ் அனுப்பினீர்கள்'? என்று அவரை நேரடியாகக் கேடடேன்.
என்னை ஒரு கணம் உற்றப் பார்த்து விட்டு, அவர்கண்களை என் முகத்திற பதித்தபடி,' ஒரு அரசை எதிர்த்துப் போரட்டம் நடத்தி உலக கவனத்தை இலங்கைத் தமிழர்பால் திருப்பிய கிழக்கிலங்கைப் பெண்மணியை நேரிற் சந்திக்கவேண்டும்போலிருந்தது' என்றார்.
அவரின் நேர்மையும், இலங்கைத தமிழ்மக்களில் அவருக்கிருந்த அனுதாபமும்,ஆனால் உத்தியோக ரீதியில் தமிழர்களின் எதிரிகளுடன் பணிபுரியும் தர்மசங்டமும் அவர் சொல்லாத வார்த்தைகளிருந்து புரிந்துகொண்டேன்.
அவரின் தர்ம உணர்வையுணர்ந்து எனக்கு சிலிர்பு வந்தது.
அடுத்த வருடம் அவர் தனது 'இராஜதந்திரி' பதவியிலிருந்து இராஜனாமா செய்து கொண்டார் என்ற கேள்விப் பட்டேன்.
எனது சந்திப்பு அவர் மனத்தையுலுக்கியதா அல்லது சிங்கள இனவாதிகள் அவரை இராஜனாமா செய்யப் பண்ணினார்களா? அல்லது ஒரு தமிழன் இராஜதந்திரியாவிருபதை விரும்பாத லண்டன தமிழர்கள் அவரைப் பயமுறுத்தினார்களா?
பதில்கள் தெரியாத பல கேள்விகள் அக்கால கட்டத்தில் என் மனத்தைக் குடைந்துகொண்டிருந்தன.
என்னவாகவிருந்தாலும் அவர் ஒரு மனிதாபமானமுள்ள,அறிவும் பண்புமுள்ள ஒரு திறமையான 'தமிழ்' இராஜதந்திரி என்பதை நான் முழுக்க உணர்வேன்.அவரைப் பெற்றெடுத்த ஆரையம்பதி மிகவும் அதிர்ஷ்டம் செய்த பூமி என்று வாழ்த்துகிறேன்.
என்னவாகவிருந்தாலும் அவர் ஒரு மனிதாபமானமுள்ள,அறிவும் பண்புமுள்ள ஒரு திறமையான 'தமிழ்' இராஜதந்திரி என்பதை நான் முழுக்க உணர்வேன்.அவரைப் பெற்றெடுத்த ஆரையம்பதி மிகவும் அதிர்ஷ்டம் செய்த பூமி என்று வாழ்த்துகிறேன்.
0 commentaires :
Post a Comment